வவுணதீவில் சுட்டது யார்? கொழும்பில் கையை சுட்டுக்கொள்ளப்போவது யார்?

  • Prem
  • November 30, 2018
417shares

1974 இல் வெளிவந்த வெள்ளிக்கிழமைவிரதம் என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சிவகுமார் ஜெயசித்ரா ஆகியோருடன் சில பாம்புகளும் நடித்திருந்தன.

அன்றைய வெள்ளிக்கிழமைவிரதப் பாம்பு ஏற்படுத்தும் பயத்தைப்போலவே இலங்கையின் முதன்மைத்தலையாரி மைத்திரி வெள்ளிக்கிழமைகளில் எடுக்கக்கூடிய சில குண்டக்க-மண்டக்க முடிவுகள் குறித்து இன்றைய வெள்ளியிலும் ஒரு அச்சம் இருக்கதான் செய்தது.

இன்றும் ஒரு வெள்ளிக்கிழமை அதனால்; கடந்த 4 வாரங்களில் மைத்திரி செய்த ஒக்டோபர் 26 இல் மகிந்தவை பின்கதவால் பிரதமராக்கியதுபோல அல்லது அந்தபின்கவு ஆட்டம் முழுமையாக சரிப்படாமல் நாடாளுமன்றத்தை கலைத்தது போல இன்றும் ஏதாவது வெள்ளிக்கிழமை புரட்சியை செய்து விடுவாரோ என்பதில் ஒரு குறுகுறுப்பு இருந்தது.

ஆனால் மகிந்தவை இறக்கும் அளவுக்குரிய மாற்றங்கள் ஏதும் இடம்பெற வாய்ப்பு இல்லையென ஹெகலிய ரம்புக்வெல போன்ற அரசபேச்சாளக் கிளிப்பிள்ளைகள் பேசின.

ஹெகலிய கிளிப்பிள்ளைகள் இவ்வாறு பேசினாலும் மகிந்தவுக்கு பதிலாக (ரணில் இல்லாத?) வேறொருமுகத்தை மைத்திரிபிரதமராக நியமிக்கும் காட்சிகள் விரைவில் தெரிந்தால் அதில் பெரும் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஏனெனில் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் கைகொடுக்காமல் விட்டால் இனியும் மைத்திரியால் தாக்குப்பிடிக்க முடியாது. கொழும்பை மையப்படுத்திய இந்த அரசியல் பரபரப்புக்களுக்கு இடையே மட்டக்களப்பு வவுணதீவில்; சிறிலங்கா காவற்துறையை சேர்ந்த இருவர் இன்று அதிகாலை கைகள் கட்டப்பட்;ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்ர்களின் புருவங்களை சற்று உயரவைக்கிறது.

தமிழர்தாயகம் தமது தேசிய நினைவெழுச்சிநாளை கூர்வு செய்த இரண்டு நாடகளில் வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகிலுள்ள ஒரு சோதனைச் சாவடியில் வைத்து இவர்கள் இருவரும் ரி 56 ரக துப்பாக்கிகளினால் சுட்டுக்கொல்லபட்டதும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் எடுத்துச்செல்லப்பட்ட நகர்வும் அசாதாரணமாகவே தெரிகிறது

யார் இதனை செய்திருப்பார்கள்? இவ்வாறான கொலைக்குப்பின்னால் உள்ளவர்களின் நோக்கம் என்ன? கருணா ஆகிய விநாயகமூர்த்தி முரளிதரன் ஓரிரு தினங்களுக்கு முன்னர், தான், மட்டக்களப்பின் கருணா அம்மான் என்பதை, எவரும் மறந்துவிட வேண்டாம் என ருவிற்றிய பதிவுக்கும் இந்த சம்பவத்துக்கும்; இடையில் ஏதாவது முடிச்சு இருக்குமா?

ஆனால் தன்னிடம் அப்படியொரு ருவிற்றர் கணக்கே இல்லையென இப்போது கருணா கணக்குக்காட்டுவதையும் இங்கு கணக்கில் எடுக்கவேண்டும.;

சரி கருணா சம்பந்தப்படவில்லையென்றால் தமிழர்தாயகத்தில் மீண்டும் அதிக ராணுவ சாவடிகள் தோன்ற வேண்டும். இராணுவ மயமாக்கல் இன்னும் தீவிரப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் இது செய்யப்பட்டதா? இல்லையென்றால் இது போதைபொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய கைவரிசையா என பல வினாக்களும் இதில் உள்ளன

ஆனால் இந்த சம்பவத்தை மையப்படுத்தி சிறிலங்கா காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையிலான குழுவொன்று உடனடியாக வவுணதீவுக்கு விரைந்த யதார்த்தமானது விசயம் இலேசானது அல்ல என்ற செய்தியை சொல்லியிருக்கிறது.

இவ்வாறு கிழக்கில் ரி 56 வேட்டு பரபரப்புகள் தொற்றிக்கொள்ள கொழும்பு அரசியலில் இடம்பெற்று வரும் அழுகாச்சிஆட்டங்களில் ஏதோ ஒரு பரபரப்பு நகர்வு விரைவில் இடம்பெறக்கூடும் என்பதை சமகால பரபரப்புகள் காட்டுகின்றன. கடந்த ஒக்டோபர் 26 இல் மகிந்தவை கொலுவேற்றியபோது அந்தநகர்வில் எவ்வாறு எஸ்.பி திசாநாயக்கா என்ற சூத்திரதாரியின் பங்கு இருந்ததோ அதேபோல இப்போது மகிந்த அணியில் இருந்தாலும் அதிலிருந்து வெட்டியாடிவரும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் சூட்சுமங்கள் தெரிகின்றன.

நேற்றுக்காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் சபாநாயகர் கரு ஜயசூரியாவை நோக்கி மைத்திரியிடம் இது தொடர்பாகப் பேசுங்களேன் என்றார்.

என்னே ஆச்சரியம்! அதற்கு அப்படியே ஆகட்டும் என பதிலளித்த கரு ஜயசூரியாவை நேற்றுமாலையே மைத்திரியை சந்தித்தார். பேசினார்.

அதற்குப்பின்னர் இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஐக்கிய தேசிய முன்னணித்தலைவர்களுடன் தனித்தனியாக மைத்திரி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தற்போதை அரசியல்நெருக்கடிக்கு தீர்வு காண்பதே இந்த சந்திப்புக்களின் கருப்பொருளாக இருந்தது. இதனால் மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்புத்;தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிப்பட முன்னர் ஒரு பரபரப்பு நகர்வு அரங்கேறுவதும் சாத்தியமே.

இதேசமகாலத்தில் மஹிந்த அரசாங்கத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக்கோரி ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகத்தாக்கல் செய்த றுசவை ஞரழ றுயசசயவெழ எனப்படும் சகல உரிமைப்பேராணை மனு மீது (றிட்மனு) இன்று நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டது மீண்டும் அடுத்தவாரம் ஒத்திவைக்கபட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும்

இதற்கும் அப்பால் மகிந்தவை கொலுவேறமுன்னர் ஒக்டோபர் 26 க்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும் அமைப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிக்கு ஒரு கடித்தை அனுப்பியதும் இதில்கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்பங்கள் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில், நாடாளுமன்றக்கட்டடத் தொகுதியில், இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றதாக கொழும்புப்பட்சிகள்கூறியிருக்கின்றன. இவர்களிருவரும் என்ன பேசினார்கள்? ஏது பேசினார்கள்? என்ற விபரங்கள் இதுவரை கமுக்கமாகவே உள்ளது.

மஹிந்த இன்று நாடாளுமன்றவளாகத்தில் தென்பட்டாலும் அவரை துதிபாடும் உறுப்பினர்ளோ இன்றைய அமர்வுகளை புறக்கணித்தனர். எனினும் இன்றையஅமர்விலும் விடாக்கண்டர்களாக செயற்பட்ட எதிர்த்தரப்பு அரசாங்கத்துக்கு எதிரானநிதிஒதுக்கீடுகளில் மீண்டும் ஒரு முறை துண்டாடலை செய்தது.

பிரதமரின்செயலாளர் அரசநிதியை பயன்படுத்துவதற்குரிய அதிகாரத்தை துண்டாடும்வகையில் நேற்றும் இதேபோன்ற ஒருபிரேரணை நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய பிரேரணை, 122வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் அடுத்தவாரம் மீண்டும் கூடும்வேளை மைத்திரியால் நாடாளுமன்றம் கலைக்கபட்டநகர்வு அரசியலமைப்புக்கு ஏற்புடையதா? இல்லையா என்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஆரம்பித்திருக்கும் என்பதையும் இங்கு நினைவூட்டவேண்டும்.

சரி இறுதியாக இந்தவார இறுதியில் ஏதாவது அரசியல் விசேஷங்கள் இருக்குமா? நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் இதனைத்தான் இப்போதைக்கு சொல்லமுடியும்.

இதையும் தவறாமல் படிங்க