மைத்திரியின் முதுகெலும்பு வைத்தியர் DR.மல்கம் ரஞ்சித்!

  • Prem
  • July 23, 2019
63shares

இலங்கைத்தீவில் ஐ. எஸ் அமைப்பின் கந்தக நாசகாரத்தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த நாசகார இலக்குகளில் உருக்குலைந்த புற அடையாளங்கள் ஏறக்குறைய மறுசீரமைக்கப்பட்டுவிட்டன.

அந்த வகையில் இந்த தாக்குதல்களில் அதியுச்ச இழப்புக்களை கண்ட நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய புனிதசெபஸ்டியன் தேவாலயமும் சிறிலங்கா முப்படையினரின் கட்டுமானத்தில் முற்றாக புனரமைக்கபட்டு திறந்து வைக்கப்பட்டுவிட்டது.

இந்த தேவாலயம் மீதான தாக்குதலின் குருரத்துக்கு சாட்சியாக இரத்தப்புள்ளிகளுடன் காட்சியளித்த இயேசுக்கிறிஸ்துவின் சிலை அதே அடையாளங்கள்; மறைக்கப்படாமல் கண்ணாடிப்பேழைப்பேழை ஒன்றுக்குள் வைக்கப்பட்டு காட்சியளிக்கின்றது

அதேபோலவே தேவாலய முன்றலில் தாக்குதலில் பலியான 114 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்றும் காட்சியளிக்கிறது. ஆம் இலங்கைத்தீவில் தேவாலயங்கள் அல்லது ஆலயங்கள் இல்லையென்றால் மசுதிகள் மீதான நாசகாரங்கள் தொடத்தான் செய்கிறது. தமிழர்களின் முற்றங்களின் மீதான பௌத்த அடாவடி நிலையோ சொல்லி மாளாது.

பௌத்த கடும்போக்குக்குக்கு எதிராக குரல்கொடுக்கும் சிறிலங்காகாவின் நடிகவேள் முகங்கள் கூட இறுதியில் தமது சரணடைவுகளை வெளிப்படுத்துகின்றன.

அந்தவகையில் பிக்குகள் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியதான செய்திகளும் வந்துவிட்டன

பிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக பதில் கூற அஸ்கிரிய பீடம் ரஞ்சன் ராமநாயவை அழைத்த நிலையில் அதன் மாநாயக்கர் வரகாகொட சிறிஞானரத்ன தேரர் குழாமிடம் ரஞ்சன் சரணடைந்தாகவும் அதேசெய்திகள் கூறின. இவ்வாறாக பௌத்த வீரியங்கள் வெளிப்படும் நிலையில் திருமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையாரின் சோகம் ஊரறிந்த சோகமாகிவிட்டது.

பௌத்த ஆக்கிரமிப்பிப்பு அடாவடியில் பிள்ளையார் சிக்கியநிலையில் திருமலை மேல் நீதிமன்றம் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை கட்டத்தடை என்ற ஒரு இடைக்கால தடை என்ற ஊடறுப்பை நேற்று (2307 19) )செய்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்தமாதம் 29ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்த முகங்கள் கடந்தவாரம் மேற்கொண்ட அடாவடிகளை அடுத்து தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கில் இவ்வாறு ஒரு இடைக்கால தடைவிதிக்கப்பட்டாலும், இந்த வழக்கின் மனுதாரரையோ அல்லது ஏனைய பக்தர்களையோ வெந்நீரூற்று பிள்ளையார் கோயிலுக்கு அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவை சண்டித்தன பௌத்த முகங்கள் மதிக்குமா என்பது இங்கு ஒரு முக்கியமாக வினாவாகவும் உள்ளது. அதாவது தமிழர்களின் மதவழிபாட்டு இடங்கள் மீதான கொதிநிலையின் பின்னணியில் நேற்று மீண்டும் திறந்துவைக்கபட்ட கட்டுவப்பிட்டி புனித செபஸ்ரியன் தேவாலய முன்றலில் உயிர்த்த தாக்குதலில் பலியான உயிர்களின் பெயர்களைத்தாங்கிய நினைவுக்கல் புதிதாகபளிச்சிடுகிறது.

ஆனால் இதேபோல வடக்கே நவாலியிலும் சென்ற் பீற்றேர்ஸ் என்ற இன்னொரு தேவாலய முன்றலிலும் ஒரு நினைவுக்கல் இருந்ததாலும் கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் பளிச்சிடுவது போல அதில் பளிச்சிடல் இருக்காது. ஏனெனில் 24 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு யூலை மாதத்தில் இடம்பெற்ற நாசகாரம் அது. ஆனால் நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் சரி இல்லையென்றால் நவாலி சென்ற் பீற்றேர்ஸ் தேவாலயத்திலும் சரி பலியானவர்கள் அப்பாவிப்பொதுமக்களே.

எனினும் கட்டுவப்பிட்டி நாசகரத்துக்கு பொறுப்பான நாசகாரிகள் தம்மைத்தாமே அழித்து மாண்டார்கள். ஆனால் நவாலி தேவாலய நாசகாரத்துக்கு நீதிவழங்கப்படவில்லை என்பதுடன் அதற்குபொறுப்பானவர்கள் அரசியல் முகங்களான இன்னமும் உலாவரத்தான் செய்கின்றனர். இதற்கும் அப்பால் கட்டுவபிட்டிய தேவாலயத்தை முழுமுச்சாக புனரமைத்து வழங்கிய சிறிலங்காவின் முப்படையினரில் இருந்த சிறிலங்கா வான்படையினர்தான் நவாலி நாசகாரத்துக்கு பொறுப்பானவர்கள் என்பதும் இன்னொருவிடயம். நேற்று கட்டுவபிட்டிய புனிதசெபஸ்டியன் தேவாலயத்தின் மீள்திறப்புவிழாவில் விசேட ஆராதனைகளை நடத்திய கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் மகிந்ததரப்பு பேச்சாளர்; சக பக்காஅரசியல் வாதியாகமாறி கருத்துகளை வெளியிட்டிருந்தார்

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகளின் தேவையில் தாக்குதல் என்றார். அதன்பின்னர் மிகவும் பலம் வாய்ந்த சிறிலங்கா புலனாய்வு பிரிவை ரணில்- மைத்திரி அரசாங்கம் பலவீனப்படுத்திவிட்டதாக எகிறியவர்

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லையென்பதால் இந்த அரசாங்கம் உடனடியாக விலகி வலுதிறமாக ஆட்சி செய்யக்கூடிய விண்ணர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மார்க்பரிந்துரைப்பு வந்தது. இந்தப்பரிந்துரைப்பு என்பது சிறிலங்காவை வலுதிறமாக ஆட்சி செய்யக்கூடிய கோத்தா மகிந்த போன்ற விண்ணர்களுக்குரிய மறைமுகபரிந்துரைப்பு என்பதும் குறிப்பிட்டுக்காட்டக்கூடியது.

இதற்கிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணையில் நம்பிக்கை ஏதும் இல்லையென்பதையும் அவர் சொல்லியுள்ளார்.

இந்த தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இந்த மாதத்துடன்நிறைவு செய்து, அடுத்த மாதம் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் கர்தினாலின் காட்டமான அறிக்கைகள் வந்திருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதற்கிடையே மெல்கம் ரஞ்சித் மார்க்பரிந்துரைப்பையும் ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு குறித்த கதை மீதும் மைத்திரி கடும் எதிர்வினையை செய்திருக்கிறார்.

எது எப்படியோ இலங்கைத்தீவில் ஏப்ரல் 21 கந்தகநாசகாரத்தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டாலும் தாக்குதலால் உருக்குலைந்த புறஅடையாளங்கள் மறுசீரமைக்கபட்டுவிட்டாலும் அந்;ததீவு இன்று அரசியல் அந்தகாரமையமாக தொடர்வதுதான் பெரும் சோகம்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!