மறப்போம்!.. மன்னிப்போம்!! போர்க்குற்றங்களின் ஒப்புதலா? பசப்புதலா?

  • Prem
  • February 19, 2019
62shares

ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாள்பாள்! என்ற வாய்மொழி வழக்கு நீங்கள் அறிந்ததே! அதுபோல சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மறப்போம். மன்னிப்போம்! கருத்தியல் ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்பாள் பாணியில் அலசப்படுவதை நோக்க முடிகிறது.

ரணில் கூறிய இந்த மறப்போம் மன்னிப்போம் ஒலிவ்கிளையானது தூரத்தில் இருந்து பார்க்கும் கண்களுக்கு கொஞ்சம் நல்லிணக்ககுளிர்ச்சியாக இருக்கக்கூடும். ஆனால் கிட்டப்பார்த்தால் மிக இறுக்கமானது.

இலங்கைத்தீவில் ஒரு நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் போர்குற்றங்கள் குறித்து தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்க முடியாது எல்லாவற்றையும் மறக்கவேண்டும். ஆகையால் தமிழர்களும் 2009முள்ளிவாய்கால் பேரழிவுவரை நடந்ததையெல்லாம் மறந்துவிடவேண்டும். அவ்வாறாக கொழும்பு அதிகாரமையத்தில் இருக்கும் நாங்களும் தமிழர்களின் தரப்பில் விடுதலைப்புலிகள் செய்ததையும்; மறந்து விடுகிறோம். மன்னித்துவிடுகிறோம். என்பதே ரணிலின் இந்த மறப்போம். மன்னிப்போம் என்பதன் தோராயமான விளக்கம். ஆனால் சிறிலங்காப்படைத்துறையினர் போர்க்குற்றங்ளை செய்தனர் என்பது ரணிலின் ஒப்பபுதலே அல்ல.

ஆனால் ரணிலின் மறப்போம். மன்னிப்போம் வந்தவுடன் வடக்குத்தெற்கில் இருந்து சுமந்திரன் விக்னேஸ்வரன் மகிந்தராஜபக்ச போன்ற அரசியல் முகங்களிடமிருந்து கருத்துக்கள் வந்தன.

எதிர்பார்க்கப்பட்டது போலவே மகிந்த இந்த விடயத்தில் துள்ளிக்குதித்திருக்கிறார். ரணில்விக்கிரமசிங்க நாட்டைக்காட்டிக்கொடுத்துவிட்டதாக எகிறியிருக்கிறார். தினேஸ் குணவர்த்தனாவின் மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது வருடாந்த மாநாட்டில் மைத்திரிபாலசிறிசேனவும் மேடையில் அமர்ந்திருக்க அவர் முன்னிலையில் வைத்து ரணில் நாட்டைக்காட்டிக்கொடுத்துவிட்டதான மகிந்தவின் புலம்பல் வந்தது.

அதுவும் தமிழர்களின் கிளிநொச்சியில்வைத்து போர்க்குற்றம் இடம்பெற்றதாக ரணில் கூறிவிட்டாரே என அவர் அந்தரப்பட்டார். அத்துடன் ரணிலே போர் குற்றத்தை ஏற்றிருப்பதால் இது ஜெனிவாவில் தமிழருக்கு சாதகமாமென கூட்டமைப்பின் சுமந்திரன் கூறியதை கவனத்திலெடுங்கள் சிங்கள மக்களே என அறைகூவினார் அவர். போர்க்காலத்தில் எந்தசந்தர்ப்பத்திலும் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்கள் சில குற்றங்களை செய்தால் அவை போர்க்குற்றங்களே அல்ல என்றார்.

அத்துடன் இன்று காஷ்மீரின் புல்வாமா நிலைமையை பாருங்கள்; என்றவர் 2009இல் முள்ளிவாய்கால் வரை தாம் போரை முன்னகர்த்தாமல் விட்டிருந்தால் இன்று இலங்கையிலும் இவ்வாறானகாட்சிகளே தெரிந்திருக்குமென்றார். இது ரணிலின் மறப்போம் மன்னிப்போம் கருத்தியலை மையப்படுத்திய தெற்கின்; மிகமுக்கிய அதிர்வு. மகிந்தவாதமுகாமின் தலையே இவ்வாறு அதிர்ந்திருப்பதால் இனி மகிந்தாவாதிகள் எல்லாம் இந்தவிடயத்தை மையப்படுத்தி ரணிலுக்கு அர்ச்சனைகளை செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கத்தக்கதே.

ஆனால் சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்ளை செய்தனர் என்பது ரணிலின் ஒப்புதல் அல்ல என்பதே இங்கு முக்கியமானது.

இதேபோல தமிழர்தரப்பில்இருந்தும் சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்களிடமிருந்தும் அதிர்வுகள் வந்துள்ளன.

இதில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் சக நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ரணிலின்கருத்தை பகிரங்கமாக வரவேற்றுஊடறுத்தார். கடந்த சனிக்கிழமையன்று யாழில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் இளைஞரணி மாநாட்டில் இந்தக்கருத்தை அவர்தெரிவித்தார்

அதாவது தமது படையினர் பேர்க்குற்றங்களையும் இழைக்கவில்லையெனவே சிறிலங்கா அரசாங்கம் இதுவரை கூறும்நிலையில் ரணில் மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியமை இராணுவம் குற்றமிழைத்ததான உண்மையை சிறிலங்காவின் பிரதமர் முதன்முறையாக பகிரங்கமாகவும் அதிகாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவது என்பது அவரது வியாக்கியானம்.

அத்துடன் தமிழர்தரப்பில் இருந்தும் இழைக்கப்பட்ட அநீதிகள் குற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் போரின்போது ஒருதரப்பு மட்டும்தான் குற்றம் இழைத்த உதாரணம் எங்கும் நடக்கவில்லை. போர்க்குற்றங்களை இழைக்காமல் உலகத்தில் எந்தபோரும் நடப்பதில்லை. சுத்தமான போர் என ஒருவிடயம் இல்லை என சுமந்திரனின் அக்கப்போர் அடுக்குதல்கள் இடம்பெற்றன. இதேபோல ரணிலின் கருத்துக்கு இன்னொருமுனையில் அதிர்ந்த முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் நரி-மான் உறவுக்கதை கூறினார்.

நரி வந்து மானிடம் கூறியதாம் உன் குட்டியைக்கொன்றது நான்தான். மன்னித்துவிடு. இனி நாங்கள்நண்பர்கள்இருப்போம். உன் மற்றகுட்டிகளை நான்கொன்றாலும்மீண்டும்உன்னிடம்மன்னிப்புக்கோருவேன்என்றதாம் என குட்டிக்கதையைகூறியவர் மறைமுகமாக ரணிலைஒருஅரசியல்நரி என்றார்.

எதிர்வரும் திங்கட்கிழமை 25 ஆந்திகதி ஐ.நாமனிதஉரிமைபேரவைஅமர்வு ஆரம்பிக்கவுள்ள நிலையில், இலங்கையில் தென்னாபிரிக்கபாணியில் ஒரு ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக பேசப்படும் பின்னணியில் ரணில் மறப்போம் மன்னிப்போம் என கூறுவது தமிழர்களின் முற்றத்தில் தவிச்சதுமுயலடித்து தந்ரோபாய வெற்றியை பெறும் முனைப்பு மட்டுமே!

இதையும் தவறாமல் படிங்க