தை பிறந்தால் வழிபிறக்கும்! அரசியல் பொங்கலுக்கு வழிபிறக்குமா?

  • Prem
  • January 14, 2019
34shares

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். ஈழத்தமிழர்களுக்கும் இந்த தைபிறப்புடன் அரசியல்வழிகள் பிறக்கின்றனவோ இல்லையோ தைப்பொங்கல் பிறப்பது நிச்சயம்.

அந்த வகையில் பெரியண்ணன் வீட்டிலிருந்து பிரதமர் மோடி முதல் மைத்திரி வரை பொங்கல் வாழ்த்து கூறியபின்னணியுடன் ஈழத்தமிழர் முற்றங்களிலும் பொங்கல்பானைகள் ஏறுகின்றன.

தை பிறந்தவுடன் தமிழர் இல்லங்களில் பொங்கல் உலை கொதிப்பது அவர்களின் பாரம்பரியம். ஆனால் தைத் திருநாளுடன் நேரடித்தொடர்பில்லாத பெரும்பான்மையின முற்றத்திலும் சில அரசியல் பொங்கற்பானைகள் தளதளவெனக் கொதிப்பது அசாதாரணம்.

இதில் ஒருபக்கம் புதியஅரசியலமைப்பை மையப்படுத்தி சில பானைகள் கொதிக்கின்றன. மறுபக்கம் இந்தவருட இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் அரசதலைவர் தேர்தல்வேட்பாளரை மையப்படுத்தி மைத்திரி மஹிந்த பானைகளும் தற்போது தனித்தனியாக உலையில் வைக்கப்படுகின்றன.

மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கையும்மஹிந்தவின் பொதுஜன பெரமுன தாமரைமொட்டும் ஒன்றாக இணைந்து கூட்டணிப்பானையொன்றை வைத்து பொங்கலிடலாம் எனவே ஆரம்பத்தில் எதிர்பார்க்கபட்டது.

ஆயினும் இப்போது மைத்திரியே ஏக வேட்பாளரென சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கைகள் அதிர்கின்றன. இவ்வாறு கைகள் அதிர்ந்தாலும் நானும் இந்தக்களத்தில் “உள்ளேன் ஐயா” என கோத்தபாய ராஜபக்ச புதிய வளையத்தை சூசகமாக எறிந்திருக்கிறார்.

வேட்பாளர் தெரிவில் மைத்திரியும் மஹிந்தவும் இவ்வாறு விரிசலடைந்தால் யானைகளின் வேட்பாளருக்கு சுக்கிர திசை அடிக்கவும் கூடும்.

ஆனால் இப்போது இதுவல்ல விசயம். புதிய அரசியலமைப்பு தொடர்பாக சில பானைகள் வீம்புக்கு கொதிப்பது அவதானிக்கப்படவேண்டிய விடயம்

இதனால்தான் அலரிமாளிகையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் தேசிய தைப்பொங்கல் விழாவில் சிறிலங்காவின் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கூட அரசியல் பொங்கல் குறித்துப்பேசியிருக்கிறார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொய்புரட்டுகளை கூறி மக்களை தவறாக வழிநடத்தி நாட்டை அதகளப்படுத்தவேண்டாமென பொங்கலோடு பொங்கலாக ரணிலும் அலரி மாளிகையில் பொங்கியிருந்தார்.

புதியஅரசியலமைப்பின் ஊடாக சிங்களவர்களை காட்டிக்கொடுக்கப்போவதில்லை! பௌத்தத்துக்கான முன்னுரிமையை விட்டுக்கொடுக்கப்போவதில்லை ஒற்றையாட்சியை மாற்றப்போவதில்லை முக்கிய உறுதிமொழிகளை யானே ஏற்கனவே வழங்கியிருக்கும்நிலையில் ஏன் மகிந்த அணி அதகளம் செய்கின்றது என்பதும் அவரது மறுபக்கசெய்தி

ரணிலின் இந்த பொங்கல் செய்திக்கு அப்பால் கடந்த வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தனது உரையைவழங்கிய இரா.சம்பந்தனும் மகிந்தவின் இனவாத தாரை தப்பட்டைகளை கிழித்துத்தொங்கவிட்டிருந்தார்.

இதேபோலவே ஜே.வி.பி புதிய அரசியலமைப்பு தேவையெனக்கூறினாலும் வடக்குக்கு, காவற்துறை மற்றும் சட்டஅதிகாரங்கள் கோரப்பட்டால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கூறியிருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

ஆனால் புதிய அரசியலமைப்பின் வரைவு கூடவராதநிலையில் இவ்வளவு குரல்கள் ஒலித்தாலும் மகிந்ததரப்போ ரணில் ஏதோபுதியஅரசியலமைப்பின் வரைவையே சமர்ப்பித்ததுபோலவேஇதனை ஊதிப்பெருப்பிக்க முயல்கின்றது.

கடந்த வெள்ளியன்று உண்மையில் ரணில் செய்தது என்ன? அரசியலமைப்புச்சபையின் வழிநடத்தல்குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் ரணில் சில அறிக்கைகளை சமர்ப்பித்தார் அவ்வளவுதான்.

அதாவது அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின்அறிக்கையையும் இதுதொடர்பான உப குழுக்களின் அறிக்கைகளையும் இடைக்காலஅறிக்கை தொடர்பான விவாதங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அறிக்கைகளையே ரணில் கையில் எடுத்திருந்தார்

அத்துடன் புதியஅரசியலமைப்பில் அடுத்து என்ன செய்யவேண்டுமென்பதை அரசியலமைப்புச்சபையே தீர்மானிக்க வேண்டுமெனக்கூறி நழுவியிருந்தார்.

ஆனமொத்தம் புதியஅரசியலமைப்புகுறித்த விடயத்தில் இன்னமும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பது யதார்த்தமானது தமிழர்தரப்பில் சுமந்திரன் கூறுவது போல இன்னமும் 2 வாரங்களில் வரக்சுடிய சிறிலங்காவின் சுதந்திர தினத்துக்குமுன்னர் புதியஅரசியலமைப்புகுறித்த வரைவு வருவதற்கும் சாத்தியங்கள் இல்லை.

இதற்கிடையே புதியஅரசியலமைப்பை மையப்படுத்தி கடந்த வெள்ளியன்று கொழும்பில் வெளிப்பட்ட அதிர்வுகளின் தாக்கம் அதற்கு மாறுநாள் சனிக்கிழமையன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிரொலித்த்து

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வும் தமிழ்த்தலைமையின் வகிபாகமும் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த அரசியல் கருத்தரங்கில் புதிய அரசியமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் சுமந்திரனின் உரை சில விடயங்களை சொல்லியது

புதிய அரசிமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென்றவர் தமிழர்கள் தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாதென்றார். அத்துடன் ஏக்கியஇராச்சிய என்ற பதம், ஒருமித்த நாடுதான் என்பதை கூறிக்கூறியே தான் சலித்துவிட்டதாக குறிப்பிட்டவர் உண்மையைப் பேச வேண்டும.; மென் வலுவை கடைபிடிக்க வேண்டுமெனவும் சொன்னார். கடந்த சனியன்றுயாழில் சுமந்திரன் இவ்வாறு ஏக்கிய இராச்சிய ஒருமித்த நாட்டைதொட்டதால் அதன் அதிர்வு அரசியலமைப்பு நிபுணர்குழு தலைவர் லால் விஜேநாயக்னாவையும் எட்டியதால் அவரும் இப்போது எதிர்வினையாற்றினார்

இடைக்கால வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏக்கிய இராச்சிய ஒருமித்த நாடு பதங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமாயின், அதுகுறித்து கலந்துரையாடித்தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவர்சொல்லியுள்ளார்

ஆகமொத்தம் புதியஅரசியலமைப்பில் உள்ளவிடயங்களை தமிழ்மக்கள் இதுவரை துல்லியமாகஅறியவில்லை. ஆயினும் தெற்கில் இது பொங்கலோ பொங்கல் என அரசியல்ரீதியில் பொங்க வைக்கப்படுவது மட்டும் தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க