இலங்கைக்கடலில் எண்ணெய் இக்கின்றதா?- முடிந்தது கதை!! எண்ணெய் வடிவில் இலங்கைக்கு வரும் ஆபத்து!!

396shares

திருகோணமலையின் கடல் பகுதியைமையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பனாமா நாட்டுக்கொடியுடன் இயங்கும் BGP Pioneerஎன்ற ஆய்வுக்கப்பல் கடந்தசனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால்அமைந்துள்ள JS5மற்றும் JS6ஆகிய வலயங்களில்ஐயாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்குப்பயணம் செய்து, இந்தக் கப்பல் கடலடியில் உள்ள நிலஅதிர்வு அலைகளைஆராயவுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவளம் குறித்துஆராய்வதற்காக Schlumbergerஎன்ற பாரியஎண்ணெய் வயல்சேவை நிறுவனத்தின்கிளை நிறுவனமானEastern Echo உடன் மேமாதம் இலங்கைஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது.

இலங்கையின்பெற்றோலிய வள அபிவிருத்திஅமைச்சர் அர்சுனாரணதுங்க மேமாதம் 30 ஆம்திகதி இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.

ஈழத்தமிழர்களின் கடற் பிரதேசங்கள்மற்றும் நிலங்களைஇந்தியச் சாா்புநிலை நாடுகளானஅமெரிக்கா. ஜப்பான், ஆகியநாடுகளிடம் மைத்திரி- ரணில் அரசாங்கம் கையளித்து வருகின்றது-- அவதானிகள்.

கிழக்கின் கடலில் எண்ணெய்வள ஆய்வுமட்டுமல்ல, இராணுவ ரீதியானகடற்படை உறவையும் அமெரிக்கா பலப்படுத்தியிருக்கிறதென்பதையும்இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்திஅமைச்சின் உயர் அதிகாரிஒருவர் கூறியுள்ளார்.

Schlumbergerஎன்ற பாரியஎண்ணெய் வயல்சேவை இந்த நிறுவனம், தரவுகளைத் திரட்டி, அவற்றைபப்பல்வேறு நிறுவனங்களுக்குவிற்பனை செய்யவுள்ளது.அதற்காக இருபரிமான மற்றும்முப்பரிமான தரவுகளை அதுதிரட்டவுள்ளது.

இந்தஆய்வுக்கு Eastern Echo DMCC நிறுவனம் ஐம்பதுமில்லியன் டொலரை முதலிடுமெனவும்,பல்வேறு முதலீட்டாளர்களுக்குதரவுகளை விற்பனைசெய்து அந்தப்பணத்தை மீளப்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பனாமாநாட்டுக் கொடியுடன்இயங்கும் டீபுPPழைநெநச என்ற ஆய்வுக்கப்பல், சீனத்துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர்துறை முகத்திற்குச்சென்று, பின்னர்அங்கிருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்தவிற்பனை நடவடிக்கைகள்இலங்கை அரசுடன்கடந்த மேமாதம் 30 ஆம்திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்தநிறுவனம் கூறியுள்ளது.

2016 ஆம் ஆண்டுகிழக்கு கடலில்எண்ணெய வளஆய்வுகளை மேற்கொள்ளும்முயற்சியாக, Total என்றபிரெஞ்சு நிறுவனத்துடன்இலங்கை அரசாங்கம்உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தது.

ஆனாலும்பல்வேறு வெளிச்சக்திகளின்அழுத்தங்கள் மற்றும் இலங்கைஅரசு ஆய்வுமுடிவடைந்த பின்னர் வேறுநாடுகளிடம் கையளிக்கலாம் என்ற ஒருவகையான அச்சத்தின்காரணமாக அந்தஉடன்படிக்கையை பிரான்ஸ் கைவிட்டது.

இந்தநிலையில் அமெரிக்கநிறுவனத்தின் துணை நிறுவனமானEastern EchoDMCC என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Eastern Echoஎன்ற நிறுவனம்மத்தியகிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

BGP Pioneer என்றஆய்வுக் கப்பல்சீன அரசின்உடமையாகவுள்ள வியாபார நிறுவனம்ஒன்றிற்குச் சொந்தமானது. கடல் பிரதேசங்களில்எண்ணெய் வளம்இருக்கின்றதா என்பதை ஆய்வுசெய்வதற்கான நவீன வசதிகள்இந்தக் கப்பலில்உள்ளன.

இதனால்இஇந்தக் கப்பலைமத்திய கிழக்கில்இருந்து தென்அமெரிக்கா வரை, அமெரிக்காவாடகைக்கு அமர்த்துவது வழமை. அந்தஅடிப்படையில் டுபாய் நிறுவனம்தான் இந்தக்கப்பலை வாடகைக்குஎடுத்துள்ளது.

இலங்கைக்கிழக்குக் கரை உள்ளிட்டகடற்பகுதிகளில் எண்ணெய் வயல்ஆய்வு முடிவடைந்தபின்னர் இந்தநிறுவனம் இலங்கைஅரசுக்கு அதனைகையளிக்கும்.

ஆனாலும்இலங்கை அரசுஇதனை வேறுநாடுகளுக்கு வழங்கும் என்றசந்தேகம் உள்ளதால்அவ்வாறு விற்பனைசெய்ய முடியாதவாறுஅமெரிக்கா காய்களை நகர்த்திவருவதாக ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

குறிப்பாகதிருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கப்பல் வந்துஇலங்கைக் கடற்படையினருக்குபயிற்சி மற்றும்கூட்டு ஒத்துழைப்புகள்மூலம்இ எண்ணெய்வளங்களை வேறுநாடுகளுக்கு விற்பனை செய்யமுடியாதவாறான அணுகுமுறைகளை அமெரிக்கா தற்போதிருந்தே ஆரம்்பித்துள்ளது.

அத்துடன்ஜப்பான் கடற்படையின்ஒத்துழைப்புகள் மூலமாகவும் இலங்கைக்கு அமெரிக்கா கடிவாளமிட்டுள்ளது.

இந்தஆய்வு நிறைவடைந்தபின்னர் வேண்டுமானால்இந்தியாவுக்கு இலங்கை அரசுவிற்பனை செய்யலாம்.அதனை அமெரிக்கா,ஜப்பான் ஆகியநாடுகள் தடுக்காது.ஆனால், சீனஅரசுக்கு இலங்கையால்விற்பனை செய்யவேமுடியாது.

அதேவேளை,தமிழர் தாயகம்வடமாகாணம் மன்னாரில் எண்ணெய் வளம்இருப்பதாகக் கூறியே 2005 ஆம்ஆண்டு அமெரிக்காவின்வொஷிங்டன் நகரில் உள்ளஇலங்கைத் தூதரகம்இதற்கான மறைமுகத்தொடர்புகளை ஆரம்பித்திருந்தது. அதன் மூலம்அமெரிக்காவுக்கு தமிழர் தாயககடற் பிரதேசங்கள்மீதான விருப்பங்கள்மேலும் துாண்டிவிடப்பட்டன.

அதனடிப்படையில்JS5 மற்றும்JS6 முழுவதையும்கையளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போதுமுல்லைத்தீவு கொக்கிளாய் இருந்து கிழக்குவரையான ஈழக்கடல்பிரதேசங்களில் சிங்கள மீனவர்களைகடலட்டை பிடிப்பதற்குஅனுமதியளித்து, அதன் மூலம்தமிழ் சிங்களமீ்னவர்களை மோதவிட்டு, இரு இனங்களின்மீனவர்களையும் வெளிநாடுகளுக்கு அடிமையாக்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடற் பிரதேசத்தைக்கையளிக்கும் நோக்கமே மைத்திரி-ரணில் அரசாங்கத்துக்குஉள்ளது.

ஆகவே,இந்த நடைமுறைகளின்மூலம் ஈழத்தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தீவின்முழு இறைமைக்கும்ஆபத்து ஏற்படும்.

இவ்வாறானஅணுகுமுறைகள் என்பது 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால்சம்பவம் வரைஇலங்கை அரசுக்குசாதகமாக அமையவில்லை.

ஆனால்,2009 ஆம் ஆண்டு மேமாதத்தின் பின்னரான சூலில்இலங்கை அரசின்மேற்படி அணுகுமுறைகளுக்குசாதகமான ஒருநிலையை உருவாக்கியுள்ளதாகஅவதானிகள் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து கிழக்குவரையான ஈழத்தமிழர்களின் கடற் பகுதியைஅமெரிக்காவுக்கு தாரை வார்க்கின்றதா இலங்கை ஒற்றையாட்சிஅரசு என்றதலைப்பில் தமிழ் ஊடகங்கள்தொடர்நது செய்திவெளியிட்டு வருகின்றதும் இங்கு நோக்கத்தக்கது.

இதேவேளை,அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவுஅதிகாரிகள் குழு ஒன்றுஇலங்கைக் கடற்படைக்குகடந்த மாதம்திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக்கடற்படையின் பிரதான முகாமில்பயிற்சியளித்திருந்தது.

அதனையடுத்துஅமெரிக்காவின் USS Anchorage கப்பல் ஒன்றுதிருகோணமலைத் துறைமுகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமைவருகை தந்துள்ளது.சுமாா் தொள்ளாயிரம்அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளும்கப்பலில் வந்திருந்தனர்.

ஜப்பான்பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரிஒனோடெரா (Itsunori Onodera) கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர் இலங்கைக்குவருகை தந்துஇஅம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைத்துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஜப்பான் உதவியின் கீழ்பதினொரு மில்லியன்டொலருக்கும் அதிகமான பெறுமதியுடையஇரண்டு ரோந்துசேவை கப்பல்கள் இலங்கை கடல்பாதுகாப்பு திணைக்களத்திடம் ஜப்பான் அமைச்சர்கஸுயுகி நகானே(KazuyukiNakane) சென்றபுதன்கிழமை கையளித்திருந்தார்.

ஈழத்தமிழர்களின் கடற் பிரதேசங்கள்மற்றும் நிலங்களைஇந்தியச் சாா்புநிலை நாடுகளானஅமெரிக்கா. ஜப்பான், ஆகியநாடுகளிடம் மைத்திரி- ரணில்அரசாங்கம் கையளித்து வருவதாக அவதானிகள்தெரிவிக்கின்றனர்.

தமிழர்தாயகம் என்றகோட்பாட்டை உடைக்கும் நோக்கிலும் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்தும்வகையிலும் துாரநோக்குச் சிந்தனையுடன் இலங்கை அரசுஎன்ற கட்டமைப்புசெயற்படுவதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

ஈழத்தமிழர் விடயத்தில்இலங்கை முப்படையினரைஉள்ளடக்கியஇ இலங்கை அரசுஎன்ற கட்டமைப்பின்இந்தப் பொறிமுறையைப்புரிந்து கொண்டுஇமாற்று அரசியல்செயன்முறைகளை வகுக்கக் கூடியதாகதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்அரசியல் கட்சிகளின்நடவடிக்கைகள் அமையவில்லை என அவதானிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகமொத்தத்தில் ஒரு விடயம்தெளிவாகத் தெரிகின்றது. எண்ணெய் வளத்தைமையப்படுத்தி இலங்கையை நோக்கிஒரு பாரியஆபத்து சுழ்ந்துகொண்டிருக்கின்றது.

அந்தஆபத்து இலங்கைக்குமாத்திரமல்ல, தமிழர் தாயகத்தின்இருப்புக்கும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: A. நிக்ஸன்

இதையும் தவறாமல் படிங்க