இரண்டு வீட்டுவிருந்தாளி கறியிலே செத்தானாம்! சுமந்திரனால் அலறும் ஐ.தே.க

  • Prem
  • November 29, 2018
62shares

இரண்டு வீட்டுவிருந்தாளி கறியிலே செத்தானாம்! என ஒரு பழமொழி உண்டு.அதுபோலவே ஐக்கியதேசியக்கட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகமான சுமந்திரனின் ஆதிக்கம் இல்லை இல்லை என அதன் முக்கிய முகமான லக்ஷ்மன் கிரியெல்ல சிங்களமக்களுக்கு சொல்லவேண்டிய ஒரு நிலை வந்துள்ளது.

ஐ.தே.க ஆகிய யானையின் பாகன் யார் இப்போது அது சுமந்திரனா? என்ற வினா விமல் வீரவன்ச போன்ற மஹிந்தாவாதிகளால் ஏற்கனவே எழுப்பப்பட்ட நிலையில் அப்படியேதும் இல்லை இது முழுப்பொய் எனக்குறிப்பிட்டகிரியல்ல

கடந்தவாரம் நாடாளுமனறத்தில் இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் தன்னை சுமந்திரன் திட்டியதாக பரவியதாக கூறப்பட்ட காணொளி ஒன்றுக்கும் விளக்கமளித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பணிகளில் சுமந்திரன் ஆதிக்கம் செலுத்தவில்லை என்ற உறுதியையும் சிங்கள மஹாஜனதாவுக்கு வழங்கியுள்ளார்.

யானைகளின் முக்கிய முகமான லக்ஷ்மன் கிரியெல்லவை சுமந்திரன் திட்டினார் திட்டவில்லை என்பது வேறுவிடயம். ஆனால் கொழும்பு உட்பட்ட நகர்ப்புறங்களை மையப்படுத்தி இருக்கும் ஐக்கியதேசியக்கட்சியின் மெற்றேரோ பொலிற்றன் எலிற்ஸ் ரக சிங்கள வாக்காளர்களுக்கு அதாவது மத்தியதரவர்க்க படித்த வாக்காளர்களுக்கு டெய்லிமிறர் என்ற ஆங்கிலப்பத்திரிகை ஊடாக கிரியல்ல வழங்கிய இந்த உறுதிமொழி முக்கியமானது.

அதாவது தமிழ்பேசும் கட்சிகள் தமக்கு இப்பொது வழங்கும் கைமாத்து உதவிகளை எதிர்காலத்தில் வரக்கூடிய தேர்தல் களத்தில் சிங்களமக்கள் பிழையாக விளங்கிவிட்டால் தமது வாக்குவங்கி அடிவாங்குமே என்ற பதற்றம் சார்ந்தவிடயம் இது.

இப்போது இரண்டு வீட்டு விருந்தாளி உபசரிப்பு கறியாலே வாதப்படும் ஒரு நிலையை சுமந்திரன் எதிர்நோக்குவதும் தெரிகிறது.ஏனெனில் ஏற்கனவே கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் வைத்துள்ள தொடர்புகளும் யானையின் அரசாங்கத்தை அமைப்பதற்காகவே கூட்டமைப்புதலைமை பாடுபடுவதாக தமிழ் மக்கள் கொண்டுள்ள சந்தேகங்களும் உள்ளன.

மகிந்தவை கடந்தமாதம் 26 இல் மைத்திரி பின்கதவால் கொலுவேற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் மைத்திரி திருமலைக்கு சென்றவேளை பெறுமதியான ஒரு தலைவர் எமக்குக் கிடைத்துள்ளதாக மேடையில் சொல்லி இரா. சம்பந்தன் கொண்ட மகிழ்ச்சி சில நாட்களில் தோலுரிக்கபட்டது. இப்போது புகழாரம்சூட்டிய அதேவாய்களே மைத்திரிமீது ஜனநாயகவிரோத அறம் பாடுவதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

இரா. சம்பந்தன் கூறுவது போல தமிழ்மக்களுக்கு தெற்கில் ஒரு பெறுமதியான தலைவர் இருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழர்தரப்பில் இவ்வாறெல்லாம் அதிர்வுகள் இடம்பெற்றாலும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும்வேதாளம் போல சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வுகளும் இடம்பெறுகின்றன. அந்தவகையில் இன்று கூட அரசாங்கம் என தம்மை தம்பட்டம் அடிக்கும் மைத்திரி மகிந்த தரப்பின் புறக்கணிப்புடன் இந்த அமர்வும்; இடம்பெற்றது.

அமைச்சரவையை கொண்டுள்ளதாக கூறும் அரசாங்கத் தரப்பே நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் புதுமை இலங்கையில் தொடர்கின்றது. ஆனால் இந்த முரண்நிலையைக்கூட தமது வக்கணைப்பேச்சுக்களால் மகிந்ததரப்பு மறைத்துக்கொள்ளமுனைகிறது.

ஆயினும் இன்று கூடிய நாடாளுமன்றத்திலும் மகிந்தவுக்கு ஆப்பு வைக்கக்கூடிய ஒரு பிரேணை 113 க்கு அதிகமான 123 ஆல் வாக்களிக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரவி கருணாநாயக்காவினால் சுருக்கு வளையமாக எறியப்பட்ட இந்தப்பிரேரணை பிரதமரின்செயலாளர் அரசநிதியை பயன்படுத்தும் அதிகாரத்தை துண்டாடும்வகையில் வெளிப்பட்டது.

ஆனால் இவ்வாறான தீர்மானங்களையெல்லாம் கணக்கில் எடுக்கத்தயாராக இல்லாத மகிந்த தரப்பு தொடர்ந்து வெறுந்தரையில் நீச்சல் அடித்து தண்ணீரில் நீந்துவதாக காட்டிக்கொள்வதும் தொடர்கிறது. இதற்கிடையே மக்கள்விடுதலை முன்னணியாகிய ஜே.வி.பியும் ரணில்தரப்பின் அலரிமாளிகை இருப்புக்குஎதிராகவும் தனதுசாட்டையை சொடுக்;க ஆரம்பித்துள்ளது.

மகிந்ததரப்பு அரசநிதியை பயன்படுத்துவதற்கு எதிரான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டீர்கள் அல்லவா? இனி ரணில் குழாமாகிய நீங்களும் அலரி மாளிகையில் தங்கிஅரசநிதிக்கு செலவுவைக்காமல் அங்கிருந்து வெளியேறுங்கள் என்பது ஜேவிபியின் தலைவர் அநுரகுமாரதிசாநாயக்காவின் செய்தியாக இன்றுவந்தது.

ஆனால்அநுரகுமாரதிசாநாயக்காவின் இந்த செய்திக்கு பதிலளித்தயானைகள் அலரிமாளிகையின் தற்போதைய நீர் மின்சாரம் உட்பட்ட எல்லாச்செலவுகளை தமதுகட்சிதான் செலவிடுவதாககூறிப்பிளிறின.

ஆக மொத்தம் முடிவுறாத ஒருகதை சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சமகால கதை தொடர்ந்தாலும் அநேகமானவர்களின் ஊகம்இப்போது மகிந்தவின் சுயபதவிவிலகல் மற்றும் அதற்குப்பின்னான புதியதேர்தல் ஒன்றை மையப்படுத்தியே சுழல்கிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள தரப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென இனறு சிறிலங்காவின் உயர்க்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருதிமாற்றமும் இதனை ஆதாரப்படுத்துகிறது. மஹிந்த தரப்பு உறுபபினர்கள் இன்றைய சபை அமர்வைப் புறக்கணித்த போதிலும் அரசாங்கத்தரப்பில் இருந்து விஜேதாச ராஜபக்ச மட்டும் இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டு இந்தக்கருத்தை வழங்கியிருக்கிறார்.

அவரது கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய மைத்திரியுடன் இதுதொடர்பாக தான் பேசுவதாக உறுதியளித்ததுடன் இன்றுமாலையே மைத்திரியுடன் பேசியிருந்தார்.

இந்தப்பேச்சுக்களின் போது நாளை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் மேற்கொள்ள மைத்திரி இணக்கியுள்ளார்.இந்த புதிய நகர்வுகளின் ஊடாக வெளிப்படும் திருப்பத்தில் தற்போதைய மகிந்த அரசாங்கம் இறுங்குவதற்கான அறிகுறிகள் வெளிப்படுமா? இதுதான் இன்றைய வினா.

இதையும் தவறாமல் படிங்க