வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஓர் நற்செய்தி!

373shares

ஸ்ரீ லங்காவில் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1.38 மில்லியன் நபர்களுக்கு அதன் பயன்கள் கிடைத்துவருகின்றன. இருப்பினும், இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும், தற்பொழுது சமுர்த்தி பயன்கள் கிடைக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த பயன்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் பதிவாகியுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் சிபார்சுடன் சமுர்த்தி பயன்கள் கிடைக்கவேண்டிய மேலும் குறைந்த வருமானத்தை கொண்ட 1 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத்தை விரிவுபடுத்துவதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி. ஹரிசன் ஆவணங்கள் சமர்ப்பித்திருந்தார். அந்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ராஜபக்ச குடும்பத்தினருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர்!

ராஜபக்ச குடும்பத்தினருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள அமைச்சர்!

யாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்!

யாழ்ப்பாண ஆலயம் ஒன்றில் அதிகாலை நிகழ்ந்த பாதகம்!

தமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்

தமிழின அழிப்பு - கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர் நாயகம்