ரணிலின் கப்பமும்…. இரா.சம்பந்தனுக்கு மிச்சமும்!

  • Prem
  • July 12, 2019
106shares

கிளைமாக்ஸ் எனப்படும் உச்சக்கட்சிகள் எதுவும் இல்லாமல் பகவத்கீதையில் சொல்லப்பட்டதைப்போல சிறிலங்கா நாடாளுமன்றத்தின் நேற்றைய காட்சிகள் இருந்தன.

அந்த வகையில் எது நடந்ததோ அது நன்றாகவே (தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு வாக்களிப்பினால்) நடந்தது. அதனால் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. அது போல எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே(கூட்டமைப்பினால்) நடக்கும்.

இங்கு> நன்றாகவே நடக்கும் எனக்கூறப்படுவதற்காக இவை யாவும் தமிழ் மக்களுக்கு 100 வீதமாக நன்மையாக நடக்கும் நகர்வுகள் என வெள்ளந்தித் தனமானகவும் நம்பக்கூடாது.

ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு> நிபந்தனைகள் இல்லாமல் ரணில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதாக அதன் உச்சமுகங்கள் மீது பொதுவாகவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மீது இரா. சம்பந்தன் இந்த ஆதரவுவாக்களிப்பின் மூலம் ஒரு குட்டி பிளிற்ஸ் கிறிக் ஐ செய்திருக்கிறார்.

இந்த நகர்வின் பின்னணியை ரணில் அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை முன்னகர்த்த முயன்று தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் குரலும் ஒருபுறமாகவும்> கல்முனை வடக்குப்பகுதியில் இரவு 9 மணியளவில் ஆங்காங்கே கேட்ட வெடிச்சத்தங்களும் மறுபுறமாகவும் உறுதிப்படுத்தியுள்ளன.

அநுரகுமார திசாநாயக்கவின் செய்தியின்படி ரணில்அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்களிப்பு இடம்பெறமுன்னர் மாலை 4.30மணியளவில் ரணில் விக்கிரமசிங்க இரா. சம்பந்தனுக்கு முக்கிய இணக்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் மங்களசமரவீர 30 நிமிடத்தில் இந்த சூட்சுமங்களுத் தேவையான நடவடிக்கைகளை செய்து முடித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நகர்வுகளின் அதனடிப்படையில் கல்முனை வடக்கில் தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்கி தருவதாக ரணில் வெளிப்படுத்திய உறுதியினால் அவரது அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் அடிப்படையில் கூட்டமைப்பு தனது வாக்குகளை பிரயோகித்ததான விஸ்தாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரணில் தனது> கப்பம் வழங்கும் அரசியல்ஊடாகத்தான் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்தார் எனவும் அநுரகுமார ரணிலைநாறடித்தார்.இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெற்றது. பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்துக்கு எதிராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜே.வி.பி மற்றும் மகிந்தாவாதிகளின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உட்பட 92 பேர் வாக்களித்திருந்தனர். மஹிந்தவும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். மறுபுறத்தே பிரேரணைக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

டக்ளஸ் தேவானந்தா துமிந்த திஸ்ஸாநாயக்க> சிவசக்தி ஆனந்தன் உட்பட்ட 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மதில் மேல் பூனைகளாக குந்தியிருந்தனர். ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அங்கஜன் இராமநாதன்> காதர் மஸ்தான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நம்பிகையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இறுதியில் இந்தநம்பிக்கையில்லா பிரேரணை ஆட்டம் 119 க்கு 92 என்ற அடிப்படையில் 27 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்ததும் மகிழ்சியால் யானைகள் பிளிறின.

ஜெயவர்த்தனபுரஅரங்கத்தில் இந்த ஆரவாரங்கள் ஓய கல்முனை வடக்குப்பகுதியில் இரவு 9 மணியளவில் வெடிச்சத்தங்களும் ஆரவாரங்களும கிளம்பின. கடந்த சிலநாட்களாகவே போராடடத்தின் மையமாக இருந்த கல்முனை உப பிரதேசசெயலகத்துக்கு அதிகாரபூர்வமாக ஒரு கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து இந்த வெடி ஆரவாரங்கள் கிளம்பின.

அதாவது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நிதி அதிகாரம் வழங்கும் தீர்மானம் எடுக்கப்படுவதாக குறிப்பிடப்படும் நகர்வானது முழு அதிகாரம் கொண்ட ஒரு பிரதேச செயலகமாக அந்த மையம் தரம் உயர்த்தப்படுவதற்கான முக்கிய அறிகுறி என்ற அர்த்தப்படுத்தலுக்கு உரியதாக கூறப்படுகிறன்றது. இதனால் அந்த மையத்தை சுழன்றே இந்த ஆரவாரங்கள் இருந்தன.

ஆகமொத்தம் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ரணில்அரசாங்கத்துக்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பு முட்டுக்கொடுப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை இரா. சம்பந்தன் உட்பட்ட உச்சமுகங்கள் இந்த ஆதரவு வாக்களிப்பின் நகர்வின் ஊடாக இந்தமுறை குறுக்கறுத்திருப்பது தெரிகிறது.

அதேசமகாலத்தில் ரணிலின் கப்பம்வழங்கும் அரசியல் குறித்து ஜேவிபி சொல்லும் காரணத்தை தமிழர்தரப்பு கணக்கில் எடுக்கவேண்டுமா? என்ற ஒரு தார்மீக வினாவும் எழுகின்றது. உண்மையில் இங்கு வெற்றியடைந்த தரப்பு தமிழ்தேசியக்கூட்டமைப்பு அல்ல மாறாக ரணில்தான்.

ஏனெனில் உப பிரதேச செயலகமாகஇருப்பதைசெயலகமாக தரமுயர்த்த தமிழ்மக்கள் சற்றேறக்குறை 3 தசாப்தகாலமாக கோரிய பிரச்சனைக்கு ஒரு நிரந்தர கணக்காளரின் நியமனத்தின் ஊடாக தவிச்சமுயலடிப்பு வெளிப்பட்டுவிட்டது. அதேபோல ஏற்கனவே செய்திருக்கப்படவேண்டிவிடயத்தை அது சார்ந்த உண்ணாநிலை போராட்டங்கள் எல்லாம் நடந்துமுடிந்தபின்னர்> தமது ஆதரவைவைத்துகூட்டமைப்பு நகர்த்தியுள்ளதால் எதிர்வரும் தேர்தல் பரப்புரைக்களத்தில் கல்முனை வடக்குப்பகுதியில் கூட்டமைப்பு முகங்களால் வீராதி வீரர்களாக வலம்வரவும் முடியும்.

இதேசமகாலத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தடுக்கமுடியாமல் போனதான காரணத்துடன் ரணில் அரசாங்கத்தின் மீது ஜேவிபி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தவிடயத்திலும் சுமந்திரன் ஒருகாரணத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது இந்தகந்தகநாசகாரத்தை தடுக்க முடியாத பொறுப்பில் இருந்து மைத்திரியை தப்பவிட்டு ரணில்அரசாங்கத்தின் மீது மட்டும் ஜேவிபி பொறுப்பைச்சுமத்திநம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவந்தால் அதற்கு எதிராக வாக்களித்ததாக சுமந்திரன் கூறுகிறார்.

ஆகமொத்தம், தமிழ்பேசும்நாடாளுமன்றஉறுப்பினர்களின் வீரதீரஅரசியல் மீண்டும் முன்னரங்குக்குவருகிறது. அதனடிப்படையில் பதவிவிலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமக்குரிய அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்க தயாராகிவிட்டனர்.

ஆனால் இவர்கள் பதவிவிலகியபோது கூறிய ஒரு மாத காலத்துக்குள் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு ஆளுநர்களுக்கும் ரிஷாட்பதியுதீனுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டவிடயம் ஒருமாதம் கடந்தும் முடிவுரை வழங்கும் வகையில் இடம்பெற்றதாக தெரியவில்லை ஆனால் இவர்கள் அனைவரும் தமது பழைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளனர்

ஆனால் ரிஷாட் பதியூதீனுக்கு பதவி வழங்கினால்> மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணையை கொண்டுவரவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர் முறுக்கிக்கொள்கிறார்ர். அதேபோல ரிஷாட்டுக்கு, மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு, யானைகளின் பின்வரிசை உறுப்பினர்கள் எதிர்ப்பதாகவும் கூறப்படுகிறது

அத்துரலியர் முறுக்கிக்கொள்வதைப்போல ஒருவேளை மீண்டும் றிஷாட்க்கு பதவி எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை வந்தால். ஐய்ய்யோ மீண்டும் கப்பங்கள் பேரங்கள் ஆதரவு- எதிர்ப்பு- வாக்களிப்பா? ஆளை விடுங்கள் சாமி!.