முப்படைத்தளபதிகளை மைத்திரி அவசரமாக சந்தித்ததேன்? நாடாளுமன்றம் ராணுவவலைக்குள் வருமா?

  • Prem
  • November 13, 2018
405shares

விறுவிறுப்பான ஒரு திரைப்படத்தில் வரும் இறுதிக்கட்ட கிளைமாக்ஸ் எனப்படும் உச்சநிலைக்காட்சியை போலவே இந்தோ- சீனத்தயாரிப்பில் இலங்கைத்தீவில் உருவான சிறிலங்காவின் அரசியலமைப்பு இழுபறியின் ஒருகட்டம் இன்று கடந்தது

இந்தக்கட்டம் சுதந்திரத்தின் பின்னர் இலங்கைத்தீவு எதிர்நோக்கிவரும் மிகக்கடுமையான அரசியலமைப்பு நெருக்கடியில் ஒரு முக்கிய கட்டமாகி நாடாளுமன்றத்தைக் கலைத்த மைத்திரியின் தீர்மானத்துக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கும் வகையில் வந்திருக்கிறது. அதாவது இது இறுதித்தீர்ப்பல்ல

ஆனால் இந்த முடிவு வந்தபின்னர் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் குழு, மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று மாலை கூடியமைதான் இங்கு இடிக்கும் புதியவிடயம்

சபாநாயகர் கரு ஜயசூரியா நாளை நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டதிட்டமிட்ட நிலையில் முப்படைத்தளபதிகள் சகிதம் தேசிய பாதுகாப்புக் குழு கூடிய நகர்வான து நாடாளுமன்றம் ராணுவ வலையமைப்புக்குள் கொண்டுவரப்படகூடிய அபாயத்துக்கு கட்டியம் கூறுவதாக கருதலாம்

ஆயினும் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டதென்றும், நாட்டில் சமாதான சூழலை வலுப்படுத்த, பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக மைத்திரி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கே எதிர்வரும் டிசம்பர் 7 வரைஇடைக்கால தடை உத்தரவு வந்திருக்கிறது

இந்தகாலத்துக்குள் டிசம்பர் 4, 5மற்றும் 6 ஆம் திகதிகளில் அதாவது 3 நாட்களில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று டிசம்பர் 7 இல் இறுதித்தீர்ப்பு வரக்கூடும்.

அன்று தான் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க மைத்திரி எடுத்த முடிவு சரியா தவறா என்ற தீர்ப்பு வரக்கூடும்

அதாவது டிசம்பர் 7 இல் வெளிவரக்கூடிய இந்தத்தீர்ப்புக்குப்பின்னர் அடுத்து என்ன? என்ற ஒரு வினா பிறக்கும்

ஆனால் இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவு கண்டு ஐககிய தேசியக்கட்சி உட்பட்ட மனுதாரர்கள் மகிழந்தாலும் இறுதித்தீர்ப்பு மைத்திரிக்கு எதிராக வரும் என்பதற்குரிய யாதொரு உறுதிப்பாடும் இல்லை.

சிலவேளைகளில் இன்று சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சொன்ன நிலைப்பாட்டை ஏற்று சிறிலங்காவின் அரசியலமைப்பின் 9வது திருத்த சட்டத்தின் 33(02) சரத்தின் படி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரச தலைவருக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக கூட உச்சநீதிமன்றம் 7 இல் தீர்பை அளிக்கலாம.;

ஆனால் இடைக்கால தடைவழங்கப்பட்ட காலத்தில் சபாநாயகர் தரப்பு நாடாளுமன்றத்தை கூட்டுமா? நிச்சயமாக நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது.

அதாவது முன்னர் மைத்திரியே பிறப்பித்த வர்த்தமானிப்படி நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது

ஆகையால் நாளைய நகர்வுகள் அடுத்தகட்ட கொதிநிலையை தீர்மானிக்கலாம்

இன்றைய உச்சநீதிமன்றக்காட்சியின் முக்கிய பாத்திரமாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் காட்சி இருந்தது.

சட்டமா அதிபரின் வியாக்கியானத்தைப்பொறுத்தவரை அதில் சில நுட்பங்கள் இருந்தன. தற்போதைய அரசியலமைப்பு குழப்பத்துக்கு காரணமான விசயத்தையே அவரும் கைகளில் எடுத்திருந்தார்.

அதாவது அரசதலைவரின் பொதுவான கடமைகளையும் 19 ஆம் திருத்தத்தில் கூறப்பட்ட விவரமான கடமைகளையும் சட்டமாஅதிபர் குழப்பியுள்ளார்.

சிறிலங்காவின் சட்டத்துறை வரலாற்றில் பொதுவாகவே சட்டமா அதிபர்பாத்திரங்கள் எப்போதும் அரசாங்க தேவைகளுக்கு கூன்வளைந்திருப்பவை. இதனால் சமகால சட்டமாஅதிபர் ஜயந்தஜயசூரியவின் வகிபாகத்தையும் அதில் தான் பொருத்திப்பார்க்கமுடியும்.

ஆனால் சட்டமாஅதிபர் ஜயந்தஜயசூரியவின் சுறுசுறுப்பைப்பாருங்கள் ஆண்டுக்கணக்காக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஆட்டத்தில் அவர் மாவடி புளியடியாக போக்குக்காட்டுவார் ஆனால் அதுவே மைத்திரியின் நாடாளுமன்றகலைப்பு நகர்வாக இருந்தால் அது அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என சட்டுப்புட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்.

இதேபோல மகிந்தாவாதிகளோ இந்த வழக்கில் இறுதித்தீர்ப்புக்கு காத்திருப்பதாப தெரியவில்லை. அவர்கள் பொதுத்தேர்தல் தடல் புடல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

எதிர்வரும் தேர்தல் தமது தரப்புக்கு கூட்டணித்தேர்தலாக இருக்கும் என மஹிந்த கூறியகையுடன் சிறிலங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுன என்ற புதிய அடையாளம் குதித்துவிட்டது.

அதாவது சிறிலங்கா சுதந்திரகட்சிக்கையில் பொதுஜன பெரமுன என்ற தாமரை மொட்டை ஏந்தவைக்கும் உடன்பாடு உருவாகிவிட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சக சிறிலங்கா பொதுஜன பெரமுன சமன் சிறிலங்கா பொதுஜன நிதஹஸ் பெரமுன.

இதனை தமிழில் கூறுவதானால் சிறிலங்கா பொதுசன சுதந்திர முன்னணி எனக்கூறலாம். இதன் தலைவராக மைத்திரியும் தவிசாளராக மஹிந்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மறுபுறத்தே நல்வாய்பற்ற நாயகனாக ரணில் காட்சி தருகிறார். இலங்கைத்தீவு சிக்கல் கொந்தளிப்பு நல்வாய்ப்பற்ற ஒரு கலவை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக கவலைகொள்ளும் அவர் இந்த நிலைமைகளில் இருந்து நாட்டை காப்பாற்றி எதிர்காலச்சந்ததிக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமக்கு ரணில் சொல்கிறார்.

ஆனால் இந்த அரசியல் கொந்தளிப்பு அவரது சொந்தக்கட்சியாக ஐக்கியதேசியக்கட்சியில் அவருக்குரிய எதிர்காலத்தை உறுதிப்படுத்துமா என்பதும் ஒரு வினாவாகவே உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க