இந்தோ- பாக் போர் விமானங்களின் நாய்ச்சண்டை! போரா? விளிம்பு சென்று திரும்பும் ஆட்டமா?

  • Prem
  • February 28, 2019
78shares

கொள்கை முன்னெடுப்பு அல்லது Policy in Action என விளிக்கபடும் நகர்வில் பிறிங்ஸ்மன்சிப் Brinksmanship தெமார்ஷ் Demarche வோல்தெபாஸ் volte face எனப்படும் 3 முக்கிய கலைச்சொற்களுக்கு இடங்களுள்ளன. ஆசியக்கண்டத்தில் வியட்னாம் மற்றும் இந்தோ-பாக் எல்லை ஆகிய பகுதிகளில் இன்று தெரிந்த காட்சிகளில் தெமார்ஷ் மற்றும் வோல்தெ பாஸ் ஆகிய சொற்களுக்கு இடமில்லாமல் விட்டாலும் Brinksmanshipஎன்ற கலைச்சொல்லுக்கு எதிர்காலத்தில் அதிக பொருத்தம் வரக்கூடும்.

போரின் விளிம்புக்குச்சென்று அவ்வாறு போரில் ஈடுபடாமல் திரும்பும் யுக்திசார்ந்ததே இந்த Brinksmanship என்ற சொல்லின் அர்த்தப்படுத்தல்

ஆனால் தற்போது இந்தோ -பாக் எல்லையில் நிலவும் காட்சிகளை நோக்கும்போது இந்தக்களத்தில் ஒரு Brinksmanship ஆட்டம் தான் இடம்பெறுமா? அல்லது இருதரப்பு நிலைமைகள் முழுமையாக ஒரு போர்க்களமாக வெடிக்குமா என்ற வினாக்களுக்கே இடமிருக்கின்றன.

எனினும் நீரின்நிலம்என்ற அர்த்தப்படுத்தலுக்குரிய காஷ்மீர் என்ற ஒரு பூகோளக்குறியீட்டை முன்வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது ஒரு தீவிரமான கந்தகஆட்டத்தில் குதித்திருப்பதை கடந்தசில நாட்களாக வெளிவரும் செய்திகள் நிசர்சனமாக வெளிப்படுத்தியுள்ளன.

இதனடிப்படையில் இந்தோ- பாக் எல்லையில் இருதரப்பு போர் விமானங்களும் Dogfight எனப்படும் நாய்ச்சண்டையில் ஈடுபட்டதை ஆதாரப்படுத்தும் செய்திகள் வந்திருந்தன.

பொதுவாகவே போர்க்களங்களில் ஈடுபடும் தரப்புக்கள் கையால் மடியால் போட்டு அல்லது மறைத்து தத்தமது தரப்புக்களின் வாய்ப்புக்களை அல்லது இழப்புக்களை வெளிப்படுத்துவது வழமை. அந்த வகையில் நேற்றுதனது Surgical Strike 2.0 ஊடாக இந்தக்களத்தில் இந்தியா முன்னரங்கில் நின்றது.

1971 க்குப்பின்னர் முதன்முறையாக line ofcontrol எனப்படும் எல்லைக்கோட்டைத்தாண்டி பாகிஸ்தானிக்குள் ஊடுருவிய இந்திய விமானப்படையின் 12 மிராஜ்கலங்கள் பலகோட் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தின இந்திய குடிமக்களை கிளர்வூட்டிய இந்த தாக்குதல்; உலக ஊடகங்களிலும் முன்னிலை பெற்றது.

இந்தத்தாக்குதலில் ஜெம் அல்லது ஜய்ஷ் இ முகமது அமைப்பின் 200 முதல் 300 வரையான ஆயுதாரிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளரும் அறிக்கையிட்டார். ஆனால் இந்தியாவின் தாக்குதல் இடம்பெற்று 24 மணிநேரத்தில் இந்த கந்தகக்களத்தில் பாகிஸ்தான் தன்னிடமிருக்கும் அமெரிக்க F-16 ஊடாக சற்று முன்னகர்ந்த தோற்றப்பாடு தெரிந்தது. தமது F-16கள் இந்திய வான்படையின் இரண்டுவான்கலங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான்தரப்புகூறியது. அதில் ஒரு வான்கலம் மிக் 21 ரக விமானம் எனவும் இது கூறியது.

இந்தசம்பவத்துக்குரிய ஆதாரமாக தம்மால் கைதுசெய்யப்பட்ட இந்திய விமானியையும் காணொளியில் அது காட்சிப்படுத்தியது.

ஆரம்பத்தில் இந்தவிடயத்தை இந்தியா மறுக்கமுனைந்தது. ஆயினும் தனது விமானி உயிருடன் பாகிஸ்தானிடம் சிக்கியதால் வேறுவழியின்றி இறுதியில் தமது விமானி அபினந்தன் வர்த்தமான் பாகிஸ்தானின் பிடியில் சிக்கியதை MiG 21 lost, pilot‘Missing in action’ என்ற போர்க்கள மொழியின் ஊடாக உறுதிப்படுத்தியது

(இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் கார்த்திக் நடித்த காற்று வெளியிடைபடத்தின் ஆலோசகராக செயல்பட்ட ஏயார் மார்ஷல் வர்த்தமானின் புதல்வரான இந்த அபிநந்தன்)

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள தமதுதரப்பு விமானியை மீட்க இந்தியர்கள் ஆவல் கொண்டாலும் டெல்லி- இஸ்லாமாபாத் ராஜதந்திர டீல் சரியானால்தான் இந்திய விமானியை பாகிஸ்தான் எப்போது விடுவிக்கும் என்பது தெரியவரும்

இந்த நகர்வுகள் இடம்பெற்ற பின்னணியில் அடுத்த 72 மணிநேரத்துக்குள் இந்தோ- பாக் போர்வெடிக்கக்கூடும் என்ற வகையில் போர் அமுக்கமானி முள் எகிறின. டெல்லியை மையப்படுத்திய வான்பரப்பை இந்தியா அவசரமாக மூடவேண்டிய சூழல் முதல் எல்லையில் இரண்டுதரப்பும் கடும் எறிகணைகளை வீசும் நிலைமைவரை இந்தகொதிநிலை முள்எகிறியிருந்தது

இரண்டுதரப்பும் தத்தமது சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதிகளில் துருப்புக்ளை குவித்தன எல்லைக்கு அருகில் உள்ள சகல பாடசாலைகளையும் இழுத்து மூடி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தின.

இரண்டுதரப்புக்களும் தத்தமது கைகள் ஒங்கியதாக தத்தமது மக்களுக்கு செய்திகளை கூறின. இந்த நிலையில் அடுத்துவரும் 3 நாட்களில் போர் வெடிக்கலாம் என ஊகிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான போர் நிலையை தவிர்க்க உடனடியாக சமாதானபேச்சு மேசைக்கு வருமாறு பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான்கான்இன்று மாலை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானிய அணுஆயுத நிபுணர்களுடன் காலையில் ஆலோசனையை நடத்திய பின்னர் இந்தியாவுடனான சமாதானப்பேச்சுக்கு அழைப்பை விடுத்த கான், மிக் 21 ரக போர்விமானம் உட்பட இரண்டு இந்தியவிமானங்கள் இன்று சுட்டுவீழ்த்தப்பட்டு இந்திய விமானியொருவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகமொத்தம் இந்தோ- பாக் எல்லையை மையப்படுத்தி சில நாட்களுக்கு பரபரப்பு செய்தித்தலைப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக இந்தியபொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடிய மேமாத இறுதிவரை இது ஒரு தீவிரமான ஆட்டமாக இடம்பெறக்கூடும். இந்தியாவில் ஆளும் பாஜகஅரசாங்கம் இந்தநகர்வுகளை புல்வாமா தாக்குதலுக்குரிய ஒரு பதிலடி நகர்வாக மேற்கொள்வதான வியாக்கியானத்தில் ஒரளவு உண்மை இருக்கலாம். ஆனால் எதிர்வரும் மே மாதத்தில் இடம்பெறக்கூடிய பொதுத்தேர்தல்களத்தில் தேசபக்தியை அதிகமாக தூண்டி வாக்குகளைப் பெம் நோக்கம் முற்றாகவே இல்லை என நிருபிக்கமுடியாது.

ஆகையால் இந்தோ-பாக் எல்லையில் இவ்வாறாக ஒரு கடும்போர்ப்பதற்றம் நிலவினாலும் விமானங்களின் நாய்ச்சண்டைகள் இடம்பெற்றாலும் இதனை இறுதியில் போரில் ஈடுபடாமல் திரும்பும் ஆட்டமாக முடிவுக்கு கொண்டுவரும் வாய்ப்புக்களைத் தேடுவதே ஆசியாவின் சகோதர எதிரிநாடுகளுக்கு நீண்டகாலநோக்கில் பலனளிக்கக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்