நடுகல்லை பார்க்கும் நாடோடிகளே! எமது மக்களிடம் கூற ஒரு செய்தி…

  • Prem
  • November 26, 2018
38shares

வரலாற்றுமனிதர்களை நினைவுகொள்ளக்கூடிய முதுதாழிகளும் கல்லறைகளும் நடுகற்களும் செனொதொப் எனப்படும் உடலம்அற்ற நினைவுக் கல்லறைகளும் இந்தஉலகம் எங்கும் விரவிக்கிடக்கின்றன.

இவற்றில்அநேகமானவை உலக வரலாற்றுப்பக்கங்களில் நடந்த போர்க்களங்களுடன்தொடர்புடையவை. கி.மு. 480 இல்இடம்பெற்ற ஒரு சமரைமையப்படுத்திய புராதன நடுகல் ஒன்றுஇன்றையகிரேக்கத்தில் உள்ள 'வெப்பவாயில்'எனபொருள்படும் தேமோபைலே கணவாய்பகுதிக்கு அண்மித்துஉள்ளது.

அந்த நடுகல்லில்… இந்தநடுகல்லை பார்க்கும் நாடோடிகளே நீங்கள் ஒருவேளை எங்கள்ஊரான ஸ்பார்ட்டாவுக்கு சென்றால் அங்குள்ள எமதுமக்களிடம் கூறுங்கள் நாங்கள் யாவரும் அவர்களுக்காகபோராடி வீழ்ந்தோமென என்ற வாக்கியங்கள் உள்ளன.

இவைசாதாரணவாக்கியங்கள் அல்ல தம்மை விடஎத்தனையோ மடங்கு அதிகமாக இருந்தபாரசீகப்படைகளை எதிர்த்து வீழ்ந்த 300 கிரேக்க ஸ்பார்த்தன்களின் தியாகத்தின்சாட்சி.

உலகின் வரலாற்றுப்பக்கங்களில் இதுவரை எத்தனையோ போர்கள்நடந்துவிட்டன. இவ்வாறான குருரமான போர்கள்நடக்கக்கூடாதென்பது பலரின் வேண்டுதல் ஆனால்இனிமேலும் போர்கள் நடக்காது என்பதற்குஎங்கும் உத்தரவாதம் இல்லை. ஏனெனில் உலகின்அசைவியக்கம் அப்படி.

இதனால் தான் எப்போதும் போர்கள்வெடிக்கத்துடிக்கின்றன. தமிழ்மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியபதிவுகளைக்கொண்டுள்ளநவம்பர் 26 மற்றும் நவம்பர் 27 இன்பின்னணியில் கூட புதிய போர்க்களங்கள்வெடிக்கத் துடிக்கின்றன.

அதற்குரியஆதாரமாக கருங்கடலை அண்மித்த கிரிமியா கடற்பரப்பின்இன்றைய நிலையை பாருங்கள் யுக்ரேனியகடற்படையின் 3 கடற்கலங்களை ரஷ்யா கைப்பற்றியதால் அங்குபோர்ப்பதற்றம் எழுந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக இரண்டுநாடுகளும் ஒன்றின் மீது ஒன்றுபழி சுமத்துதினாலும் ஏற்கனவே கொதிநிலையில் உள்ளரஸ்ய- உக்ரேன் உறவில் இதுமேலும் எரிநெய்யை ஊற்றியுள்ளது.

இந்த போர்ப்பதற்றம் தொடர்பாக இன்று ஐ.நா.பாதுகாப்புச்சபை கூடஅவசர கூட்டத்தை நடத்துகின்றது.. அதாவது உலகவரலாற்றில் எப்போதும்போர்கள் வெடிக்கத்துடிப்பது இயல்பே.

அதேபோல போர்களங்களின் நாயகர்களும் உலக வரலாற்று பக்கங்களிலும்இடம்பிடிப்பதும் இயல்பு. அதற்குக்காரணம் போரைவெற்றிகொள்வது என்பதை விட மரணம்நிச்சயம் என அறிந்தாலும் இறுதிவரைபோராடி செய்யும் உயிர்த்தியாகம் அதற்குக்காரணம்.

இதனால்தான்போரளிகள் மரணித்தாலும் அவர்களின் நினைவுகள் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்படுகின்றன. நினைவேந்தன் நாட்களாக அவை கடைப்பிடிக்கபடுகின்ன. அவர்கள்பெருமை கீதங்களாக இசைக்கப்படுகின்றன.

விடுதலையாடிகளைநினைவு கூருவது உலகில் உள்ளஎல்லா சமூகங்களின் கடமையாக இன்றும் தொடர்கின்றது.

உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடிய மக்கள் எல்லோரும்குருதி, கண்ணீர், வியர்வை ஆகியமூன்றையும் ஒருங்கு சேர விலையாகக்கொடுத்தே தமது தகுதியை அடைந்தனர்.

இந்த நியதி தமிழர்தாயகத்துக்கும் பொருந்தும்2009 மே க்குப்பின்னர் குருதிக்குமட்டும் சமகாலத்தில் விதிவிலக்குநிலையுள்ளது. ஆனால் கண்ணீரும் கவலையும்தமிழ்மக்களிடம் உள்ளது.

அண்டவெளியில்இருள் என்பது எப்போதும் நிரந்தரம், இதனால் அந்த இருளை ஊடறுக்கும்ஒளி எப்போதுமே தேவைப்படுகிறது.

இது ஒளிக்குரிய பிதாமகனான சூரியத்தேவனாக இருக்கலாம் இல்லையென்றால் சூரியத்தேவன் ஒளியூட்டும் உலகிலுள்ள ஒரு சிறிய மண்சுட்டியின்சுடராக இருக்கலாம்.

தமிழ்மக்களைபொறுத்தவரை ஓளிபிறந்த நாள் நவம்பர் 26.பல்லாயிரம்சுடர்களுக்குரிய நாள் நவம்பர் 27.ஆனால் ஒளியின்நினைவு அல்லதுசுடர்களின் நினைவு கூடஅந்தகாரங்களைஉறுத்தும். அந்தகாரங்களின் கொழும்பு மையப்புள்ளியில்சமகாலத்தில்அரசியல் குழப்பங்கள் இருக்கின்றன.ஆயினும்மழைக்கால இருட்டுக்கு கொப்பிழக்கப்பாயாதமந்திபோலநினைவு கூரல்களை சகித்துக்கொள்ள முடியாதஅதன் இறுக்கம் தொடர்கின்றது.

இதன் ஆதாரமாகவேபிறந்தநாள் நிகழ்வை கொண்டாட முயற்சித்ததானகாரணத்துடன்சிவாஜிலிங்கம்என்ற தனிமனிதர் கைது செய்யப்பட்டசம்பவமும் கேக்உட்பட்டபொருட்களைபறிமுதல் செய்த சம்பவங்களும் அமைந்தன

சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்றுவிடுமென நினைக்கும்அபத்தத்தை போல கேக்கை பறித்துவிட்டால்நினைவை பறிக்கமுடியுமா?

தெற்கின்இந்த அந்தகார இறுக்கமே மறுபுறத்தேதமிழ்மக்களின் நினைவு கூரல் உறுதியைஉந்தித்தள்ளுகின்றது. இதனால்தான் தடைகள் இருந்தும் யாழ்பல்கலைக்கழகம்உட்பட பல இடங்களில் பிறந்தநாள் நிகழ்வுகள் நடந்தன.

தலைவரின்சிந்தனைகள் எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழகவளாகத்திற்குள்ளேயே சுவரொட்டிகள்தென்பட்டனஒளியின்நினைவுஏன் அந்தகாரங்களை உறுத்துகின்றது?

காரணம் இல்லாமல் இல்லை ஒருபிரமிட் மேல்கூர்முனை தலைமைத்துவம் எப்போதும் வழுவாடிகளை அச்சப்படுத்தும் ஏனெனில் கூர்முனை தலைமைத்துவம்எப்போதும்எப்போதும் தனக்குத்தோதான சுலபமான முடிவுகளைஎடுப்பதில்லை.மாறாக சரியானதாக கருதப்படும்முடிவுகளை எடுப்பதேஅது.

சூரியன்அல்லது அகல்சுடர்கள் வழங்கும் செய்தி ஒன்றேஒன்றுதான். அது தமிழர்களின் அபிலாசைகள்மீது கவியக்கூடிய அந்தகாரத்தை ஊடறுத்து ஒளியீட்டும் கற்பிதங்கள்சார்ந்தது.

தமிழினத்தின்விடுதலைவரலாறும் உதிரத்தினால் தான்எழுதப்பட்டது.

விடுதலைவரலாறுகளின்சாவுகளுக்கு அர்த்தமில்லாமல் இல்லை.

அவைதான்உலக வரலாற்றை இயக்கும் உந்துசக்தி.

அதில் வித்துடல்சாசனம் ஒரு கலங்கரைவிளக்கு


ஒடுக்குமுறைஅந்தகாரத்தில் இருந்து விடுபட்டு இனநீதிஎன்னும் ஒளிமிக்க பாதையில் செல்லஇந்த வித்துடல்சாசனம உதவக்கூடும்.

முன்னேறிநடந்த தியாகத்தின் வழிகாட்டுதலில்தமிழர்தாயகத்தின்அரசியல் இருப்பை நிலைநிறுத்த நவம்பர்26 27 ஆகிய இரண்டு தினங்களுமே முக்கியஅடையாளங்கள்.

ஆம் அந்த அடையாள செய்திகளின்ஒளிப்பரவல் விரவுகிறதுஇது வித்துடல்சாசனங்களின் ஒளிப்பரவல்!

இதையும் தவறாமல் படிங்க