இலங்கையில் நடந்தேறிய பதவி விலகல், பதவியேற்பு நாடகங்கள்! விழித்து கொள்வார்களா மக்கள்?

  • Prem
  • July 31, 2019
65shares

இலங்கைத்தீவில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஐ.எஸ்ஸின் கந்தக நாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் முஸ்லிம் அரசியல் உருவாக்கப்பட்ட இரசாயனமாற்றங்களில் இன்னொரு யூவடிவத்திருப்பம் இடம்பெற்றுள்ளது. அந்தவகையில் ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத்துடன் முடிச்சுப்போட்டு இலங்கைத்தீவின் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுட்டுவிரல் நீட்டப்பட்டு செயற்கைத்தனமாக உருவாக்கபட்ட பதவி விலகல்களின் இன்னொரு அத்தியாயம் இடம்பெற்று முடிந்தது.

அந்த அத்தியாயத்தின்படி அத்துரலிய ரத்னதேரர் என்ற பௌத்த ஹீரோபிக்கு கடந்த மே மாதத்தின் இறுதி முதல் யூன்மாதத்தின் ஆரம்பம்வரை கண்டியில் காட்டிய உண்ணாவிரதப்போராட்டம் என்ற உணர்வு சாகசகாட்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத முஸ்லிம் அரசியல் கதாநாயகர்கள் தமது பதவிவிலகல் அரங்கக்காட்சிகளை அரங்கேறினர்.

அன்றைய நாளில் சிங்கள பௌத்தர்களின் திடீர் ஹீரோவான அத்துரலியர் பௌத்த கடும்போக்குத்தளத்தில் உள்ள ஏனைய முகங்களை பின்னுக்கும் தள்ளியிருந்தது. அன்று அத்துரலியரின் ஸரண்ட் போராட்டத்தை தொடர்ந்து, யூன் 3 இல் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்று திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டதும் காட்சிமாறியது. அசாத்சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய மைத்தரியின் தெரிவுக்குரிய ஆளுனர்களும் ரணில் அரசாங்கத்தின் தெரிவுக்குரிய முஸ்லிம் அமைச்சகமுகங்களும் தத்தமது பதவிகளைத் துறந்தனர்.

பதவிவிலகியவர்கள் அனைவரும் ரணில்அரசாங்கத்துக்கு ஒரே ஒரு மாத அவகாசம் கொடுத்தார்கள். அந்த ஒரு மாத காலத்துக்குள் முஸ்லீம் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆயினும் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் முஸ்லிம் அடையாளம் என்ற அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை துறந்தமை இலங்கைவரலாற்றில் புதிசு கண்ணா… புதிசுபாணியில் இடம்பெற்றது. முஸ்லிம் அமைச்சர்களின் இந்தகூட்டுப்பதவிவிலகல் குறித்து பேசிக்கொண்ட தமிழர்களும் பாருங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமையை நம்மவர்களும் இருக்கின்றார்களே என முன்மாதிரி சலிப்பு சிலாகிப்புக்களை செய்தனர்

இந்தநிலையில் இவ்வாறு பதவி விலகியவர்களில் இருவர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பதவியேற்றனர். அதன்பின்னர் இரண்டாம்கட்டப்பதவி ஏற்பு நேற்று இடம்பெற்றது. நேற்று முன்தினம் ரணிலுடன் நடத்திய பேச்சுக்களுக்குப்பின்னர் இவர்கள் அனைவரும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை எடுத்தனர். அந்தவகையில் முஸ்லிம் கொங்கிரசிலிருந்து ரவூப்ஹக்கீம்அகில இலங்கை மக்கள் கொங்கிரசிலிருந்து ரிஷாட்பதியுதீன் உட்பட்ட சிலர் தத்தமது முன்னையபொறுப்புகளை நேற்று மாலை மைத்திரிக்கு முன்னர் ஏற்றனர்.

ஆயினும் மூன்றாம் கட்டபதவியேற்பு நகர்வுக்கும் இடமிருப்பதை நேற்றைய பதவியேற்பு நிகழ்வில் இடம்பிடிக்காத எச்.எம்.எம்.ஹரீஸ்> அலிசாஹிர் மௌலானா> பைசல்காசிம் ஆகிய 3 முகங்களின் தாமதம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களின் தாமத்துக்கு கல்முனை> தோப்பூர் விடயங்களின் கொதிநிலை காரணமெனவும் கூறப்படுகிறது.

ஆனால் இப்போது ஒரு வினாவுக்கு மட்டும் துல்லியமான விடையில்லை. முல்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிவிலகலின்போது கோரியது போல அவர்கள் மீது (உயிர்த்த ஞாயிறு)தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்படவில்லை.

ஏனெனில் விசாரணைகளை நடத்தவேண்டிய அளவுக்கு யாரும்பௌத்த சண்டியர்கள் உட்பட யாரும்அவர்கள் மீது ஆதாரபூர்வமான முறைப்பாடுகளை செய்யவும்இல்லை. அதாவது ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் சகட்டுமேனிக்கு முஸ்லீம் மக்கள் மீதான இனவாத அடக்கு முறையின்; அடிப்படையில் சிங்கள, பௌத்த இனவாத சக்திகளின் காழ்ப்புணர்வில் இந்த சுட்டுவிரல்நீட்டல் இடம்பெற்றதென்பது நிருபிக்கப்பட்டது.

ஆனால் இப்போது இந்த பதவியேற்புகளில் ஒரு விடயம் மட்டும் தெளிவாக பளிச்சிடுகிறது. அதாவது இலங்கைத்தீவின் தேர்தல்களம் களைகட்டுவதால் அமைச்ச பொறுப்புவழங்கும் உரித்துக்களுடன் மீண்டும் தமது அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்குடன் தான் முஸ்லீம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவியேற்பு நகர்வுகளை செய்திருப்பது தெரிகிறது.

ஏனெனில் பொதுவாகவே இலங்கைத்தீவில் உள்ள முல்லிம்களின் அரசியல் போக்கில், பதவியில் இருந்தால்தான்> மக்களின் உரிமைகள் குறித்து பேச முடியும் அதனைப்பெற முடியும் என்ற தோற்றப்பாடு உள்ளது . ஆகையால் தாம் அரசாங்கத்துடன் இணைந்து பதவியில் இல்லாவிட்டால் மக்களுக்கு எதையும் செய்யமுடியாது என்ற தோற்றப்பாட்டை இவர்கள் எடுத்தாலும் மக்களுக்கு ஏதாவது செய்யப்பட்டதோ இல்லையோ தமக்குரியவற்றை பெறமுடியாது என்பதை அவர்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர்.

இந்த புரிதலுக்கு ஆதாரமாக 1989இல் முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு உந்துருளி ஒன்றில் சென்ற ஹிஸ்புல்லாவும். வடக்கில் இருந்து ஒரு அகதியாக ஒரு பையுடன் வந்தேன் எனக்கூறும் ரிஷாட் பதியுதீனும் இன்று பெரும் கோடிஸ்வரர்கள். அதேபோல இந்த பதவியேற்புகள் மூலம் ஐ.எஸ்ஸின் கந்தகநாசகாரத் தாக்குதலுக்குப்பின்னர் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குரிய நீதியோ அல்லது அதற்குரிய பொறுப்புக்கூறலோ கொழும்பு அதிகார மையத்தில் இருந்து முறையாக வெளிவரவில்லை.

இதேபோல தாக்குதலுக்குப்பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் குற்றமற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனரா? என்பதும் இன்னொருவிடயம்

இதனால் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல்களும் பதவியேற்புகளும் ஒரு அரசியல் நாடகத்தின் இருவேறான அங்கங்களே! இப்போது பதவியேற்புகள் இடம்பெற்றுவிட்டன இனியென்ன நடக்கும்? விரைவில் களைகட்டக்கூடிய தேர்தல் பரப்புரைக்களத்தில் முஸ்லிம்மக்களின் முன்னால் இவர்கள் அனைவரும் தம்மைத்தாமே நாயகர்களாக சித்தரிப்பார்கள். மறுபுறத்தே சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியடையவேண்டிய முஸ்லீம் வேட்பாள முகங்கள் தலதாமாளிகைக்கு ஒருமுறை விஜயம் செய்து மகாநாயக்க தேரர்களின் காலில் விழுந்தால் அதுவும் சமரசப்ப்படக்கூடும். ஆகமொத்தம் பதவி விலகல்களும் பதவியேற்புகளும் சுயலாபஅரசியல் பாதி! மக்களுக்கு மீதி!! என்ற காட்சிப்படுத்தல்களுடன் தொட்புடையவை என்பதையும் மறுக்க முடியாது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!