கஷோக்கியின் திகில் வட்டம் !விமானத்தில் கொலையாளிகள் வந்தார்களா?

  • Prem
  • October 10, 2018
83shares

இது ஒரு அரசியல் திகில் கதை! ஆனால் கடந்த 2 ஆந்திகதி இடம்பெற்றதாக கருதப்படும் இந்த திகில் துன்பியலின் முடிவு தெரியநாட்கள் செல்லலாம் அல்லது தெரியாமலேயே போகலாம்.

ஆனால் ஜமால் கஷோக்கி என்ற சவூதி ஊடகர் துருக்கியில் காணாமல் போனவிடயத்தில் சவுதிஅரண்மனைக்கரங்களின் ஒரு உதிர அத்தியாயம் இருப்பதாக துருக்கி தொடர்ந்தும் குற்றசாட்டிவருகிறது

இப்போது இந்த விடயம் அனைத்துலக ரீதியில் பற்றிப்பிடித்துள்ளது.

ஊடகர் ஜமால் கஷோக்கி மாயமானது குறித்து, சவூதி அரேபியா உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உயர்தலைகள் பலரும் கோருகிறார்கள்.


ஆனால் துருக்கி கூறும் திகில் கதையைக்கேட்டால் ஜமால் கஷோஜி திரும்பிவரமாட்டார் எனவே தோன்றுகிறது.

யார் இந்த ஜமால் கஷோக்கி? அவருக்கு என்ன நடந்தது?

ஏன் அவரது கதையை சவுதி அரண்மனைக்கரங்கள் துருக்கியில் வைத்து முடித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜமால் ஒன்றும் சவூதி அரசகுடும்பத்தின் பரம்பரை எதிரியல்ல. இவர் ஒரு ஊடகர். ஆப்கானிஸ்தானில் ரஸ்யா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முதல் ஒசாமா பின் லேடனின் நகர்வுகள் வரை பதிவு செய்த ஊடகர்

இவர் ஒரு காலத்தில் சவூதி அரசகுடும்பத்தின் ஆலோசகராக கூட இருந்தவர்.

ஆனால் ஒரு கட்டத்தில் சவுதிக்கு எதிராகத்திரும்பியவர் இறுதியில் கடந்த ஆண்டு சவூதியிலிருந்து வெளியேறினார்.

தான் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் நாட்டைவிட்டு வெளியேறுவதாக வோஷிங்டன் போஸ்டில் கடந்த செப்டம்பரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் காணாமல் போகும் வரை வோஷிங்டன் போஸ்டில்தான் எழுதியும் வந்தார்.

சவூதிஅரசாங்கத்தை கறாராக ஜமால் தனது பத்தி எழுத்துக்களில விமர்சித்தார். சவூதியின் முடிக்குரியஇளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக தாக்கினார்.

இந்தநிலையில் துருக்கியிலுள்ள தனது காதலியை இரண்டாம் திருமணம் செய்வதற்காக ஏற்கனவே தான் சவூதியில் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றதை நிருபிக்கவேண்டிய ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவுதியில் துணை தூதரகத்துக்கு சென்றார்.

சென்றவர் சென்றவர்தான். இதுவரை திரும்பிவரவேயில்லை.

இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்டிருக்கலாம் என துருக்கி கூறியது.

ஆனால் ஜமால் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டதாக கூறியது சவூதி.

ஆனால் தூதரகக்கட்டிடத்துக்குள் ஜமால் போன காட்சிகள்தான் கண்காணிப்பு பதிவு கருவியில் உள்ளது அவர் அஙகிருந்து வெளியேறியமை குறித்து கண்காணிப்பு கருவியில் தெரியவில்லை என்கிறது துருக்கி.


அத்துடன் இஸ்தான்புல்லிலுள்ள சவூதியின் துணைத் தூதரகத்தில் தேடுதலை நடத்தப்; போவதாகவும் துருக்கி கூறியது

இந்த நிலையில் ஜமால் கஷோக்கி காணாமல்போன அன்று 15 பேர் அடங்கியசவூதி புலனாய்வு அதிகாரிகள் சிலர் சவூதியில் உள்ள விமானம் ஒன்றில் இஸ்தான்புல் விமானநிலையத்தின் ஊடாக வெளியேறியதை நிருபிக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளதாக துருக்கி ஊடகங்கள்கூறுகின்றன.

முதலில் இதே விமானத்தில் இஸ்தான் புல்லில் தரையிறங்கியவர்கள்கறுப்புவாகனம் உட்பட்ட வாகனங்களில் துணைத்தூதரகம் வரை சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளதாகவும்கூறப்படுகிறது


இதேபோல இன்னொரு சவூதி குழுவொன்று இஸ்தான்புல்லில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு அறைகளை தேடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இப்போது இந்தவிமானங்களில் வந்த சவூதிபுலனாய்வு அதிகாரிகளே ஜமால் கஷோக்கியின் கதையை தூதரகத்தில் வைத்து முடித்ததாக அல்லது மர்மமாக கடத்திச்சென்றதாக துருக்கி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஜமால் கஷோக்கிக்கு உண்மையில் என்னதான் நடந்தது?

கஷோக்கிக்கு என்ன நடந்தது என்பதை அறிய தானும் ஆர்வமாக இருப்பதாக சவூதியின் பட்டத்து இளவரசரும் கூறுகிறார்.

ஆனால் இதன் உண்மையான மர்மம் சவுதி அரண்மனைக்கு மட்டும்தான் இப்போதைக்குத்தெரியக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
`