இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழப்பு!

2shares
Image

போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இந்த நிலை தொடர்ந்தால் நேரடி சாட்சிகள் முழுமையாக அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (15.05.2018) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பதிவுகள் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தனது கணவனை ஒப்படைத்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக தேடி அலையும் சுகந்தினி தெய்வேந்திரம் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் யார் நடத்துவது என்பது தொடர்பில் எழுந்திருந்த சர்ச்சை தொடர்பிலும் தனது கணவரை ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒப்படைத்து கடந்த ஒன்பது ஆண்டுகலாக தேடி அலையும் சுகந்தினி தெய்வேந்திரம் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து முள்ளிவாய்க்கால் கொடூரத்தை நினைவுகூறவோ நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளவோ முன்வராத தரப்பினர் இம்முறை முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் நினைவேந்தலுக்காக போட்டிபோடுவது வேடிக்கையாக இருப்பதாகவும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதியான சுகந்தினி தெய்வேந்திரம் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!