யாழில் இரவோடிரவாக இனவெறியர்களின் பேயாட்டம்; பூசி மெழுகப்பட்ட ஓர் இனவழிப்புச் சாட்சியம்!

309shares

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இன வரலாற்றுக் கருவூலம் அழிக்கப்பட்ட நாள் இன்றாகும்.

ஒரு இனத்தின் இலக்கியங்களையும் வரலாற்று மூலாதாரங்களையும் அழிப்பதன்மூலம் அந்த இனத்தின் இருப்பை இலகுவாக துடைத்தெறியமுடியும் என்ற நம்பிக்கை பேரினவாத சக்திகளின் கணிப்பாகும்.

அதனடிப்படையில் எரித்து கருக்கப்பட்டதே யாழ் பொது நூலகம்.

1981ஆம் ஆண்டு இதே நாள் இரவு (மே-31 நள்ளிரவு அல்லது ஜூன்1 அதிகாலை) சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பலால் பல்லாயிரக்கணக்கான நூல்களும் வரலாற்றுப் பொக்கிஷங்களும் ஓலைச் சுவடிகளும் எரித்துக் கருக்கப்பட்டன.

கிட்டத்தட்ட அந்த நாட்களில் 97000 கிடைத்தற்கரிய நூல்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இருந்ததுடன் தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது. அத்தனை பெருமைகளும் இரவோடிரவாக தீயுடன் தீயாகி மீளமுடியாத சாம்பலாகிப்போயின.

அப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் தீவிர இனவாதியாக இருந்த அமைச்சர் காமினி திசாநாயக்க உள்ளிட்ட பேரினவாத அரசியல்வாதிகள் பலரும் இந்த நாசகார செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்தது.

ஈழ விடுதலைப்போராட்ட காலக்கோட்டில் யாழ் நூலகத்தின் அழிப்பு என்பது அழிக்கமுடியாத வரலாற்றுக் கறையாக அமைந்தது மட்டுமன்றி தமிழ் தேசிய விடுதலை குறித்த உணர்வலைகளை மேலும் பெருக்கிக்கொண்டே சென்றது.

1933ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டுவந்த யாழ்ப்பாணம் நூலகம், தமிழ் சமூகத்திடமிருந்த பல்வேறு பழம்பெரும் நூல்கள் மற்றும் ஒலைச் சுவடிகள் என்பவற்றைச் சேகரித்து மிகப்பெரிய நூலகமாக மாறியது.

தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் வன்முறைக் கட்டவிழ்ப்புக்கள் தொடக்கிவிடப்பட்ட காலத்திலிருந்தே யாழ்ப்பாண நூலகம் பேரினவாதிகளின் கண்களை உறுத்தியது.

இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர் என்பதற்கான பல வரலாற்றுச் சான்றாதாரங்கள் யாழ் நூலகத்தில் பேணப்பட்டுவந்தமை இந்த உறுத்தலுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. சான்றுகளை அழிப்பதன்மூலம் தாம் விரும்பும் தனிச்சிங்கள நடைமுறையினை இலகுவாக கொண்டுவரலாம் என்பதில் அதீத நம்பிக்கை வைத்தனர் அன்றைய ஆட்சியாளர்கள்.

இதன்மூலம் இந்த தீவின் பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இனம் ஒன்றை இருப்பிழந்து போவதற்குரிய செயல்களை மேற்கொள்ளமுடியும் என்பதை எதிர்பார்த்திருந்தனர்.

தனிநாடு, சமஷ்டி என்று போராடிப்போராடி இன்று ஒரு மாகாணத்திற்கான அதிகாரத்தைக்கூட தருவதற்கு பேரினவாத அரசியல் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக விளங்கிவருவது அன்றைய நாட்களின் எதிர்பார்ப்புகளை கண்முன்னே கொண்டுவருகின்றது.

இன்று இலங்கை ஒரு பௌத்த நாடு என்று சிங்கள தலைவர்களும் கத்தோலிக்கரான கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட மத தலைவர்களும் தீவிரமாக கூறிவருகின்றமையானது தமிழர் வரலாற்றுப் பொக்கிசங்களை தின்று ஏப்பம்விட்ட திமிரின் வழிவந்த பேச்சாகும்.

எரிக்கப்பட்ட யாழ் நூலகம் அதே அடையாளங்களோடு ஒரு இன அழிப்பின் சாட்சியமாக இருந்திருக்கவேண்டியதாகும்.

ஆனால் அதன் வடுக்கள் யாவும் பூசி மெழுகப்பட்டு புதுப்பொலிவு பெற்று விளங்குகின்றமை நடந்து முடிந்த மிகப்பெரிய வரலாற்றுக் கருவூல அழிப்பிற்கு வெள்ளையடித்த செயல் போலவே தெரிகிறது!

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!