தமிழர்களின் “தரம்” உயர்ந்தால்… முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை?

  • Prem
  • June 21, 2019
147shares

இடுக்கண் வருங்கால் நகுக! அதனை> அடுத்தூர்வது அஃதொப்பதில். என்றார் வள்ளுவப்பெருந்தகை. துன்பம் வரும்போது மகிழ்வதே அந்த துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது. அதனைப்போன்ற வேறு சிறந்தவழி இல்லை என்பது பொய்யா மொழிப்புலவனின் மொழி.ஆனால் வள்ளுவப்பெருந்தகையின் இந்த தத்துவார்த்தத்தின் படி வாழ்வதென்பது சாமான்ய மாந்தர்களுக்கு கடினம்

ஆயினும் கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் என்ற ஒரு நிர்வாக அடையாளத்தை மையப்படுத்திய முஸ்லிம்களின் அடம்பிடிப்பு அரசியலையும் அதுசார்ந்த கொதிநிலையையும் தமிழ்பேசும்மக்களின் இந்தப்பிரச்சனையில் பஞ்சயாயத்துப்பண்ணப் புகுந்து சாகும்வரை உண்ணாநிலையிருக்கும் பௌத்த சிங்களக்காவிகளின் அதகளக் கரிசனைகளையும் நோக்கும் ஒரேயொரு விடயத்தை மட்டும் விரக்தியாகக் கூறலாம்.

கல்முனையில் இடுக்கண் வருங்கால் வடிவேலுவின் ரத்தம்- தக்காளிசட்னி குறித்த நகைச்சுவை கண்டு நகுக!

ஏற்கனவே தனியொரு பிரதேச செயலகமாக மாற்றப்பட்ட சாய்ந்தமருது செயலக பிரதேசத்தை> கல்முனை மாநகரசபையில் இருந்து பிரித்தெடுத்து முழுமையான நகர சபையாக்கும்படி சாய்ந்தமருது முஸ்லிம்கள் போராடினால் அது ரத்தமாம். ஆனால் கல்முனை வடக்குவாழ் தமிழர்கள் தமது உப பிரதேசசெயலகத்தை> முழுமையான பிரதேசசெயலகமாக தரமுயர்த்தக்கோரி பல ஆண்டுகளாக தமிழ் சமூகதலைவர்கள் போராடினால் முஸ்லிம்களின் அரசியல் பார்வையில் அது மட்டும் தக்காளி சட்னியா? முஸ்லிம்களே தமது நிர்வாக மையமாக கல்முனை மாநகரசபையில் இருந்து முற்றாக பிரிந்து சாய்ந்தமருதுக்கு என தனி நகர சபை வேண்டும் என போராடும் போது, தமிழர்கள் மட்டும் இவ்வாறு கோரமுடியாதா?

அந்தவகையில் உப பிரதேச செயலகமாக இருக்கும் தமிழர்களுக்குரிய ஒரு நிர்வாக மையத்தை தரமுயர்த்தினால் அதே தமிழ் மொழியை பேசும் எழுதும் முஸ்லிம் அரசியல்முகங்களுக்கு அதில் என்னதான் பிரச்சனை? இவ்வாறு செய்யக்கூடாது எனக்கோரி முஸ்லிம் தரப்பு ஏன் இன்று போராட்டக்களத்தில் குதிக்கவேண்டும்?

அவர்களின் போராட்டக்கூடாரத்தில் தொங்கும் ஒரு பெரிய பதாதையில்இனத்துவரீதியிலும் நிலத்தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கபட எத்தனிக்கும் பிரதேச சபையை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை காட்சியளிக்கிறது.

ஆனால் தர்க்கரீதியாக இந்தக்கோரிக்கை சரியா? கிழக்கில் இவ்வாறு இனரீதியான பிரதேசசெயலகங்கள் ஏற்கனவே இல்லையா? அல்லது கல்வி வலயங்கள் இல்லையா? அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழர்கள் தமக்குரிய உப-பிரதேச செயலகம் ஒன்றை முழுபிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரினால் அதனை மையப்படுத்தி எதிர்ப்போரட்டம் செய்வதை எவ்வாறு நோக்குவது? கல்முனை மாநகரசபையின் நிர்வாக ஆட்சியை பொறுத்தவரை அதில் கல்முனை வடக்கு> சாய்ந்தமருது> கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்கள் உள்ளன. இதில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை தெற்குப்பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கல்முனை வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாகஉள்ளனர் இதில் சாய்ந்தமருது ஏற்கனவே தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் கல்முனை வடக்கு பகுதியை மையப்படுத்திய விடயத்தில் மட்டும் முஸ்லிம் அரசியல்கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் பிரதிநிதிகளும்இந்த விடயத்தில் எதிர்மறைத்துருவநிலையில் நின்று சமகால ரசாயன மாற்றங்களை மேலும் வலுவூட்;டவே முனைகின்றனர். இந்தப்பிரச்சனையில் தமிழ்பேசும் முஸ்லிம் தரப்பு வெளிப்படுத்தும் அடம்பிடிப்புகுரங்கு அப்பம் பிய்த்த கதையை நினைவூட்டுகிறது.

ஒரு அப்பத்துக்ககாக சண்டையிட்ட இரண்டு பூனைகள் இறுதியில் ஏமாற்றும் குணம் கொண்ட குரங்கொன்றிடம் பஞ்நாயத்துக்குச் சென்றன. உள்ளுக்குள் மகிழ்வுகொண்ட குரங்கும் வெளியில் சலிப்போடு பஞ்சாயத்து பண்ண ஒப்புக் கொண்டது. இதன்படி அந்த அப்பத்தை வேண்டுமேன்றே ஒரு பாதி பெரிசு மறுபாதி சிறிசு எனப்பிய்த்தது. அடாடா! ஒரு துண்டு பெரிதாகிவிட்டதே! என பெரிய துண்டை கடித்துதின்றது இப்போது சின்னத்துண்டு பெரியதாகிவிட்டது. அடN;ட என அதனையும்கடித்தது.

பூனைகளுக்கு ஒருகட்டத்தில் குரங்கின் நோக்கம் புரிந்து. இனிமேல் நாங்கள் சண்டை போடமாட்டோம். மீதியிருக்கும் குட்டித்துண்டுகளை தந்துவிடுங்கள் என கெஞ்சின. ஆனால் ஏமாற்றும் குணம் கொண்ட குரகோ அப்பப் பிரச்சனைக்கு பஞ்சாயத்துப் பண்ணிய கூலியாக மீதியிருந்த அப்பத்துண்டுகளையும் தனது வாயில் போட்டுக்கொண்டதாம்

விட்டுக்கொடுத்து வாழவேண்டிய நிலைக்கான சிறார்கதை ஆனால் இந்த எளிய உதாரணத்தை உணராமல் முஸ்லிம் அரசியல்முகங்கள் பெருநடிப்பு நடிக்கின்றார்கள் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த மறுத்து ஆப்புகளை செருகிக்கொள்கின்றார்கள்.

இதற்குரிய மறுதாக்கம் இன்று நான்காவது நாளாக இந்த பிரச்சனையை போராடடக்களமாக மாற்றியுள்ளது. கிழக்குமாகாணத்தில் அம்பாறை> மட்டக்களப்பு மாவட்டத்தின் பலபகுதிகளில் தமிழர்கள் தரப்பில்ஆதரவுப்போராட்டங்கள் பேரணிகள் என சில நகர்வுகள் இடம்பெற்றன.

இதற்கும் அப்பால் ஒருகாலத்தில் தமிழர்களின் அரசியல் ராணுவ வலுவில் பெரும் உடைவுகளை செய்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பார்வையிடல் மற்றும் சூளுரைப்பு இந்தப் பிரச்சனையில் ரணில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் எச்சரிக்கை எல்லாமே வந்துள்ளன.

இதற்கிடையே இந்தபிரச்சனையில் பஞசாயத்து பண்ண உண்ணாநிலைப்புகழ் அத்துரலியே ரதன தேரரும் இன்று காலையே நேரடியாக கல்முனைக்குள் புகுந்துவிட்டார். நாடாளுமன்றஉறுப்பினர் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் அவரது பிரசன்னம் தெரிந்தது. ஆகமொத்தம் தமிழர்களின் போராட்டம்> முஸ்லிம்களின் எதிர்ப்போராட்டம் என்றவகையில் இந்தப்பிரச்சனை இறுகியது. கல்முனை நகரம் முழுவதும் அதிகளவு சிறிலங்காப் படைப்பிரசன்னமும் உள்ளது.

இந்தப்பிரச்சனை இப்போது ஒரு உபபிரதேசசெயலகம் பிரதேச செயலகமாக மாற்றப்படும் பிரச்சனையாக மட்டுமல்ல தமிழ்-முஸ்லிம் உறவின் கொதிநிலைப் மையப்புள்ளியாக மாறிவிட்டது. தமிழ்பேசும் முற்றத்தில் இந்த நிலை தணிக்கப்படாவிட்டால் கடந்த ஏப்ரல் 21 ஈந்திகதியன்று இலங்கைத் தீவில் கந்தக நாசகாரம் வெடிக்க வைக்கப்பட்டபோது அதன் பின்விளைவுகளாக அதே நாசகாரிகள் எதனையெல்லாம் கருதினார்களோ அவையெல்லாம் கச்சிதமாக இடம்பெறத்தான் செய்யும்.