ரணிலுக்கு மைத்திரி பச்சைக்கொடி? திருப்பமா? புதிய வியூகமா?

  • Prem
  • November 15, 2018
212shares

நிறைவேற்றுஅதிகாரமா?இல்லை நாடாளுமன்றமா? இந்தவினாவை மையப்படுத்திய இலங்கைத்தீவின் ஆட்டம் பரபரப்பாகத்தொடர்கின்றது. இதில்அடிதடிக்காட்சிகளுக்கும்தள்ளுமுள்ளுகளுக்கும்இன்று இடமிருந்தன.

இந்தப்பரபரப்பான ஆட்டத்தில் சளைக்காமல் பங்கெடுப்பவர்கள் சார்பில் ரணில்மேற்பார்த்த ஐக்கிய தேசியமுன்னணி இன்று மாலைசபாநாயகர் கரு ஜயசூரியதலைமையில் மைத்திரியைச்சந்தித்து பேச்சுநடத்தியது.

அந்தப்பேச்சுக்களில்கைகேயி இடம் தசரதன்பெற்ற வரங்களைப்போல நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை எனவும்நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும்தரப்பைஏற்றுக்கொள்வதாக மைத்திரிஉறுதிமொழியை வழங்கியதாக செய்திகள்வந்தது வரை காலைமுதல் மாலைவரை அதிர்வுகள் தொடர்ந்தன.

இந்த விடயம் குறித்துநாடாளுமன்றத்தில் தான் உரையொன்றைவழங்கவிருப்பதாகவும்அதன்பின்னர் அடுத்துவரும் நாட்களில்இந்த விடயத்தை சுமுகமாகதீர்க்க உதவுவதாகவும் தெரியவருகிறது.

இந்த சந்திப்பு கொதிநிலையற்ற ஒரு சிநேகபூர்வ சூழலில்இடம்பெற்றதாக ஐக்கிய தேசியகட்சியின் பிரமுகர் ரவிகருணாநாயகக்கா கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகங்கள் உட்பட மஹிந்தவுக்கு எதிரான பிரேரணையில் ஒப்பமிட்ட122 உறுப்பினர்கள் சார்பான முக்கியதலைகள் மைத்திரியை சந்தித்துஇந்த வரங்களைப்; பெற்றிருந்தால் இந்தநகர்வு முக்கியமானது. ஆனால்இவற்றின் நடைமுறை சாத்தியங்கள் வினாவுக்குரியன

ஏனெனில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பை ஏற்றுக்கொள்வதாக மைத்திரிஇந்த உறுதிமொழியை வழங்கியிருந்தால் இது மகிந்தவைபொறுத்தவரை மிகமோசமாககையறுநிலைக்கு அவரைத்தள்ளி அடுத்தகட்டஆட்டத்தின் தீவிரத்தைமுடிவுசெய்யும்.

மறுபுறத்தே நாடாளுமன்றத்தில் மகிந்தவின் அரசாங்கத்துக்கு(?) எதிராகவும் ரணிலுக்குஆதரவாகவும் பெரும்பான்மையை நிருபித்தஜனநாயக வகிபாகத்தின் முக்கியகோரிக்கை இது.

இதனால் அவர்களுக்கு இதுமுக்கியமானது. ஆனால் ஏற்கனவேநிறைவேற்று அதிகாரத்தால் காயப்பட்டஅவர்கள் எவ்வாறு அதனைஎய்தவருடன் அரசியல் சகவாழ்வைதொடரப்போகின்றனர் என்பதும் முக்கியமானது.

ஆனால் மாலையில் இந்தசந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னரேபோதும் போதும் என்றஅளவுக்குரியவகையில்இலங்கையின் பரபரப்புகள் கடந்திருந்தன.முன்னதாக சபாநாயகர் கருஜயசூரியாவும் மைத்திரியும் காரசாரமானகடிதங்ளைப் பரிமாறிய பின்னணியில் இன்று காலை மீண்டும்நாடாளுமன்றம் கூடியதும் இந்தகுழப்பங்களும் கூடவே வந்தன.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம்அதனைநிறைவேற்ற பின்பற்றவேண்டிய விதிமுறைகளை பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டதாக மைத்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுபுறத்தே நாட்டின் முதற்குடிமகனான நீங்கள்தான் குப்புறத்தள்ளிய குதிரைகுழியை பறித்த கதையாகநாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகசபாநாயகர் போட்டுத்தாக்கினார். ஆகமொத்தம்அரசியலமைப்பை மீறியதாக இருவருமேஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிய நிலையில்தான் இன்றையநாடாளுமன்ற அமளிகளும்இடம்பெற்றன.

நாடாளுமன்றத்தில் பிரதமர் என்றகோதாவில் மகிந்த உரையாற்றினார். அவரது உரையின் பின்னர்அதெல்லாம் சரி மகிந்தஅவர்களே நீங்கள் பிரதமர்என்கின்றீர்களே? அதற்குரிய பெரும்பான்மையை நிருபிக்க ஒரு வாக்கெடுப்பு ஆட்டத்தை நடத்துவோமா எனயானைகள் முகாமிலிருந்து லக்ஸ்மன்கிரியெல்ல கோரமகிந்தாவாதிகளுக்குயதார்த்தம் உறைத்தது. அவர்கள்குழம்பினர்.

மகிந்தாவாதிகள் குழப்பங்களை கண்டஐக்கியதேசியக்கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்கள்; சபாநாயகருக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக அவரைசுற்றி வளைக்க அதனைமகிந்தாவாதிகள் ஊடறுக்க அங்கேஒரு ஒரு தள்ளுமுள்ளு உருவானது. நாடாளுமன்ற ஜனநாயகவாதிகள் போர்வை குப்பைவாதிகள்சிலர் சபாநாயகர்மீது குப்பைக்கூடையை கூடவீசியெறிந்தனர். பிரியமான பொருட்கள்மீது அவர்களுக்கு பிரியமிருப்பது இயல்பானதுதானே

ஆனால் கரு ஜயசுரியாயார்? அவர் கஜாபுயலுக்கே கடுக்காய் கொடுக்கும் திடத்தில் இருப்பதால்; இந்தகுப்பைத்தாக்குதலைலாவகமாக சமாளித்தார்.

ஆயினும் சபாநாயகர் மீதுஇவ்வாறு பொருட்களை எறிந்தசெயல் இலங்கைத்தீவின் ஜனநாயகபெருமைக்கு ஒரு கெட்டநாள்என சிறிலங்காவுக்கான ஜேர்மன்தூதர்ருவிற்றியமை இந்த செயல்களையெல்லாம் அனைத்துலகசமூகம் பார்த்துக்கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.

இந்த இழுபறிகளுக்கு மத்தியில்நாடாளுமன்றத்தில் பிரதமரையோ அவரதுஅமைச்சரவையோ ஏற்றுக் கொள்வதில்லை என கூறியபடி சபாநாயகர்கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்

இதற்;கிடையே நாடாளுமன்றத்தில் இடம்பெற்றஅமளியை அடுத்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு அதிரப்படையினர் வரவழைக்கபட்டனர்.அதேபோலகொழும்பில் உள்ள அமைச்சகங்களுக்கும் அதிரப்படையின்பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் ஏற்கனவே திட்டமிட்டது போல ஐக்கியதேசிய முன்னணியினர் பெரும் எடுப்பில் வீதிக்குஇறங்கி மைத்திரி மகிந்தஅரசாங்கத்தை வலம் இடமாகவறுத்தெடுத்தனர். இயலுமானால் அரசதலைவர்தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரேநேரத்தில் நடத்ததத்தயார் எனஅவர்கள் அரசாங்கத்துக்கு சவால்விடுத்தனர்.

யானைகள் முகாமின் முன்னணிமுகங்களான ரணில்மற்றும் சஜித் பிரேமதாசஆகியோரும் இந்த பேரணியின்முன்னரங்குக்குவந்திருந்தனர்.

மறுபுறத்தே தேர்தல் ஒன்றுவந்தால் எவ்வாறு வாக்காளர்களை கட்டுக்குள் வைத்திருப்பது என்றதந்ரோபாயத்துக்காகஇன்று நள்ளிரவில் இருந்துஎரிபொருளின் விலைமேலும் குறைக்கப்பட்ட நகர்வு தோட்டத்தொழிலாளர்களுக்கு தினச்சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுவதற்கான முனைப்புகள் போன்ற நகர்வுகளில் மகிந்ததரப்பு தீவிரம் காட்டியுள்ளது.

ஆகமொத்தம் தற்போது இடம்பெறும்ஆட்டம் தனியேநாடாளுமன்றத்தை மையப்படுத்திய இழுபறியல்ல மாறாக இது நிறைவேற்று அதிகாரமா? இல்லை நாடாளுமன்றமா? என்ற அதிகாரநிலைப்போட்டியின் ஒருவடிவமே.

ஏனெனில் இங்கு மைத்திரியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிராகநாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப்பலம் என்றபதில்போட்டிக்களத்தில்உள்ளது. இந்தபோட்டிக்களத்தில் சமரசம்செய்யத்தயாரில்லை என்றவகையில் மைத்திரி சபாநாயகர்கருஜயசூரியாவுக்குஅனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி நாடாளுமன்றம் நாளை கூட்டப்படுமென சபாநாயகர்கரு அறிவித்திருக்கிறார். அதுபோலநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதரப்பை ஏற்றுக்கொள்வதாக மைத்திரியிடம் இருந்து உறுதிமொழியை பெற்றிருக்கின்றார்.

ஆகையால் இன்றைய சந்திப்புக்குரிய பெறுபேறுகள் ஐக்கியதேசியக்கட்சிவிரும்பும் பச்சைவர்ணத்தில் மைத்திரியிடமிருந்து பச்சைஅட்டையாக வந்திருப்பதாக இப்போதைக்கு கருதலாம்.

ஆனால் இந்த பச்சைஅட்டைக்கு பின்னால் ஏதாவதுசிவப்பு அட்டைகள் உண்டா?மீண்டும் நாளையும் நாடாளுமன்ற இழுபறிகள் நீட்சியுறுமா? நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்பை ஏற்றுக்கொண்டால் ஒவ்வாததரப்புடன் மைத்;திரியின்கூட்டுக்குடித்தனம்எப்படிச்செல்லும்?

தானே கொலுவேற்றிய பிரதமர்மகிந்தவின் நிலை என்ன?இவைபோன்ற பல வினாக்கள்பதிலுக்காக காத்திருக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க