பெரியபிசாசு- சின்னப்பிசாசு கதைகளும் கூட்டமைப்பின் நிலையும்

  • Prem
  • July 25, 2019
94shares

இலங்கைத்தீவின் குடியேற்ற எஜமானர் நாட்டில் இருந்து இல்லையென்றால் இலங்கையில் இருந்து அதுவும் இல்லையென்றால் பசுபிக் மாகடல் பிராந்தியத்தில் இருந்த வரும் சமகாலச்செய்திகள் அனைத்துமே Pragmatism எனப்படும் நடைமுறைவாதத்தை நிருபிக்கும் மெய்யியல் கருத்துருவாக்கங்களை உறுதிசெய்கின்றன. Theoretical எனப்படும் தத்துவார்த்தங்களை விட நடைமுறைகள் அல்லது அதன் விளைவுகளைக்கருத்தில் கொள்வதன் மூலமே ஒரு செயற்பாடு அல்லது பொருளின் தன்மையைப்புரிந்து கொள்ள முடியும் என்பதை Pragmatismஎனப்படும் நடைமுறைவாதம் அடித்துச்சொல்கின்றது.

இந்த நடைமுறைவாதத்தி;ன் அடிப்படையில்தான் இலங்கையின் உள்ளுர்களம் மற்றும் உலக அரங்கில் கிட்டும் சமகாலச்செய்திகளை நோக்க முடியும். உதாரணமாக 2015இல் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிய காரியத்தில் பெரும் வகிபாகத்தைக்கொண்ட அதே வோசிங்டன் அதிகாரமையம் சார்பாக, அதன் கொழும்புத்தூதர் அலைனா ரெப்லிப்ஸ் மகிந்தவுடன் நேற்றுநடத்திய சந்திப்பை இல்லையென்றால் ஆளும்தரப்பான யானை முகாமில் இருந்து எதிர்வரும் அரச தலைவர்தேர்தலுக்குரிய வேட்பாளராக சஜித்பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக கூறப்படும்செய்தியை உள்ளுர்நடைமுறைவாத நகர்வுகளாக கொள்ள முடியும்.

அதேபோல உலகஅரங்கிலும் இவ்வாறான Pragmatismகளுக்கு இடம் உண்டு அந்தவகையில் பிரித்தானியாவின் பிரதமராக இன்று கென்வவேட்டிட் கட்சியின் தலைவரான நேற்று தெரிவுசெய்யப்பட்ட பொறிஸ்ஜோன்சன் இன்று மாலை நம்பர் 10 க்குள் முதன் முதலாக பிரதமர் என்ற தகுதியில் நுழைந்த நகர்வை நோக்கிக்கொள்ளலாம். பிரித்தானியாவில் ஒரு பொதுத்தேர்தல் மூலமாக அல்லாமல் பிரித்தானியக்குடிப்பரம்பலில் வெறும் 0.25விகித வகிபாகத்துக்குரிய92.153 கென்சர்வேட்டிவ் உறுப்பினர்களின் வாக்குகள் மூலமான அவரால் எவ்வாறு பிரித்தானியாவின் பிரதமராக உருவாக முடியும் என்ற வினாவுக்கும் பதில் இந்த நடைமுறைவாதம். இப்போது பிரித்தானியாவில் இருந்து அப்படியே பசுபிக் மாகடல் பிராந்தியத்துக்குத் திரும்புங்கள். ஜப்பானியகடல் மற்றும் கிழக்கு சீனக் கடற்பிராந்தியத்தைப்பாருங்கள். ரஸ்யாவும் சீனாவும் முதன் முறையாக தமது போர்வான்கலங்கள் ஊடாக கூட்டுவிமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ள நகர்வை நீங்கள் எவ்வாறு நோக்கிக்கொள்வீர்கள்.

ஏனெனில் சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும்இடையில் இருதரப்புபடைத்துறை ஒப்பந்தம் ஏதும் இல்லை. வலுவான இருதரப்புபடைத்துறை ஒப்பந்தத்தைக்கொண்ட அமெரிக்காவும் ஜப்பான் இல்லையென்றால் எழுதப்பட்ட பாதுகாப்பு வரைபுகளை கொண்ட நேட்டோ உடன்பாடுகளுடன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும் தரப்புகளுக்கு சளைக்காதவிதத்தில் இருதரப்புபடைத்துறை ஒப்பந்தம் இல்லாத ரஸ்யாவும் சீனாவும் செய்த சுற்றுக்காவலின் பின்னணியும் சாட்சாத் நடைமுறைவாதம் ஆகிய Pragmatism தான்.

ஆயினும் ரஷ்ய வான்கலங்கள் எல்லை மீறியபோது தமது வான்கலங்கள் விமானங்கள் இயந்திரத் துப்பாக்கியாலும் flare gun சுடரொளித் துப்பாக்கியாலும் சுட்டு எச்சரித்தோம் என தென் கொரியா அறிக்கையிட்டமை வேறுகதை. சரி இப்போது தனித்தனியான பார்வைகளுக்கு வருவோம் சிறிலங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா ரெப்ளிப்ஸ் ஏன் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவேண்டும்?

அதுவும் மகிந்ததரப்பின் அரசதலைவர் வேட்பாளராக களம் இறக்கப்படக்கூடுமென எதிர்பார்க்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ, தனது இதய அறுவைச்சிகிச்சையை முடித்து சிங்கபூரிலிருந்து நேற்றிரவு ஷேமமாக நாடு திரும்பியபின்னணியில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அதாவது வோசிங்டன் கொழும்புக்கு இடையிலான முனைப்படையும் சோபா போன்ற ஒப்பந்தங்களில் மகிந்தாவாதிகள் கொடிபிடிக்கும் நிலையில் தென்னிலங்கையில் கடும்போக்குவாத்தை உசுப்பேற்றுவதாக கருதப்படும் அந்தத்தரப்பை அமெரிக்கத்தூதர் சந்தித்து நாடிபிடிப்பது எதற்காக என்பதில் நீங்கள் ஒரு முடிவை எடுக்கக்கூடும் இதேபோலத்தான் யானைகள்அணியில் சஜித் பிரேமதாஸவின் பெயரைஅரசதலைவர் தேர்தலில் முன்மொழியப்பட்ட விடயத்தையும் நோக்கலாம்.

ரணில்தலைமையில் நேற்று இடம்பெற்றயானைமுகாமின் முக்கிய கூட்டத்தில் யானை அணியில் ரணில்விக்கிரமசிங்க கருஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் சஜித்பிரேமதாஸவின் பெயர் உற்றுநோக்கலை ஏற்படுத்துவதற்கு காரணம் வெற்றிகுறித்த நடைமுறைவாதம் சார்ந்தது. ஆனால் சஜித்தின் முன்மொழிவில் ரணில் மற்றும் கருஜயசூரிய போன்ற முகங்களுக்கு சந்தோசம் இருக்காதென்பது வேறுவிடயம்.

இதேபோலவே பிரித்தானியாவின் 77வது பிரதமரான பொறிஸ் ஜோன்சனின் விடயத்தை நோக்கமுடியும் இன்று திரேசா மே தனது பதவியைத் துறந்ததும் ஐக்கியராஜ்யத்தின் சம்பிரதாயத்தின்படி எலிசபெத் மகாராணியின் கரத்தை முத்தமிட்டு பதவியேற்ற அவர் நம்பர் 10க்குள் நுழைந்துவிட்டார்.

அரசியல் கோமாளி என சிலரால் வர்ணிக்கப்பட்ட ஜோன்ஸன் இப்போது உலக வல்லழரச நாடு ஒன்றின்பிரதமர். இப்போது அவரை முன்னர் சற்று இளக்காரமாக பாத்த தலைகள் விழுந்து விழுந்து வாழ்த்துச்சொல்கின்றன. இணைந்து பணியாற்றத் தலைப்படுகின்றன. இந்தக்காட்சி லண்டன் முதல் பிரெசெல்வரை தெரிகின்றது. ஒன்றியத்துடன் தொடர்புகளை முற்றாக வெட்டிவிடத்துடிக்கும் பொறிஸ்ஜோன்சனின் நோ-டீல் பிரெக்சிற்; கடும்போக்காக இருந்தாலும் அவரது சொந்தக்கட்சியிலுள்ள சில அமைச்சர்கள் விலகி ஒடினாலும் பொறிஸ்ஜோன்சன் குறித்த Theoreticalஅதாவது தத்துவார்த்தப்பார்வையை அவர் தற்போது பிரதமர் என்ற நடைமுறைவாதம் வேறுவழியின்றி சில சமரசங்களை உருவாக்கத்தலைப்படத்தான்செய்கிறது.

சரி இபோது இறுதியாக தத்துவார்த்தநிலையில் பெரிய பிசாசுசின்னப்பிசாசு கதையை கடந்த 4 வருடங்களாக கூறியபடி ரணில்தரப்பில் தொங்கிக்கொள்ளும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மட்டும்தமிழ்மக்களின் அன்றாடப்பிரச்சினைகளைத் தீர்க்காமல் விட்டால் எதிர்வரும்அரசதலைவர் தேர்தலில் எமது ஆதரவை நீக்கிக்கொள்ளப்போகின்றோம் என்ற நடைமுறைவாத செய்தியை சொல்ல முடியவில்லை?

இந்த வினாவுக்கு விடைகாண முன்னர் நடைமுறைவாதத்தி;ன் அடிப்படையில் இலங்கையின் உள்ளுர்களம் முதல்; உலக அரங்கு வரையான சமகாலச்செய்திகளை மீண்டும் அசைபோட்டுக்கொள்ளுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!