மைக் பொம்பியோ சிறிலங்காவை தவிர்த்தது ஏன்? சோபாவும் ஷோக் காட்டல்களும்

  • Prem
  • June 27, 2019
35shares

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் ஆசியப்பயணத்தில் ஒரு பொசிவு இருந்திருந்தால் அவர் இன்றைய நாளான 27 ஆந்திகதியன்று அவர் சிறிலங்காவையும் எட்டிப்பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் மைக்பொம்பியோவின் இந்த இலங்கை கால்பதிப்பு பயணநிரல் பின்னர் தவிர்க்க முடியாத காரணங்கள் என்ற அடையாளத்தில் மீளெடுக்கப்பட்;டது.

இந்த தவிர்க்க முடியாத மீளெடுப்புக்குறித்து செய்திவெளியிட்ட கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அதற்கு ஒரு காரணத்தையும் கூறியது.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அரசதலைவர் ரம்ப்புடன் மைக் பொம்பியோவும் கலந்துகொள்வதால் அவரது இலங்கைப் பயணம் மீளெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

ஆனால் உண்மையில் இது ஒரு காரணமல்ல. கரணம். ஏனெனில் மைக் பொம்பியோ இலங்கைக்கு செல்லவதாக கட்டியம் கூறப்பட்டபோதும் ஜி-20 மாநாட்டில் ரம்ப்புடன் அவர் இணைந்து கொள்ளும் திட்டம்; இருந்ததே உண்மை

அப்படியானால் இந்த மீளெடுப்புக்கு காரணம் என்ன? ஏன் மைக்பொம்பியோ பெரியண்ணன் வீட்டில் பேசிமுடித்தபின்னர் ஏற்கனவே திட்டமிட்டதைப்போல சின்னத்தம்பி வீட்டுக்கு செல்லாமல் ஜப்பானுக்கு பறந்தார்.

சரி இந்த விடயத்தைப் பார்க்க முன்னர் மைக் பொம்பியோ மாற்றிய திட்டத்தைப்போல இன்னொரு மாற்றப்பட்ட திட்டம் குறித்தும் இப்போது பார்க்கவேண்டும். மைக்பொம்பியோ இலங்கைக்கு செல்லும் வேளை சிறிலங்காவின் பாதுகாப்புஅமைச்சரான மைத்தி;ரிபால சிறிசேனாவும தானும் 2 நாட்;கள் நாட்டில் இல்லாமல் இருக்கும் வகையில் கம்போடியா மற்றும் லாஓஸ் ஆகியநாடுகளுக்கு செல்லும ஒரு திட்டத்தைப்போட்டார்.

அந்த தந்ரோபாயத்திட்டத்தின்படி யூன் 26 ஆந் திகதி அவர் அந்த பயணத்தை செய்திருக்கவேண்டும்

ஆனால் எப்போது பொம்பியோவின் இலங்கைப்பயணம் சடுதியாக மீளெடுக்கப்பட்டதோ. ஒரு டொமினோ ஆட்டத்தைப்போல மைத்தி;ரியும் தனது கம்போடிய லாஓஸ் பயணத்தை மைத்திரியும் சடுதியாக மீள் எடுத்து அந்தப் பயணத்தை எதிர்வரும் ஓகஸ்ற் மாதத்துக்கு பிற்போட்டார்.

அப்படியானால் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருந்து விளங்கிக்கொள்ளக்;கூடிய செய்தி என்ன?

மைக்பொம்பியோ இலங்கைக்கு அவரை சந்திப்பதை மைத்திரி நாசுக்காக தவிர்க்க முனைந்தமை தெரிகிறது. அவர் இவ்வாறு வெட்டியாடலை செய்வதற்குரிய காரணம் சோபா (SOFA) அல்லது ஸ்ரேற்ரஸ் ஒப் போர்சஸ் அகிறிமென்ட் (Status of forces agreement )எனப்படும் ஒப்பந்தம்.

கடந்த ஏப்ரலில் இலங்கையில் ஐ. எஸ்ஸின் கந்தக நாசகாரம் வெளிப்பட்டபோது சிறிலங்காவின் பாதுகாப்பு தொடர்பாக இக்கட்டான நிலையைப் பயன்படுத்த முனைந்த வோசிங்டன் தன்னுடன் பாதுகாப்புத் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை செய்ய தொடர்ந்தும் அழுத்தம் வழங்கிவருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க செனட்சபை குழுவில் இந்தோ-பசிபிக்கட்டளைத்தளபதி தனது அறிக்கையிடலை செய்தபோது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை தடுக்க சிறிலங்காவுடன் அமெரிக்கா ஒரு ராணுவப்பாதுகாப்பு ஒப்பந்த்தை செய்யவேண்டுமென பரிந்துரைத்ததும் இந்த விடயத்தில் வோசிங்டனின் தீவிரஆர்வம் இன்னும் முன்னகர்ந்தது.

இதன்பின்னர் கடந்த மேமாதம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குழு அமெரிக்காவுக்குச் சென்று மைக்பொம்;பியோவுடன் பேசித்திருப்பியது. ஆனால் இந்தவிடயம் உள்ளுரில் கசிந்ததுதம் ரணில்தரப்போ சீச்சீ அப்படி ஒரு ஒப்பந்தமும் இல்லை வோசிங்டனுடன் சிறப்பான பந்தமும் இல்லை என்றது.

இதற்கிடையே அமெரிக்காவுடன் இவ்வாறான ஒரு ஒப்பந்த்தை செய்வதற்கு சிறிலங்கா இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் மகிந்தாவாதிகளும் எதிர்ப்புக்கொடிபிடிப்பது வேறுவிடயம்

ரணிலைப்பொறுத்தவரை அவருக்கு அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தத்தை செய்வதில் விருப்பம் உண்டு. ரணிலின் மேற்குலக ஆதரவு நிலைப்பாடும் அவரது திறந்த பொருளாதாரக் கொள்கை நிலைப்பாடும் தனியார்மயமாக்கல் மீதான நம்பிக்கைகளையும் நோக்கினால் அவரது சோபா விருப்பு நிலை தெரியும்.

ஆனால் சோபா உடன்பாட்டின் மூலம் புகுந்துகொள்ளக்ககூடிய விசயங்களில் ரணிலுக்கு கொஞ்சம் தயக்கமிருக்கிறது. ஆனால் இவ்வாறான தயக்கமான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் இடம்பெறும் ““technical” talks”எனப்படும் தொழினுட்பப் பேச்சுக்களில் பேசித்தீர்ப்போமே என ஆசைகாட்டுகிறது வோசிங்டன்.ஆனால் மைத்திரிவாதிகளும் மகிந்தாவாதிகளும் சோபா குறித்து முழு எச்சரிக்கையடைகின்றனர்

ஏனெனில் சோபா உடன்பாடு வந்தால் சிறிலங்காவில் பிரசன்னப்படும் அமெரிக்கபடையினர் தமது கடவுச்சீட்டுகளை காட்;டவேண்டிய தேவைஇல்லை. மாறாக அமெரிக்க அரசாங்கத்தின் அடையாள அட்டையை மட்டும் சிறிலங்காவின் குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டினால் போதும். அதேபோல சோபா ஊடாக நாட்டுக்குள் வரும் படையினரை உள்ளுர் சட்டங்களோ அல்லது சுங்கவிதிகளோ கட்டுப்படுத்தாது.

சோபா உடன்பாட்டின்படி அமெரிக்க படையினரின் கடற்கலங்களை அல்லது அவர்களின்இராணுவசரக்குகளை சிறிலங்கா சுங்கத்திணக்களம் சோதனையிட முடியாது. அதேபோல அவர்களின் வானொலி தொடர்பாடல் அலைவரிசைகளையும் கட்டுப்படுத்தவும் முடியாது. இவ்வாறு எல்லாம் சோபா ஷோக் காட்டுவதால் மைத்திரிவாதிகளும் மகிந்தாவாதிகளும் சோபா குறித்து எச்சரிக்கையடைந்தனர் (மைத்திரியும் தனது நேற்றைய ஊடக மாநாட்டில் சோபாவை அனுமதிக்கமாட்டேன எனக்கூறியதையும் இங்கு அவதானிக்க வேண்டும்.)

இதனால் இந்தமுறை தனதுபயணத்தில் இந்த ஒப்பந்தப்பழம் விழாது என்பதால் தனது இலங்கைப்பயணத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவும் தற்காலிகமாக தவிர்த்திருக்கக்கூடும் ஆனால் வோசிங்டனைப்பொறுத்தவரை இந்த ஒப்பந்த்தை மையப்படுத்திய இலங்கைப்பயணங்கள் முடிவதில்லை என்பதே நிஜம். இன்று போய் அமெரிக்கா நாளைவரும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு