சிறிலங்காவின் பிரிய..பிரியங்கவும்.. வெஸ்ற்மினிஸ்டர்நீதிமன்ற கவசப்பிரிப்பும்

  • Prem
  • January 22, 2019
62shares

பனைமரத்திலே தேள்கொட்ட தென்னமரத்திலே நெறிகட்டும் என்பார்கள். அதுபோல லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று தேள்கொட்ட கொழும்பில் உடனடியாக நெறிகட்டிவிட்டது.

சிறிலங்கா ராணுவத்துக்குப்பிரியமான பிரியங்க என்ற பிரிகேடியரை(பிரியங்க பெர்னாண்டோ) கைது செய்யுமாறு வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று ஒரு உத்தரவைபிறப்பித்தது. ஆயினும் அவ்வாறெல்லாம் பிரியங்கவுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கமுடியாதென கொழும்புகூறியிருக்கிறது. பிரித்தானியாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நேற்று மாலையே இந்தக்குரல் வந்ததிருப்பதாக தெரிகிறது

நாடுகளுக்கிடையிலான இராஜதந்திரஉறவுகளுக்குரிய வியன்னா ஒப்பந்தப்படி ராஜதந்திரப்பணியிலுள்ள அதிகாரி ஒருவருக்கு எதிராக சட்டநகர்வுளை எடுக்க முடியாதென்ற வியாக்கியானமும் கூடவே வந்திருக்கிறது.

பிரியங்க குறித்த அதிர்வுகள் நீங்கள் அறிந்ததே. கடந்த ஆண்டு சிறிலங்காவின் சுதந்திர தினமன்று லண்டனிலுள்ள சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயத்திற்கு வெளியே தமிழ்மக்கள் அறவழிபோராட்டமொன்றை நடத்தியபோது இராணுவ சீருடையில் நின்றபடி அவர் வெளிப்படுத்திய கழுத்தறுப்பு சைகையை மையப்படுத்தியவிடயம் இது.

இதன்பின்னர் இதுதொடர்பான வழக்கு ஒன்று தாக்கல்செய்யபட்டபோது பிரித்தானியாவின் பொதுஒழுங்குசட்டப்பிரிவுகளில் இரண்டு பிரிவுகளை மீறிய குற்றத்தில் இவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு பிடியாணையை பிறப்பித்தது. ஆனால் எதிர்பார்கப்டடதைப்போலவே லண்டன் உயர்ஸதானிகராலயம் ஊடாக கொழும்பின் எதிர்வினைகள் வந்துள்ளன. இதற்கும் அப்பால் தமது பிரிகேடியருக்கு எதிராக லண்டனில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை குறித்த தமது தரப்பும் சட்டவாளர்களின்ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் என சிறிலங்கா இராணுவத்தளபதியும் கூறியுள்ளார்.

இனியென்ன கரும்புதின்னக்கூலியாவேண்டும்? சிங்கள கடும்போக்கு குரல்கள் இனி இந்தவிடத்தை கரும்பாக சுவைத்து கூக்குரலிடும். இவ்வாறான குரல்களுக்குத்தோதாக இன்று முதல் எதிர்வரும் வெள்ளிவரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளும் இடம்பெறவுள்ள

இனவாதம் மதவாதம் போன்ற தெற்கின் போதையூட்டல்களால் பாடாவதியாக இழுக்கும் இலங்கையின் தெற்கில் இனி இந்த விடயமும் எதிர்ரொலிக்கும்

இதற்கிடையே இலங்கையின் சமகால அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருட்பாவனைக்காக மைத்திரி நகர்த்தும்செயற்திட்டத்தையும் சற்று நோக்கவேண்டும்

இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று முள்ளிவளை வித்தியானந்தகல்லூரியில்; நடைபெற்றபோது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும்வகையில் நாடளாவிய சிறப்பு தொலைபேசிஇலக்கம் ஒன்றும் நாட்டுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது

இலங்கையின் இளையசமுகத்துக்கு அதுவும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகுறித்த விழிப்புணர்வுக்கு இவ்வாறான ஒரு செயற்திட்டம் அவசியமென்பதில் ஐயமில்லை. தமிழர்தாயகம் உட்பட இலங்கையின்; சமகாலம் போதைபொருட்களால் சீரழிக்கப்படுகின்றது.

இதில் ஒரு முக்கியவிடயமாக வடக்கில் இருந்து தான் முழுநாட்டுக்குமே போதைப்பொருள் கடத்தப்படுவதான ஒரு குற்றச்சாட்டு அண்மைய நாட்களில் முன்வைக்கப்படுவதையும் அவதானிக்கவேண்டும்.2009 க்கு முன்னர் ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தின் முன்னரங்க நிலையாக இருந்த பெருமைமிகுந்த நிலப்பரப்பொன்று 10 வருடங்களுக்குள் இவ்வாறு ஒரு அவலஅடையாளத்தை சுமப்பது காலக்கொடுமை.

ஆனால் இந்தகுற்றச்சாட்டை உருப்பெருக்கிபார்த்தால் அதில் தமிழர்தாயக்த்தின் வடக்கில் நிலைகொண்டுள்ள சீருடைகளுக்கும் இடையிலான வேறுகதைகளும்வரும்.

இலங்கையில் போதைப்பொருள்பாவனையை தடுக்க ஒரு தேசிய செயற்திட்டம்; இருந்தாலும் தமிழர்களுக்குரியஅரசியல்உரித்துக்களை தடுக்கும்போதையை தடுக்க வழியில்லை. அந்தபோதையில் தீவிரமாக சிக்கிய விடயமாக இலங்கைக்குரிய புதிய அரசியலமைப்பு என்றபேசுபொருள் மாறியுள்ளது.

கடந்த சிலநாட்களாகவே இந்தவிடயத்தை மையப்படுத்தி சிறிலங்காவின் அரசியல்முகம்கள் பௌத்த பீடங்களின் கால்களில் தடாலடியாக விழுந்து அரசியலமைப்பு குறித்த கதைகளை பேசிவருகின்றன.

புதிய அரசியலமைப்பின் அடுத்தகட்டம் எப்படிப்போகுமென்பது தனக்கே தெரியாதென அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ரணிலே கற்பூரத்தில் அடித்துச்சத்தியம் செய்யாதகுறையாக கூறுகிறார்.

தமிழர் தரப்பில் இருந்து சுமந்திரன் ஒருமித்தநாடு குறித்து என்னதான் கூறினாலும் டி.எஸ்.சேனாநாயக்க ஜே.ஆர்.ஜயவர்த்தன ரணசிங்க பிரேமதாஸ மற்றும் டி.பி.விஜயதுங்க ஆகிய சிங்கங்கள் சிங்கிளாக நின்றதுபோல தானும் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ரணில் கூறுகிறார்.

இவ்வாறான முக்கிய குரல்களுக்கு அப்பால் கடந்தவாரம் பௌத்தபீட மஹாசங்கங்களின் காலில் தடாலடியாக விழுந்த லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் சென்ற யானைகளின்அமைச்சக குழாம் புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை கட்டுகளை சங்கங்களிடம் சாஸ்டாங்கமாக கையளித்து திரும்பியது. ஆனால் அதற்குரிய எதிர்வினைகள் அங்கிருந்து எவ்வாறுவந்தன?

இதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் தற்போது மக்கள் முகங்கொடுத்துள்ள பொருளாதாரப்பிரச்சினைகளுக்கு முன்னுரிமைவழங்குங்கள் முதலில் தேர்தலை வையுங்கள் அப்புறம் புதிய அரசியலமைப்பைப்பார்க்கலாமென மல்வத்து பீடம் மங்களம் பாடிவிட்டது.

புதிய அரசியல்யாப்பு அல்லது அதன் திருத்த சட்டமூலம் இதுவரை தயாரிக்கப்படவில்லை. மாறாக இதுவரை கலந்துரையாடப்பட்டவிடயங்களில் இடைக்காலஅறிக்கைஒன்று மட்டுமேதயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நகர்வுகள்யாவும்; புதியஅரசியலமைப்பாக திரள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில்இரண்டு பெரும்பான்மைப்பலம் தேவை. அவ்வாறான ஒரு பெரும்பான்மையை பெறும் பலம் எமக்கு இல்லையென யானைகள் தற்போது கைவிரிக்கின்றன.

யதார்த்தம் இவ்வாறாக இருக்க பெப்ரவரி 4 இற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்துக்கு வருமென கூட்டமைப்பில் இருந்து சுமந்திரன் போகிற போக்கில் ஒரு விடயத்தை சொல்லியிருப்பதால் இதுதான் தாயம் எனக்கருதும் மகிந்ததரப்பு இந்தவிடயத்தில் தமது ரட்டபெதனவா(Rata bedanawa)அல்லது நாட்டைபிரிப்பதான பொய்ப்பீரங்கிளை உமிழ்;ந்து வருகின்றது. ரணிலும் சுமந்திரனும் எடுக்கும் இரகசிய முடிவுகளை செயற்படுத்துவதற்கு இடமளிக்கப்படாதென, மகிந்தவின் ஷெல் அடிப்பு தொடர்கிறது

ரணில் விக்கிரமசிங்கவும் சுமந்திரனும் மூவின மக்களையும் ஏமாற்றுவதாக மகிந்தஷெல்கள் வெடித்துச்சிதறுகின்றன. ஆகமொத்தம் இலங்கையின் தேசியபோதைப்பொருள் செயற்திட்டத்தின் ஊடாக இளைய சமுகம் போதையின் தீமைகுறித்து பட்டறிவுகொண்டாலும் இலங்கைத்தீவு சுதந்திரமடைந்தாக குறிப்பிடப்படும் காலமுதல் இனவாதஅரசியல் பாதையில் பயணிக்கும் தெற்கின் அரசியல்வாதிகள் தமது பழைய போதையிலிருந்து சுலபமாக மீளப்போவதில்லையென்பது நிருபணமாகிறது.

நேற்று முல்லைத்தீவில் வைத்து போதையை எதிர்ப்போம் என கைகளை முன்பாக சத்தியப்பிரமாணம் செய்த மைத்திரியால் கூடதமிழருக்குரிய தூயஅரசியலுக்குரிய சத்தியப்பிரமாணத்தை செய்யமுடியாது. ஏனெனில் அவ்வாறான அரசியல் பாதை ஒருபோதும் அவருக்கும் அசௌகரியமாக இருந்ததில்லையே.

இதையும் தவறாமல் படிங்க