ராஜதந்திரிகள் நாடாளுமன்றத்தை மொய்த்தது ஏன்? மகிந்ததோல்வி! இனி மைத்திரிநகர்வு என்ன?

  • Prem
  • November 14, 2018
173shares

1961இல் குமாரராஜா என ஒரு திரைப்படம் வெளியானது. அந்தத்திரைப்படத்தை அறியாதவர்கள் கூட ரி.ஆர் பாப்பாவின் இசையில் சந்திரபாபுவின் குரலில் ஒலிக்கும் ஒரு பாடலை நிச்சயமாக கேட்டிருப்பார்கள்.

சந்தானம் எழுதிய அந்தப்பாடல் ஒண்ணுமே புரியலே உலகத்திலே என ஆரம்பித்து என்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது என வியந்து என்னை போலே ஏமாளி எவனும் இல்லே என விரக்தியில் ததும்பி ஒலிக்கும். இப்போது இலங்கையர்களை பொறுத்தவரை சந்திரபாபு பாடியதைப்போல ஒண்ணுமே புரியலே இலங்கையிலே என்ற விரக்திநிலையே.

இதற்கும் அப்பால் முதல் மரியாதை படத்தில் நடிகர் ஏ.கே.வீராச்சாமி சொல்லும் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்சாமி பாணியில் தற்போது யார் தமக்கு உண்மையான பிரதமர் என்ற வினாவுக்கும் இலங்கையர்கள் நிரந்தர விடையை காணவிரும்புகிறார்கள்

நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது இதற்கு ஒரு அறுதியாக விடைவருமென இப்போதைக்கு நம்பி….கை வைக்கப்பட்டாலும் இந்த தொடர் அரசியல் குழப்பங்களைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு மைத்திரியிடம். ஏனெனில் அவர் ஒன்றும் பொம்மைபொறுப்புக்குரியவரல்ல. நிறைவேற்று அதிகாரங்களை உடையவர்.

இந்தப்பதிவு எழுதும் போது இருந்த நிலவரப்படி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்ற யதார்த்தமும்.

அதற்குரிய ஆதாரமாக 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒப்பங்களும் அடுத்து என்ன செய்யப்போகின்றீர்கள் என்ற வினாக்களை உள்ளடகிய இரண்டு கடிதங்களும் சிறிலங்கா சபாநாயகரிடமிருந்து அரசதலைவர் மைத்திரிக்குப்பறந்துள்ளது. அதாவது பந்து இப்போது அரசதலைவர் மாளிகைக்கு அடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்காலத்தடையால் இன்றுகாலை மீண்டும் சிறிலங்காவின் நாடாளுமன்ற அரங்குதுளிர்விட்டது. மைத்திரி நாடாளுமன்றத்தை முடக்கக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் அவ்வாறு இடம்பெறவில்லை.

நாடாளுமன்றத்தில் நிலவக்கூடிய கலவரங்களை தடுக்ககூடியவகையில் தமது ராஜதந்திரஅஸ்திரங்களை தமது கைகளில் எடுத்தமேற்குலக ராஜதந்திரிகளும் நாடாளுமன்ற பார்வையாளர் மாடத்தை நிறைத்தனர்.

இது இன்று கறுத்த சால்வைகளுடன் அரங்கை நிறைத்த ரணில் தரப்பு எடுத்த ஒரு முக்கியமான தற்காப்பு நகர்வாகவும் இருக்கக்கூடும். அதுபோலவே பார்வையாளர் மாடத்தில் செய்தியாளர்களும் குவிந்தனர். மேற்குலகு தொடுத்த இந்த நுட்ப ஆயுதமானது நாடாளுமன்ற அரங்குக்குள் வீராவேசமாக நுழைந்த மகிந்தாவாதிகளை சற்று அதிர்சியடையவைத்தது. இதனால் வழமையைவிட அடக்கி வாசிக்கவேண்டிய நிலையொன்று அவர்களுக்கு உருவானது (இல்லையென்றால் சிலரது சிரசுகள் காயப்பட்டிக்கும்)

முதலில் கட்சித்தலைவர்களுடன் சிறப்புக்கூட்டம் ஒன்றை நடத்திய சபாநாயகர் நாடாளுமன்றம்கூடியதும் ஜே.வி.பி சமர்ப்பித்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை வாக்கெடுப்புக்கு விட்டார்.

ஆயினும் மகிந்த -மைத்திரிதரப்பு அதற்கு எதிர்ப்புக்காட்டி (மேற்குலக ராஜதந்திரிகளுக்காக கொஞ்சம் அடங்கிகுழப்பங்களை செய்தது. ஒருகட்டத்தில் அவையில் இருந்து மகிந்தவும் வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் குரல் வாக்கெடுப்பில் ரணில் தரப்பு வெற்றிபெற்று மகிந்த தரப்பு தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவிக்கமுனைந்தார். ஆயினும் கூச்சல்;கள் தொடர்ந்ததால் சபை நடவடிக்கைகள் காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்னர் நாடாளுமன்றத்தில் மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கருஜயசூரிய தரப்பில் இருக்கும் அணி ஒருபுறமும்….இல்லை இல்லை இந்த வாக்கெடுப்பை ஏற்கமுடியாதென மைத்திரி மகிந்த கூட்டணியில் இருக்கும் தரப்பு மறுபுறமும் நின்றுஇழுபறிப்படுகின்றன

இப்போது இந்தநிலவரங்களில் முடிவை எடுக்கவேண்டிய பொறுப்பு இப்போது அரசதலைவர் என்றவகையில் மைத்திரியிடம் உள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்பைமோசமாக அவரே மீறியிருந்தாலும் கூட அதே அரசியல் அமைப்பன்படி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும்; அதிகாரம் அரசதலைவர் என்ற வகையில் மைத்திரிக்கே உள்ளது

ஆகையால் நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடமுன்னர் முக்கிய முடிவுகளை எடுத்து குழறுபடிகளை தடுக்கவேண்டிய வகையில் நகர்வுகளை எடுக்கவேண்டியதும் மைத்திரியின் நகர்வு.

சுpறிலங்காவைப்பொறுத்தவரை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்படுகிறது அதாவது நீதித்துறைக்கட்டமைப்பில்; ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்ற தோற்றப்பாட்டை ஆதாரப்படுத்தியிருக்கிறது

அதாவது தமது தலையீடு எதுவும் இல்லையென்றகாட்சிப்படுத்தலை கொழும்பு அதிகாரமையம் அனைத்துலகஅரங்குக்கு ஓரளவுகாட்;ட முனைந்துள்ளது.

நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக இருப்பதான இந்தக்காட்சிப்படுத்தல் சிலவேளைகளில் தமிழ்மக்களின் உதிரப்பழிமீதான விசாரணைகளையும் இதே சுதந்திரநீதித்துறை விசாரிப்பதில் என்ன இடைஞசல் என்ற அழுத்தமான செய்தியாகவும் விரைவில் மாறக்கூடும்.

அப்போது இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப்பாராட்டும் தமிழ்தேசியக்கூட்டமைப்புகூட ஆடு உறவு குட்டிபகை என சொல்லமுடியாது.

சரி அதனை விடுங்கள் இப்போதுள்ள பிரச்சனை அதுவல்ல. கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மைத்திரியால்; கொலுவிருத்தப்பட்ட பிரதமர் மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மையப்படுத்தியதே.

இதற்கிடையே ஆல்பழுத்தால் அங்கே கிளி அரசுபழுத்தால் இங்கே கிளி என்ற பழமொழியை நினைவூட்டும் வகையில் மகிந்தவிடமிருந்து தாவி ரணிலிடம் செல்லும் முகங்கள் இப்போது அதிகரிக்கின்றன.

இரண்டுவாரங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து தாவி மைத்திரியிடம் அமைச்சுப்பதவியைப்பெற்ற வசந்த சேனாநாயக்கவும் வடிவேல் சுரேசும்இன்று தமது பதவிகளைத்துறப்பதாக அறிவித்து மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒட்டிக்கொண்டனர்.

இதேபோலவே கடந்தவாரம் அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஏ.எச்.எம். பௌசி, பியசேனகமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கூட இன்று எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தனர். ஆகமொத்தம் மகிந்தவிடமிருந்து ரணில் அணிக்குத்தாவும் காட்சிகள் இப்போதுமுனைப்புப்பெறுகின்றன.

இவ்வாறான தாவல்களுடன், சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துடன் சுயாதீனமானக்குழுவாக இணையவுள்ளதாக ரணில் இன்று குஷிப்பட்டிருக்கிறார் ஆனால் புதிய தேர்தலுக்கு செல்வதற்கு மகிந்தாவாதிகள் விரும்புவதைபோல ரணில்தரப்பு விரும்பவில்லை. அதங்குரிய காரணமும் தெரிந்ததே.

ஆனால் இப்போது சிறிலங்காவாசிகளுக்கு தெரியவேண்டிய பதில் பொதுத்தேர்தல் குறித்தது அல்ல. இந்த குழப்பங்களுக்கு எப்போது முடிவுவரும் இதற்காக மைத்திரி என்ன செய்யப்போகின்றார் என்ற வினாக்களுக்குரிய விடையே!

இதையும் தவறாமல் படிங்க