வரலாற்றில் மிகப் பிரமாண்டமான ஒரு படை நடவடிக்கை: Operation Barbarossa-

436shares

1941ம் ஆண்டு ஜுன் மாதம் 22 ம் திகதி. அதிகாலை 3 மணி...

நாசி ஜேர்மனியின் யுத்த விமானங்கள் சோவியத் யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன.

ஆயிரக்கணக்கான ஜேர்மன் விமானங்கள் சோவியத்தின் பல பகுதிகளில் ஏக காலத்தில் குண்டுகளை வீசி அதிர வைத்துக்கொண்டிருக்க, ஆயிரக்கணக்கான யுத்தத்தாங்கிகள் சகிதம் ஜேமனியின் காலாட்படை சோவியத்தின் எல்லைகளுக்குள் முன்னேறின..

இலட்சக்கணக்கான ஜேர்மனிய படையினர் நவீன போராயுதங்கள் சகிதம் சோவியத்திற்குள் கால்வைத்தார்கள் - சோவியத்தை முற்றாகவே அழித்துவிடும் வைராக்கியத்துடன்.

சோவியத் ஒன்றியம் மீதான ஜேர்மனியின் அந்த இராணுவ நடவடிக்கைக்கு ஹிட்லர் சூட்டியிருந்த பெயர் -'Operation Barbarossa'.

உலக வரலாற்றில் அப்படி ஒரு பிரமாண்டமான படை நடவடிக்கை அதற்கு முன்னர் நடைபெறவில்லை.

இற்றை வரைக்கும் Operation Barbarossa போன்ற ஒரு இராணுவ நடவடிக்கை உலக வரலாற்றில் பதிவாகவில்லை என்றே இராணுவ நோக்கர்கள் கூறுகின்றார்கள்.

அந்த அளவிற்கு மிகப் பெரியதொரு படை நடவடிக்கை அது.Operation Barbarossa படை நடவடிக்கையின் சில பக்கங்களை பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க
`