ஜெனிவாவில் எது நடக்குமோ…அது நடக்கும்!

  • Prem
  • February 14, 2019
48shares

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!எது நடக்கிறதோ>அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கும். இது மகாபாரதத்தில் பாண்டவரணி கிருஸ்ணரால் அர்ச்சுணனுக்கு கூறப்பட்டதாக கூறப்படும் கீதா உபதேசத்தின் ஆரம்பவரிகள்.

இப்போது> ஜெனிவா பலெ தெ நசியோன் அரங்கில்> மனிதஉரிமைப்பேரவையின 40 வது அமர்வு ஆரம்பமாகும் நிலையில் இலங்கை தொடர்பாக எது நடக்கஇருக்கிறதோ அதுவும் நடக்கும் என்பது தெரிகிறது.

இதற்குரிய முன்னோட்டங்களாக ஜெனிவாவில்சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கப்படுமென்பதை மனிதஉரிமைப்பேரவைக்குரிய பிரித்தானிய பிரதிநிதி யூலியன் பிறெயித்வெயித் சாடைமாடையாக (Julian Braithwaite) உறுதிப்படுத்தினார்.

அதன்பின்னர் ஐ. நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்று இந்தவாரம் இலங்கையில் தென்பட்டது.

ஆகமொத்தம் இலங்கைத்தீவில் நகர்த்தப்படுவதாக கூறப்படும் நல்லிணக்கம் மற்றும் தமிழ்மக்களின் உதிரப்பழிதொடர்பான விசாரணைகளை மையப்படுத்தி>2017 இல் இடம்பெற்றதைபோலவே இலங்கை தொடர்பான நகர்வுகள் மனிதஉரிமைப்பேரவைஉறுப்பு நாடுகளின் எதிர்ப்பு மற்றும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்படக்கூடும்.

ஆனால் இவ்வாறான ஒருகாலஅவகாசம்வழங்கப்படும்காலம் இலங்கைத்தீவின் தேர்தல் காலமென்பதால் இந்தவிடயங்களில் முறையான நகர்வுகளை செய்வதற்குரியசாத்தியங்கள் இல்லையென்பது தனித்துவமான புரிதலுக்கு உரியவிடயம்.

ஒவ்வொரு முறையும் மனிதஉரிமைபேரவை ஜெனிவாவில் கூட முன்னர் இவ்வாறுதான் நடக்கிறது. கடந்தவருடயூன் மாத அமர்வுக்கு முன்னர் OMP அல்லது Office of Missing Persons எனப்படும் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணியக நகர்வுகள் தூக்கத்தில் இருந்து விழிக்க வைக்கப்பட்டிருந்தன.

இந்தமுறை அவ்வாறாகவே எதிர்வரும் 25 ஆந்திகதி மனிதஉரிமைபேரவைஅமர்வுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வுசுஊ ரி.ஆர்.சி வுசரவா யனெ சுநஉழnஉடையைவழைn ஊழஅஅளைளழைn எனப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய பொறியை அல்லது பொறிமுறையை பிரதமர் ரணில்விக்ரமசிங்க எடுத்திருக்கிறார்.

தாமதிக்கபடும் நீதி மறுக்கபடும் நீதிக்கு சமன் என்பது தமிழர்தாயகத்தில் உறுதிப்படுத்தப்படுவதன் புதியஅவலமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த வேலு சரஸ்வதி என்ற அன்னையொருவர் இந்தவாரம் உயிரிழந்த பின்னணியில் இவ்வாறான தாமதச் சூத்திரங்கள் ஆடி அசைந்து வருகின்றன.

உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழு ((Truthcommission) அல்லது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truthand reconciliation commission)எனப்படும் இந்தப்பொறிமுறை உலகுக்கு புதிய ஒரு பொறிமுறையல்ல

ஜேர்மனியில் நாசிகளை நீதியின் முன்னால் நிறுத்திய நூரன்பேர்க் தீர்ப்பாயத்திலிருந்தே இந்தக்கருத்தியல் உலகுக்கு பரீட்சயமானது.

மேற்குலகில் கனடா மற்றும் ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் கூட இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கபட்டு பாதிப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்குவது குறித்து ஆராயப்பட்டன. சிலி, பனாமா போன்ற தென்னமரிக்க நாடுகளில் கூட ராணுவசர்வாதிகாரிகள் செய்த கொடுங்கோன்மையில் நடந்த உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுக்களாக இவை பதிவாகின.

ஆயினும் தென்னாபிரிக்காவில் நிறுவப்பட்ட உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுதான் ஒரு முன்மாதிரிபொறிமுறையாக கணிக்கப்படுகிறது

தென்னாபிரிக்காவின் இனவெறி சக நிறவெறி ஆட்சி அதிகாரம் அகற்றப்பட்ட பின்னர் ஆட்சியில் இருந்தஅரசாங்கம் செய்த தவறுகளைக் கண்டறிந்து அதிலுள்ள பிரச்சனைகளைத்தீர்க்கஉதவிய ஒருகுழுவாக இந்த உண ஆணைக்குழுவரலாற்றில் பதிவானது.

இப்போது ரணிலும், தென்னாபிரிக்கப்பாணியில் இலங்கையிலும் ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு> தனது அமைச்சரவையிடம் அனுமதி கோரும்வகையில் ஒரு அமைச்சரவைப்பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் நடந்த நகர்வுகளே இங்கு முக்கியமானவை.

ரணில் சமர்ப்பித்தஇந்தப்பத்திரத்தை பாதுகாப்புஅமைச்சர் என்றவகையில், தனது நுனிவிரலால் எடுத்துப்பார்த்த முதன்மைத்தலையாரிமைத்திரி இதனை ஆய்வு செய்வதற்கு தனக்குகாலஅவகாசம் தேவையென காயவெட்டி அதற்குரிய அனுமதியை உடனடியாக வழங்க மறுத்தார்.

மைத்திரியுடன் ஏனையவிடயங்களில் முரண்படும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்தவிடயத்தில் மைத்திரியின் நகர்வுக்கு ஒத்தூதி ஆமாம ஆமாம் இதற்கு காலஅவகாசம் தேவையென்றார்.

சரி தென்னாபிரிக்காவுக்குப் பொருந்திய இந்தப்பொறிமுறை

ஏன் இலங்கையில் அச்சத்துக்குரிய ஒரு விடயமாக நோக்கப்படுகிறது? அதுவும் அந்தத்தீவில்போர் முடிந்து 10 ஆண்டுகளாகிவிட்ட நிலையில்.

அதற்குக்காரணம் உள்ளது. ஏனெனில் இவ்வாறு ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டால் தமிழ்;மக்களின் உதிரப்பழிதொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் அதன் முன்னால் தோன்றி நடந்தது என்ன என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும்.

தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை இவ்வாறான ஆணைக்குழுவில் தோன்றியவர்களில் பலர் தாம்செய்த குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் கூறிய ஒப்புதல்களை கேட்டு ஆணைக்குழுதலைவராக பேராயர் டெஸ்மன் டுடு முகம் புதைத்து அழுதகாட்சிகள் பிரபலமானவை.

இவ்வாறான ஒரு ஒப்புதல் நிலைமை சிறிலங்கா படைத்துறை முகங்களிடமிருந்து கிட்டுமா? இந்தியாவில் அண்மையில் சுற்றிய மஹிந்த கூட அங்கு வைத்து என்ன சொல்லியிருந்தார்

இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் படையினர் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரின் புதல்வன் பாலச்சந்திரன் இசைப்பிரியாஆகியோரை கூடஇராணுவத்தினர் சுட்டுக்கொன்றமைக்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது எனத்தானே சொல்லியிருந்தார்

பாலச்சந்திரன் இசைப்பிரியா ஆகியோர் சந்தித்த மிக குருரமாக அவலமாக துன்பியலுக்கு யார் காரணம் என்பதை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் பகிரங்கப்படுத்திய நிலையில் மகிந்த கூறும் கருத்து இது.

இவ்வாறான நிலையில் தென்னாபிரிக்க பாணியில் இலங்கையில் ஒரு ஆணைக்குழு அமைக்கபடுவதற்கு மைத்திரி பச்சைக்கொடி காட்ட மறுப்பதன் காரணத்தை சுலபமாகவே புரிந்துகொள்ளலாம்.

இதற்குள் இன்னொரு விடயமும் உள்ளது ஐ.நா மனிதஉரிமைபேரவையை சமாளிக்க இவ்வாறான ஒரு நகர்வை ரணில் எடுக்கக்கூடும்.

ஆனால் தேர்தல் ஆண்டில் இவ்வாறு நகர்வது தனக்கும் சேதாரத்தை தரும் என்பதால் நீ அடிப்பது போல அடி நான் அழுவது போல நடிக்கிறேன் என்ற சூத்திரத்துடன் கூட மைத்திரி ரணில் ஆகிய இரண்டு முகங்களாலும் இது ஒரு கூட்டு ஆட்டமாக கூட நகர்த்தப்படலாம்.

இதையும் தவறாமல் படிங்க