அங்காளி பங்காளிகளின் தேர்தல் ஆட்டம்!

  • Prem
  • January 03, 2019
38shares

புத்தாண்டுக்கொண்டாட்டங்கள் யாவும் இனிதான நிறைவு பெற்றுவிட்டன. பெரும்பாலான இலங்கையர்களும் 2019ஆண்டுக்குரிய தமது வழமையான இயங்கியலுக்குள் நுழைந்துவிட்டார்கள்.

இலங்கையிலும் 12 மாதங்களுக்குரிய 2019ஆம் ஆண்டின் நிகழச்சி நிரல் ஆரம்பித்த நிலையில் அந்தத்தீவைப் பொறுத்தவரை இந்தவருடத்தில் எந்தத்துறையினருக்கு முக்கியம் இருக்கிறதோ இல்லையோ அரசியல்வாதிகளுக்கு இது மிக முக்கியமான வருடம்.

பலமான ஊகிப்புக்களின் அடிப்படையில் நோக்கினால் 2019ம் ஆண்டென்பது தேர்தல்கள் இடம்பெறக்கூடிய ஆண்டாகவே நோக்கப்படுகிறது. இலங்கையைப்பொறுத்தவரை தேர்தல் திருவிழா என்பது எப்போதும் தனித்துவருவதில்லை. மாறாக அதுஅரசியல் அங்காளிபங்காளிகள் வழங்கும் அரசியல்நெருக்கடிகளையும் கூடவே இழுத்துவருவதே வழமை.

ஆகையால் இந்தவருடம் பரபரப்பான அரசியல் காட்சிகள் நிறைந்த ஆண்டாகவே அமையக்கூடும். இதன் முதலாவது அறிகுறியை முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் ஓரளவு காணமுடிந்தது.

மைத்திரி மகிந்த ஜோடிகள் கடந்த ஒக்டோபர் இறுதியில் ஏற்படுத்திய அரசில் குளறுபடிகளுக்குப்பின்னர் ஒருவாறு கடந்த 20ம் திகதி மீண்டும் ரணில் அரசாங்கத்தின் புதியஅமைச்சரவை நியமிக்கப்பட்டது. அதன் பின்னர ஒப்புக்குச்சப்பாக அன்றே சிலநிமிடங்கள் மட்டும் தாக்குப்பிடித்த குறுகிய அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுமட்டும் இடம்பெற்றது.

ஆனால் அதன் பின்னர்வந்த 8 நாட்களுக்கிடையில் நியமனம்பெற்ற அமைச்சர்களுக்குறிய விடயங்கள் தொடர்பான வர்த்தமானி எதனையும் மைத்திரி வெளியிடவில்லை. அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு விடுமுறைசென்றார்.

சிறிலங்காவின் அரசியலமைப்பின்படி ஒவ்வொரு அமைச்சகத்தின் கீழ், எந்தெந்த பொறுப்புகள் அல்லது நிறுவனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை, அரசதலைவர்தான் தீர்மானிப்பார்.

ஆனால் அமைச்சர்களுக்கு நியமனங்களை வழங்கினாலும் சுமார் 8 நாட்களாக மைத்திரி இதனைச்செய்யவில்லை. இதனால் இந்த 8 நாட்களும் அமைச்சுக்களை வைத்திருந்த அமைச்சர்கள் தமக்குரியகடமைகள், விடயதானங்கள் தமது அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களை துல்லியமாக தெரியாது திணறிணர் .இவ்வாறான ஒரு வர்த்தமானி அறிவித்தலை அரசதலைவரே வெளியிடவேண்டும் என்பதால் கடந்த வெள்ளிநள்ளிரவு இந்தவர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்படும்வவரை அமைச்சர்களால் தமது கடமைகளை பெரிதாக செய்யமுடியவில்லை.

ஆனால் இந்த இடத்தில் ஒரு விடயத்தை அவதானிக்கவேண்டும புதியஅமைச்சர்களை நியமித்தும் அவர்களுக்குரிய பொறுப்புகளை அதிகாரபூர்வமாக்குவதற்குரியவகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றைப் பிறப்பிக்காமல் மைத்திரி இழுத்தடித்த நகர்வு நிறைவேற்று அதிகாரம் சார்ந்ததென்பதை நினைவூட்டலாம்.

ரணிலுக்கு மீண்டும் ஒரு முறை தனது அதிகாரத்தைகாட்டவும்நிறைவேற்றதிகாரம் கொண்ட முகத்தை முறைத்துக்கொண்டு, சுலபமாக அரசாங்கத்தை நடத்தமுடியாது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியீட்டை மைத்திரிஇழுத்தடிப்புச்செய்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்தவிடயத்தில் பந்தை ரணிலைநோக்கி அடித்த மைத்திரி எந்தெந்த அமைச்சின்கீழ் எந்தெந்த அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் வரவேண்டும் என்ற பட்டியலை பிரதமரே தனக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த ரணில் வருட இறுதியில் உங்களுக்கு நிறைய வேலைகள் இருந்திருக்கும். அதைக் கருதிதான் தான் அனுப்பவில்லையெனக் கூறி புதிய பட்டியலை ஒப்படைத்தார்

ஆனால் கடந்த வெள்ளியன்று அமைச்சர்களுக்குரிய நிறுவனங்கள் வழங்படும் வர்த்தமானி பிறப்பிக்கபட்டபோது அதில்சிலவற்றை மைத்திரி தனக்காகவும் ஒதுக்கியிருந்தiதை வெளிப்படையானது.

சிறிலங்காவின்முப்படையினர், சிறிலங்கா காவற்துறைதிணைக்களம் மற்றும் அரசஅச்சகக்கூட்டுத்தாபனம் ஆகியவை பாதுகாப்புஅமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு, மைத்;திரியின் கீழ் வந்தன.

இதற்கும்அப்பால் ரவிகருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரிடமுள்ள அமைச்சகங்களுக்கு குறைந்தளவு நிறுவனங்களே வழங்கப்பட்டன

ஆகமொத்தம் அந்த 51 நாள் குழப்பங்களின் முடிவில் ரணிலின்அரசாங்கம் உருவானாலும் மைத்திரி முழுமையாக பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பு அல்ல அது தனக்குரிய காலநேரத்தை பயன்படுத்தமுனையும் நிறைவேற்றதிகாரம் கொண்ட இச்சாதாரிப்பாம்பு.ஆகையால் இவ்வாறான நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்து ஓடவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ள ரணிலுக்கு தனது தரப்பில்உள்ள குடைச்சல்களையும் சமாளிக்கவேண்டிய நிலையும் உள்ளது

குறிப்பாக அமைச்சுப்பதவிகளைக்கோரி அடம்பிடிக்கும் முகங்களை ரணில் சமாளிக்கவேண்டியிருக்கிறது.51 நாள் குழப்பங்களின் போது தனது அணியில் நின்றவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதாக ஏற்கனவே உறுதி வழங்கப்பட்டதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்துவதற்காக தற்போது ரணில் முயல்கிறார்.ஆனால் இந்த நகர்வுமறுபுறத்தே அவரும் அரசியலமைப்பை மீறுவதான விமர்சனங்களைத்தோற்றுவிக்குமென்பதும் நிச்சயம்.

2019 ஆம் ஆண்டுக்குரிய சிறிலங்காவின் அரசியல்அதிர்வுகளின் கட்டியங்கள் இவ்வாறிருக்கின்றன. தமிழர்தாயகத்தைப் பொறுத்தவரை சிறிலங்காவின் அரசியல்அதிர்வுகளின் அதன்மீது ஏற்படுத்தும் தாக்கங்களைவிட உபரியான பல சவால்கள் உள்ளன.

அவ்வாறான சவால்களில் அண்மையில் வடக்கில் ஏற்பட்டவெள்ளத்தில் சிக்கிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்குத்தேவையான மீள்கட்டுமானம் முக்கியமாக உள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட்ட வடக்கின் வெள்ள இழப்புகள் மொத்தமாக 30 பில்லியன் ரூபாயைதாண்டியதாகவே கணிப்புகள் உள்ளன.தற்காலிக வெள்ள நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதனை மறுப்பதற்கு இல்லை. சுரகிமு தும்ரிய அல்லது தொடருந்து சேவையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பின் சார்பாக தென்பகுதியிலிருந்து சென்ற நிவாரணத்தொடருந்து கூட நேற்று முல்லைத்தீவுக்கும் கிளிநொச்சிக்கும் நிவாரணங்களை இறக்கியது

தமது நிவாரண தொடருந்து பயணம் வெற்றியளித்ததாக தெற்கின் சுரகிமு தும்ரிய அமைப்பு மகிழ்வுறுகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கும் இவ்வாறான நிவாரணங்கள் அவசியமானவை. ஆனால்இவ்வாறான இழப்புகள் தெற்கில் ஒரு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்தால் அங்கு ஏற்படும் தாக்கத்தைவிட வன்னி மாவட்டங்களில் ஏற்படும் தாக்கம் இரட்டிப்பானது என்ற முக்கிய யதர்hத்தம் இங்கு தீவிர கவனத்தில் எடுக்கப்படவேண்டும். பெரும்போர் நகர்த்தப்பட்ட இந்தமாவட்டங்கள் இரண்டும் இன்றுவரை வறுமைநிலையில் இலங்கையின் முன்னணி மாவட்டங்கள்

இந்தவருடம் மே மாதத்துடன் போர்ஓய்வுக்கு வந்து பத்து ஆண்டுகள் முடிவடைவதான பதிவுஇருந்தாலும் இந்தமாவட்டங்கள் இன்றுவரை உதிரப்பழிமீட்சியை அல்லது பொருளாதாரமீட்சியைபெறவேயில்லை.

ஆகையால் தமிழர்தாயகத்தில் அரசியல்செய்பவர்களும் ஒருமித்த அல்லது ஏக்கிய வாதப்பிரதிவாதங்களில் மூழ்கியிருப்பவர்களும் இந்த வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் தமது தாயக முற்றத்தில் நீண்டகாலமாகத்தொடரும் அக புற இன்னல்களை தீர்க்கும் வழிகளை உளசுத்தியாக ஆய்வுசெய்யவேண்டும்.

இது தமிழர்தாயகத்தில் அரசியல்செய்பவர்களும் 2019க்குரிய முதன்மைப்பணியாக இருக்கவேண்டும். இவ்வாறாக 2019இன் தமிழர் செல்நெறிசெல்லுமா? பொறுத்திருந்துபார்க்கலாம்.

இதையும் தவறாமல் படிங்க