கூட்டமைப்பின் வியூகம் பாயுமா? பதுங்குமா?

  • Prem
  • August 14, 2019
43shares

யானைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். ஆனால் யானை வைக்கும் அடிஜெயிக்குமா? அடிவாங்குமா? இந்த வினாக்களுக்குரிய விடையை முடிவு செய்யக்கூடிய ஆட்டம் ஆரம்பிக்கும் எல்லைக்கோட்டுக்கே அதன் வீரர் இன்னமும் வரவில்லை. இதனால் சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தலில் தனது அரசியல் புஜ பலங்கைளை தட்டிக்கொண்டு குதித்துள்ள கோத்தபாய என்ற முகத்தை எதிர்கொள்ளக் கூடியவகையில் தமது வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சியின் இன்னமும் அறிவிக்கவில்லை.

வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில் அது இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் உள்ளது. இந்த நிலையில்> கட்சியில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள, செயற்குழு கூட்டத்தில் தமது தரப்பின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்! அவர் கோட்டாபாயாவை தோற்கடிக்கக்கூடிய சிறந்த ஒரு வேட்பாளராக இருப்பார். ஆகையால் அஞ்சற்க என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல கண்டியில் அபயமளிப்பு பாணியில் கூறியுள்ளார்

ஆனால் இந்தப்போட்டிக்களத்தில் சஜித்தை இறக்குவதற்கு யானைகளின் எலிற் ரக இல்லையென்றால் Pடரவழஉசயஉல புளூட்ரோகிராசி எனப்படும் செல்வக்குழுஅதிகார மேலாட்சிவட்டம் தயங்குவது பகிரங்கமாகத்தெரிகிறது.

இதனால் இவ்வாறான புளூட்ரோகிராசிகள் தான் ஒரு தவிர்க்கப்படமுடியாத வேட்பாளர் என்பதை உணர்ந்துகொள்வதற்காக சஜித்பிரேமதாஸ என்ற 52 வயதான மனிதர் சுயம்புவாக தனக்குரிய களத்தில் தானே தீவிரப்படுவது தெரிகிறது. கடந்த 11 ஆந் திகதி வரை யானே அரசதலைவர் வேட்பாளர் என்ற தோரணையில், தனது அமைச்சின் செயற்திட்டங்கள் சார்பான நிகழ்வுகளில் கருத்துத் தெரிவித்து வந்தவர் கடந்த 12 ஆந்திகதி பதுளையில் அடுத்தகட்டத்துக்கு பேரணி வடிவில் முன்நோக்கிப்பாய்ந்துள்ளார்.

தனக்குப்பின்னால் மக்கள்திரள்நிலை இருக்கின்றது என்பதை ரணில்- ரவிகருணாநாயக்கா மேற்பார்த்த ஐதேகவின் செல்வக்குழுஅதிகார மேலாட்சிவட்டத்துக்குக் காட்டிக்கொள்வதற்காக சஜித் இந்த காட்சிப்படுத்தலையும் தனது உரையின் செய்தியையும் வடிவமைத்திருப்பது புரிதலுக்குஉரியது. இதனை கொழும்பு ஊடகம் ஒன்று கூட தனது சிந்தனைச்சித்திரத்தில் வெளிப்படுத்தியிருந்தது.

ஆட்சிஅதிகாரம் என்பது தற்காலிகமானது! அது மக்களுக்குத் தற்காலிகமாக சேவை செய்யவழங்கும் ஆணை! எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை! நாட்டு மக்களுக்காகத் தனது தந்தை பிரேமதாசா போல நடுவீதியில் உயிரைவிடவும் தயார்! எதிர்வரும் நவம்பர் மாதம்போக வேண்டிய இடத்திற்குப் போவேன்! போன்ற சஜித் மார்க் சூளுரைப்பு செய்திகள் கூட ஐதேகவின் செல்வக்குழுஅதிகார மேலாட்சிவட்டத்துக்குரிய செய்திகளும் கூட. ரணில் மேற்பார்த்த ஐதேகவின் செல்வக்குழுஅதிகார மேலாட்சிவட்டம் தமது கையில் உள்ள சஜித்தை சரியாக கணக்குப்போட்டதோ இல்லையோ சாமானிய சிங்கள மக்கள் அவரை விரும்புவதான ஒரு தோற்றப்பாடு தெரிகிறது. இலங்கையில் அனைவருக்கும் வீடு என்ற பிரேமதாசாப்பாணியை நடைமுறைப்படுத்தும் தனயனாகவும் கணிசமானோர் அவரை நோக்கிக்கொள்கின்றனர். வேறுசிலரோ அவர் நவீன பணிஸ்மாமாவாக வருவார் என சிலாகிக்கின்றனர்.

தற்போதைய முதன்மைத்தலையாரியான மைத்திரி கூட யானை முகாமில் விரும்பும் ஒரு தலை சஜித் மட்டுமே! தனது அமைச்சரவையில் உள்ள ஒரு ஊழலற்ற ஓரு அமைச்சர் என்றால் அது சஜித்தான் என்ற புகழார அடையாளத்தை கூட மேடையொன்றில் வைத்து மைத்திரி வழங்கியிருந்தார்.

ஆகையால் இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப்பார்த்து ஐதேகவில் தான் தவிர்க்கப்படமுடியாத வேட்பாளர் என்பதை உணர்த்தும் வகையிலான சஜித்ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இந்தஆட்டத்தை உணர்ந்து, ஐதேக அவரைக்களம் இறக்கினால் இலங்கையில் கோட்டபாய எதிர் சஜித் ஆட்டம் தீவிரமடையக்கூடும்.

சரி இப்போது சஜித்களம் இறக்கப்பட்டால் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் எதிர்வினை எவ்வாறு அமையக்கூடும்? இந்த வினாவுக்கு சற்று விடைதேடலாம்.

சஜித்களம் இறக்கப்பட்டால், தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் கலவையான ஒரு நிலையே தென்படக்கூடும். பொதுவாக கூட்டமைப்பின் உச்சமுகங்கள் ஐ.தே.க சார்பு நிலைத்தளத்தில்தான் நிற்பார்கள் என்ற கருத்து வலுவாக உள்ளது. அவ்வாறான கருத்தியலுக்கு வலுவான ஆதாரங்களும் உண்டு. ஆனால் இந்தவிடயத்தில் கொஞ்சம் பிகு பண்ணும் தந்ரோபயத்தை கூட்டமைப்பின் தலைமைத்துவம் எடுக்கமுயல்வதை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நேற்றைய கருத்துப்புலப்படுத்தியுள்ளது.

ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் கொள்கை மற்றும் அரசியல், வணிகம் தொடர்பாடலுக்கான ஐரோப்பிய ஒன்றியமுகங்களுடனான சந்திப்பில் இந்தச்செய்தியை வெளியிட்ட இரா. சம்பந்தன் இலங்கைத்தீவின் தற்போதைய தேவை புதியஅரசியலமைப்பே தவிரஅரசதலைவர் தேர்தல் அல்லவென தெரிவித்தார். தனது கருத்துக்குரிய விளக்கத்தையும் இரா. சம்பந்தன் வழங்கியிருக்கிறார். அதாவது இலங்கைத்தீவுக்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்கு ஏற்கனவெ மக்கள்வழங்கியஆணையை இன்னமும் நிறைவேற்றாமல் இன்னுமொரு அரசதலைவர்தேர்தலைநடாத்துவதானது மக்கள் ஆணையை மீறுகின்ற ஒரு கபடச்செயல் என்பதால் தேர்தலில் பங்கேற்பதா இல்லையா என்பதை யோசிக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்த நகர்வும் முன்னெடுக்கப்படாததால் நாட்டின் இன்றைய தேவை புதிய அரசியலமைப்பே அன்றி அரசதலைவர் தேர்தல்அல்லஎனவும் அவர் கூறினார்.

தமிழ்மக்கள்; சார்ந்து சித்தாந்தரீதியாக இரா. சம்பந்தன் புதியஅரசியலமைப்பின் தேவை குறித்து இதனைச்சொல்லமுடியும். ஆனால் நாட்டின் இன்றைய தேவை புதிய அரசியலமைப்புத்தான் என உண்மையில் சிங்கள மஹாஜனதா கருதிக்கொள்கின்றதா? அதேபோல கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய ரணில் தரப்பு இன்று புதியஅரசியலமைப்பை ஏற்றுக்கொண்டால் கூட நாடாளுமன்றத்தில் அதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மைபலம் கிட்டுமா? அத்துடன் புதிய அரசியலமைப்பை அங்கீகரிக்கும் வகையில் சர்வஜனவாக்கெடுப்பின் முடிவு கிட்டிக்கொள்ளுமா? ஆகையால் நாட்டின் இன்றைய தேவை புதிய அரசியலமைப்பே என இரா.சம்பந்தன் கூறுவதை அங்கீகரிக்கும் வகையில்நாடும் இல்லையென்பதை யதார்த்தம். அவ்வாறாயின் எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பங்கேற்பதா இல்லையா என்பதை தமிழ்மக்கள் யோசிக்கவேண்டும் என ஏன் அவர் கூறவேண்டும்? ஒருவேளை இந்தத்தேர்தலில் வெளிப்படக்கூடிய முடிவு குறித்த அவரது அரசியலாகவே இது இருக்கக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி