வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் விஜயம்!

2shares
Image

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறான பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து கைதிகளிற்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்றைய தினம் உணவுதவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜாவும் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

இதன் போது கைதிகளுடனும் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்தாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே தங்க வைக்க முடியும். சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை காரணமாக இட வசதியின்மை ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அது நிறுத்தப்பட்டதாக சிறைக்கைதிகள் தெரிவித்திருந்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Image0

Image1

Image2

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!