நவம்பர் 27 ஐ நினைத்தோம்! விடுதலையாடிகளை நினைத்தோமா?

  • Prem
  • November 27, 2018
48shares

தாயகக்கனவுடன் சாவினைதழுவிய சந்தனப்பேழைகளே….இவ்வாறுஆரம்பித்து இதயத்தைஊடறுத்து…விழிகளில்நீர்ப்பெருக்கை உருவாக்கியஅந்த உயரியகீதத்தை செவிமடுத்துவிட்டோம்.

வல்லமை தாருமென்றுங்களின்வாசலில் வந்துமேவணங்குகின்றோம்!உங்கள்கல்லறை மீதிலும்கைகளை வைத்தொருசத்தியம் செய்கின்றோம்!என்றசங்கற்பங்களும் முடிந்தன.அன்பான தமிழீழமக்களே எனவிளித்து ஒலிக்கும்மாவீரர் தினஉரைஎன்ற கொள்கைபிரகடனஉரை இந்தமுறையும்வரவில்லை அந்தஉரைக்குரியவரின் கம்பீரஆதர்சனமும் இல்லை.

பிரக்ஞை உள்ளதமிழ்மனங்கள் இன்றுபத்தாம் ஆண்டாகவும்பட்டாம்பூச்சியாக சிறகடித்துஅந்தக்குரலை.. அந்தக்குரல்வழங்கும் செய்தியைஅவரது தரிசனத்தைதேடிஓய்ந்தன.

நீரோடையை வாஞ்சிக்கும்மான்போல சமகாலஅரசியல்வரட்சியால் கையறுநிலையிலுள்ள தமிழினம்தாம் வாஞ்சிக்கும்தன்னலமற்ற ஒருதலைவரை தேடிக்கொள்வதுஇயல்புதானே.

இனியென்ன மாவீரர்நாள்2019 என்ற நீட்சியின்அடையாளத்தில் இதேசுழற்சிக்காக காத்திருப்போம்!தாயகப்புதல்வர்களின் ஈகங்களைசொல்வதற்கு பிரக்ஞைஉள்ள தமிழர்கள்ஒருபோதும் பின்நிற்பதில்லையென்பதும்யதார்த்தம் தானே!

காலமாகிகடந்த நாட்களிலும்சொன்னோம். 2018 நவம்பர்27 ஆன இன்றும்சொன்னோம். இனிவரும்நாட்களிலும் ஈகங்களைசொல்வோம் அதிலேதும்ஐயமில்லை.இன்றும்அப்படியே வல்லமைதாருமென்றுஉங்களை வணங்கினோம்!நேரடியாக கல்லறைத்தோட்டம்செல்லாத மாந்தர்களும்மனங்களில் கனன்றார்கள்.

முழுமையாக இல்லாமல்சிதைந்த குவியலானகல்லறைகள் மீதுகைகளை வைத்துசத்தியம் செய்யாவிடினும்மௌனித்துநின்றோம். உயிரில்தொடர்புடைய உறவுகளின்பிலாக்கணமும் எங்கள்செவிகளில் ஒலித்தன.

ஆம்! மாவீரர்நாள்2018 புனிதமாக கடந்தது. இப்போதுதினவெடுக்கும் தினசரிவாழ்வின்அழைப்புக்குத் திரும்புகிறோம்.புகலிடவாசிகளான நாங்களும்என்னே செய்வோம்?எங்களுக்கு ஆயிரம்சோலிகள் உண்டேமாதம் முடிகிறதுவாடகைப்பணம் வீட்டுதவணைப்பணம்..பிள்ளைகளின் பிரத்தியேகவகுப்புக்குசுளையாக கொடுக்கும்ரியுசன் பணம்..நீர் மின்சாரம்போன்ற இன்னோரன்னசிட்டைத்துண்டுகள் எல்லாம்எமைநெருக்குமே எனநினைத்துக்கொள்வீர்கள்.

வீரத்தின் விளைநிலமானஎமது தாயகத்திலும்அவ்வாறே. அங்குள்ளமாந்தர்களுக்கும்இன்னல்களும் கவலைகளும்நெருக்குவாரங்களும் உண்டு.

ஆனால் தாயகவிடுதலைஎன்ற ஒன்றைச்சொல்லின்பின்னால் அணிவகுத்துநின்றவர்கள் பெடியள்விடாங்கள்என நீங்கள்புகழ்பாடிய அதேபோராளிகள் 2009 மே18 க்கு பின்னர்எப்படி வாழ்கின்றார்கள்?இல்லையென்றால் மாவீர்களைபெற்றெடுத்த உறவுகள் அவர்களைவாழ்க்கைத்துணையாக வரிந்தவர்கள்அவர்களின் வாரிசுகள்இப்போது என்னசெய்கின்றார்கள்?இவர்களின்நிலைக்கு பொறுப்புக்கூறுவதுயார்?

இதற்குள் இப்போதுசிங்களதேசத்தில் இடம்பெறும்கதிரை பிடிப்புஆட்டத்தின் முடிவைஅறியவேண்டிய புதியஆர்வம் வேறுஎமக்குள் உள்ளது.சிறிலங்கா நாடாளுமன்றத்தைகலைக்க அதன்அரசதலைவர் வெளியிட்டஅதி சிறப்புவர்த்தமானி அறிவித்தலுக்குசவால்விடுக்கும் மனுவை,விசாரிக்கும் ஏழுநீதிபதிகளும் எதிர்வரும்7க்கு பின்னர்வழங்கும் தீர்ப்பைஅறியவேண்டுமே?

இதற்கிடையே இன்றுஉங்களைத்துதித்தபடியே கொழும்பில்நடைபெற்ற நாடாளுமன்றஅமர்வு காட்சிகளிலும்ஒரு ஓரக்கண்ணைவைத்தோம்.

அதன்படி ஆளும்கட்சிஎன வாய்கிழியகிழியஉரிமைகோரும் மைத்திரிமகிந்த தரப்புஉறுப்பினர்கள் இன்றைஅமர்வில் கலந்துகொள்ளாத காட்சிகள்தெரிந்தன.

ஒருவேளை முள்ளிவாய்கால்பேரழிவுடன் தமிழர்களின்போராட்டம் உறைநிலைக்குஉள்ளாகாமல் இருந்திருந்தால்சிங்கள தேசத்திலும்இவ்வாறு ஒருஅனாக்கி எனப்படும்அரசின்மையற்;றநிலைக்கும் அடிபாடுகளுக்கும்நேரம் இருந்திருக்குமோஎன்னவோ. அன்றுதமிழர்கள் மீதானபோரில் ஒன்றாகநின்றவர்கள் இப்போதுதற்காலிகமாக ஜனநாயகத்துக்காகஅலரிமாளிகையின் சட்டபூர்வத்துக்காகஎன சொல்லிஅடிப்படுகிறார்கள்.

நாடாளுமன்றம் சபாநாயகரின்பிணைவலயமாகிவிட்டதாக ஒருசாரார்துக்கிக்க மறுசாரர்மைத்திரியின் பிடிவாதம்கண்டுவிக்கித்தனர். ஆனால்நாளையே தமிழர்களின்அபிலாசைகள் குறித்தபேசுபொருள்வந்தால் இன்றுகள்ளன் பொலிஸ்விளையாடுபவர்கள் நாளையேஒன்றாகி விடுவார்கள்.இது கல்லறையில்இருந்தாலும் கூடஉங்களுக்கு தெரியாதசூட்சுமமும் அல்ல.

எமது அரசியல்வாதிகளுக்கும்இப்போது பொழுதுபோகவேண்;டுமேகொழும்பின் இந்தகொழுக்கட்டை மோதகஅதிகாரப்போட்டிக்குள் அவர்களும்சுறுசுறுப்பாக உள்ளனர்தான்.இந்த புனிதநாளில் ஓ!தமிழ்;மாந்தர்களேஎன விளித்து

நீங்கள் பெறுமதியானஒரு வினாவைகேட்பது புரிகிறது?ஓ தமிழ்;மாந்தர்களேஇன்று வணக்கத்திற்குரியபுனிதநாள் என்றீர்கள்.எழுச்சிகொள்ளும்மகத்தான நாள்என்றீர்கள்.மண்ணின் விடிவுக்கானதம்மை ஈகித்தஈகியர்களை நெஞ்சுருகிப்பூசிக்கும் திருநாள்என்றீர்கள் எல்லாமேசரிதான்.

இலங்கைத்தீவின் இயங்கியல்விதியில் திருப்பத்தைஏற்படுத்திய எங்களின்விருப்பத்திற்காக உழைத்தபணிக்குஉழைப்பீர்களா? புகலிடத்தில்அடம்பன் கொடிகாகபரவியிருந்தாலும் அதனைஅரசியல் மிடுக்காகமாற்றப்பொறுப்பு ஏற்றீர்களா?இனத்தின் அபிலாசைகளுக்குஉழைக்கும் உண்மைமனிதர்களாக நிற்கின்றீர்களாஎனக்கேட்கின்றீர்கள்.

என்ன பதில்சொல்லமுடியும் எங்களால்?வரலாற்று நாயகர்கள்நீஙகள் விரும்பும்ஒரு எதிர்காலவரலாற்றைப்புரட்டக்கூடிய அறவழிஉறுதி எம்மிடம்உள்ளதா? தர்மத்தின்வழிநிற்கும் ஒருசத்திய இலட்சியங்களின்வீணடிப்புக்கு இடமில்லைஏன் சூளுரைக்கவும்முடியவில்லை?

அப்படியானால், நவம்பர்27 க்காக எழுச்சிகொண்டு…பின்னர் உறையிலிடப்படும்;வெறும்அட்டைக்கத்திகளா நாம்?மறந்துவிடாதீர்கள் மனிதவரலாற்றுச்சக்கரம்காலங்களைக்கடந்து யுகங்களைவிழுங்கி முடிவில்லாமல்சுழல்கிறது.

இதையும் தவறாமல் படிங்க