த.தே.கூட்டமைப்பு, த.தே.ம.முன்னணியை நிராகரிக்கின்றார்களா தமிழ் மக்கள்? கருத்துக்கணிப்பு எழுப்பும் கேள்விகள்!!

310shares

இன்றைய காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தலைமைதாங்கத் தகுதியான தரப்பு எது என்ற கேள்விக்கு, தற்பொழுது உள்ள முக்கிய தமிழ் கட்சிகளை நிராகரித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ் மக்கள்.

ஐ.பி.சி. தமிழ் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், த.தே.கூட்டமைப்பு, த.தே.மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் முன்னணி, முன்நாள் போராளிகள் கட்டமைப்பு, ஈ.பி.டீ.பி, ரீஎம்.வி.பி என்று பல கட்சிகள் முன்னிறுத்தப்பட்டிருந்த போதும், இவர்கள் அவைரையும் தவிர்த்து, குடிசார் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளே இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களைத் தலைமைதாங்கத் தகுதியான தரப்பு என்று வாக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில், குடிசார் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் என்ற பதிலுக்கு 35.1 வீதமானவர்கள் - அதாவது 7500 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

த.தே.மக்கள் முன்னணி 20.64% (4410) வாக்குகள், த.தே.கூட்டமைப்பு 19.71% (4212) வாக்குகள், ஈ.பி.டீ.பி 6.18% (1321)வாக்குகள், முன்நாள் போராளிகள் கட்சி 13.25% (2857)வாக்குகள், ரீ.எம்.வி.பி 3.25% (694)வாக்குகள், தமிழ் மக்கள் முன்னணி 1.75% (374) வாக்குகள் பெற்றுள்ளார்கள்.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி போன்ற முன்னணி தமிழ் கட்சிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க ஆரம்பிக்கின்றார்களா என்ற கேள்வியை எழுப்புகின்ற அதேவேளை, புத்திஜீவிகளைக் உள்ளடக்கிய புதிய கட்சி ஒன்றின் தேவையையும் இந்த வாக்களிப்பு வெளிப்படுத்தி நிற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க