பௌத்த தடுப்பு கூட்டுத்தந்ரோபாயத்தில் தமிழர்கள் தவறுவதேன்?

  • Prem
  • July 19, 2019
84shares

இலங்கைத்தீவின் அரசியல் சீர்கேடுகளுக்கு சற்றும் குறைந்திராத வகையில் காலநிலைச்சீர்கேடுகள் உருவாகியுள்ளன. இந்த காலநிலைச்சீர்கேடு கூட வடக்குத் தெற்காக பிரிந்துதான் உள்ளன. வடக்கே வரட்சி வாட்டுகிறது. தெற்கு மற்றும் மலையகத்தின் மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கு மண்சரிவு என அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.

இலங்கைத்தீவின் சமகால காலநிலை சீர்கேட்டுத்தளத்துக்கு இயற்கை பொறுப்பாக இருந்தாலும் இந்த அரசியல் சீர்கேடுகளுக்கு யார் பொறுப்பற்றவர்கள்தான் பொறுப்பு என்ற விடயத்தை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வடக்குக்கிழக்கில் தீவிரமடைந்து விட்ட திட்டமிட்டபௌத்தமயமாக்கல் குறித்து சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி மைத்திரியிடம் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நேரில்சந்தித்து வலியுறுத்திய சந்தர்ப்பத்தை தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட சில தமிழ்முகங்கள் காய்வெட்டிய செய்திகள் வந்தன

சிறிலங்காவின் இந்து சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் மனோ கணேசன் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அவரவர் சில காரணங்களை கூறி இந்தசந்திப்புக்கு செல்லவில்லை.

இதன்எதிர்வினை பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்ற தோரணையில் மனோ கணேசனிடமிருந்து வெளிப்பட்டுள்ளது. கூட்டமைப்பினர் இவ்வாறு சந்திப்புக்கு செல்லாத நகர்வு முதலில் கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை விசனப்படுத்திய நிலையில் மனோகணேசனின் சலிப்பு அதற்குப் பின்னர். வெளிப்பட்டது.

செல்வம்அடைக்கலநாதன்; சிவசக்திஆனந்தன் சிவஞானம் சிறிதரன், சரவணபவன், சித்தார்த்தன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் வியாக்கியானப்படுத்துவது போலஅவர்களுக்கு ஏற்கனவே திட்டமிட்ட உள்ளுர் நிகழ்வுகள் இருந்ததால் அவர்களே கூறுவது போல இந்தசந்திப்பில் கலந்துகொள்ள அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த உள்ளுர் நிகழ்வுகளைவிட ஒப்பீட்டுரீதியில் வடக்குக்கிழக்கில் தீவிரமடைந்து விட்ட திட்டமிட்ட பௌத்தமயமாக்கலுக்குரிய எதிப்புத்தளத்தில் ஒன்றுபட்டு நிற்;கும் எதிர்வினை முக்கியமானது.

தான் முயற்சித்த இந்த ஒன்றுபட்ட எதிர்வினைத்தளம் நேற்று மைத்திரி முன்னால் அடிவாங்கியதால்தான் இனிமேல் வடக்குகிழக்கின் உரிமைப்பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் என மனோ கணேசன் விரக்தியுடன் சலித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கிவிட்டது.

ஒரு வேளை இந்த நகர்வில் ஏன் மனோகணேசன் கிறடிற் எடுக்கவேண்டும் என நினைத்து கூட்டமைப்பினர் இதனைத்தவிர்த்திருக்கலாம்.

ஆனால் சமகால இலங்கையில் தெரியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுமை குறித்த உதாரணத்தை தமிழ் பிரதிநிதிகள் இங்கு உள்வாங்கவேண்டும்.

இதனால் தான் மனோகணேசன் இதனை வஞ்சகப்;புகழ்ச்சியாக முன்னுதாரணப்படுத்தியிருந்தார்.

அதற்குப்பின்னர் இறுதியில் விரக்திகொண்டு ஏதாவது அதிசயம் நடந்து, தந்தை செல்வா சொன்னது போல கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவார் என நம்புவதாகவும் முத்தாய்ப்ப்பு வைத்தார்

அத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தூக்கிப்பிடிக்கும் அதே ரணில் அரசாங்கத்தின் ஊடாக புதியஅரசியலமைப்பு என்பது ஒருபோதும் நடைமுறையில் வராதெனவும் அதற்கான அரசியல்திடம் கொழும்பில் இல்லை எனவும் மனோ கணேசன் புட்டுவைத்தார்.

மனோகணேசன் கூறும் விடயங்களில் ஆதாரம் இருக்கக்கூடும். ஏனெனில் தன்னிடம்வீரியமற்று இருக்கும் தேசியஒருமைப்பாடு, இந்துசமயவிவகாரம் ஆகிய அமைச்சு அடையாளங்களால் இதில் அவரால் தனியாக ஒன்றுமே செய்யமுடியாது.

ஏனெனில் தற்போர் தமிழர்தாயகம் மற்றும் மலையகத்திலும் வீரியடைந்துள்ள சிங்கள-பௌத்த மயமாக்கலுக்குள் தமிழர்களின் வழிபாட்டு இடங்கள் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிப்பு மற்றும் சுவீகரிப்பு ஆகிய இரட்டை அபாயங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தில் பணிபுரியும் 32 ஆய்வாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லையென்பதால் அங்குள்ள அனைத்து முகங்களும் தனித்த தடித்த சிங்கள் பௌத்த முகங்கள் என்பதால் தமிழர்களின் தொல்பொருட்களும் அதன் வரலாறும் சிங்களவர்களின் தொல்பொருள் முதிசமாகப்படும் கண்கட்டி வித்தைகள் நடக்கின்றன.

இந்த நகர்வுகள் நீங்கள் நினைப்பதைவிட மிக வேகமாகவும் வீரியமாகவும் இது நகர்த்தப்படுகிறது. இந்தவாரத்தில் மட்டும் முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் அறுத்தெறியப்பட்டுள்ளன. கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்தமயமாக்கல் பகிரங்கப்பட்டது.

நாவற்குழியில் பெரிய விகாரை ஒன்றின் முனைப்பு என வடக்கு கிழக்கில் தீவிரமடையும் இந்த நாசகாரம் இப்போது மலையத்தையும் தீண்டுகிறது.

நுவரெலியா கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பலவந்தமாக பிக்குவொருவர் ஏற்றியிருக்கிறார். ஆகையால் இவ்வாறாக வீரியங்கள் நேற்று மைத்திரியுடன் சந்திப்பை நடத்திய மனோகணேசன் பழனி திகாம்பரம், போற்ற அமைச்சர்களின் பிரச்சனையோ அல்லது திலகராஜ், வேலுகுமார், வியாழேந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனித்த பிரச்சனைகளோ அல்ல.

இதற்குரிய எதிர்வினைக்கு ஆகக்குறைந்தது ஒரு கூட்டுத்தந்திரோபாயம் தேவை. இதில் தமிழர்களின் அரசியல்பிரதிநிதிகள மற்றும் குடிசார் சமூக அமைப்புகள் முக்கிய வகிபாகத்தை வழங்கவேண்டும். ஆனால் இவ்வாறான ஒருகூட்டுத் தந்திரோபாயம் திரள் நிலையாக இன்னமும் உருவாக்கப்படவேயில்லை.

இந்த திரள்நிலையற்ற உதிரிநிலையால் தான் கட்டமைக்கபட்ட அரச நிர்வாக ஆதரவுபெற்ற பௌத்த கடும்போக்கு திரள்நிலைக்கு முன்னால் நின்றுபிடிக்க முடியாமல் தென் கையிலை ஆதீன அடிகளாரும் கன்னியா பிள்ளையார் கோயிலின் காணிஉரிமையாளர் சுடுநீர்தாக்குதலால் பின்வாங்கவேண்டியுள்ளது. சிங்கள-பௌத்த மயமாக்கலின்வீச்சை எதிர்கொள்வதற்கு உதிரி மக்களால் மட்டும் இயலாது. இங்கு மக்களின் திரள்நிலையும் அரசியல் பலமும் முழுமையாக இணைந்தால் மட்டுமே எதிர்வினைகள் பலனளிக்கும். ஆனால் இந்த கூட்டுத்தந்ரோபாயப்பூனைக்கு மணிகட்டுவது யார்? அதுவே முக்கிய வினா.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!