சவேந்திரசில்வா- கோத்தபாய! நெருங்கிய சகாக்களின் ஆட்டம்!!

  • Prem
  • August 19, 2019
416shares

ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறான். ஆனால் ஒரு தேசத்தின் தலைவரோ அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறான். இது 1800களில் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் (James Freeman Clarke) கூறியது. அமெரிக்க புரட்சி காலத்தில் வாழ்ந்த அவர் இறையியலாளரும் எழுத்தாளரும் மட்டுமல்ல அவர் ஒரு மனிதஉரிமை வாதியும் கூட.

அமெரிக்காவின் அப்போதைய அரச தலைவர் ஸ்ரிபன் குரோவர் கிளில்லான்டின் தெரிவுக்குக்கூட அவரது கருத்தியல் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது.

இப்போது ஏன் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் குறித்து நினைவுட்டப்படுகின்றது என்பதை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கக்கூடும்

உங்கள் ஊகம்சரிதான். ஜேம்ஸ் பிறீமான் கிளார்க்கின் கருத்தியல் கூறுவது போல இலங்கைத்தீவில் ஒரு அரசியல்வாதி அல்ல சில அரசியல்வாதிகள் தேசம் குறித்து அல்லாமல் தேர்தல் குறித்த செயல்களில் மட்டும் தீவிரமா இறங்கிவிட்டனர். இவர்களிடம் நாட்டின் அடுத்த தலைமுறை குறித்தது சிந்திக்கும் பிரக்ஞையற்ற அவலமும் தொடர்கிறது.

அந்தவகையில் ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று கொழும்பு காலி முகத்திடலில் வைத்து வெளிப்படுத்திய அறிவிப்புடன் களம் இறங்கியிருக்கிறார்.

ஆகமொத்தம், சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசதலைவரை தெரிவுசெய்யும் தேர்தலுக்குரிய திகதி இன்னமும் அறிவிக்கப்படாமலேயே வேட்பாளர் குறித்த அறிவிப்புகளும் களம் இறக்கங்களும் வெளிவர ஆரம்பித்து விட்டன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவாகிய தாமரை மொட்டில் இருந்து கடந்த 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கினார். அவரிடம் இருந்த அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டதா? அவரால் இந்த தேர்தலில் போட்டியிட முடியுமா? போன்ற வினாக்கள் இன்னமும் அவரது முகாமில் கூட இன்னமும் உயிர்த்துடிப்பாக வலம்வருகின்றன.

கோட்டாபயவுக்கு இன்னமும் வேட்பாளருக்குரிய தகுதி கிடைக்கவில்லையென மகிந்தவின் சகாவான குமார வெல்கம கூடக்கூறுகிறார்.

இவ்வாறான ஒரு நிலையில் இலங்கையின் 28 குடிசார் அமைப்புக்களால் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி என்ற அடையாளத்தில் ஜே.வி.பியின் அநுரகுமார திசாநாயக்க களம் இறங்கியுள்ளார்.

சிறிலங்கா அரசதலைவர் தேர்தல்களத்தில் இவ்வாறாக கோட்டாபய அநுரகுமார போன்ற குதிரைகள் கனைத்தபடி ஓடத்தயாராகும் நிலையில்

ரணில் மேற்பார்த்த யானை அணியும் மைத்திரியின் கை அணியும் இன்னமும் ஓட்டத்தில் தமது முகங்களை களம் இறக்கவில்லை.

மைத்திரி அணி இந்தவிடயத்தில் ஆர்வப்பட்டாரோ இல்லையோ இதற்குப்பதிலாக வேறு ஒருமுனையில் சிறிலங்காவின் ராணுவத்ததளபதி லெப்.ஜெனரால் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு பிரதியீடாக ஒரு முகத்தை ஆர்வத்துடன் களம் இறக்கியுள்ளார்.

அவர் அவ்வாநு களம் இறக்கிய சிறிலங்காவின் 23 வது இராணுவ தளபதியான மேஜர் ஜெனரால் சவேந்திரசில்வா என்ற முகம் இலங்கைத்தீவின் நல்லிணக்கத்துக்கும்(?) பொறுப்புக்கூறல் நகர்வுக்கும் உதிரப்பெருக்குக்கு ஆளான தமிழர்களுக்கும் ஒரு முக்கிய செய்தியை சொல்லியிருக்கிறது.

இதன் மறுபக்கமானது தமது இனத்தின் மீது புரியப்பட்ட பெரும் இனப்படுகொலையின் பொறுப்புகூறலை எதிர்பார்க்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குப்புறத்தள்ளிய குதிரை, குழியையும் பறித்தகதை தான்.

சவேந்திரசில்வாவின் இந்த நியமனமானது, முள்ளிவாய்க்கால் வரை நடத்தப்பட்ட பெரும் இன அழிப்புக்குரிய பொறுப்புக்கூறல் மீது நடத்தப்பட்ட இரண்டாவது நாசகார அடி.

தமிழர் தாயகத்தில் போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட இதே சவேந்திரசில்வா கடந்த ஜனவரியில் சிறிலங்கா ராணுவத்தின் பிரதானியாக நியமிக்கப்;பட்டவேளை முதலாவது அடி விழுந்தது.

இப்போது அவர் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் இரண்டாவது அடியும் விழுந்து விட்டது.

சிறிலங்காவின் புதிய ராணுவத்தளபதிதான் முள்ளிவாய்கால் பேரவல காலராணுவ நடவடிக்கையின் போது 58வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக இருந்தவர்.

இதே 58வது படைப்பிரிவுதான் முள்ளிவாய்காலை மையப்படுத்திய இயங்கியமருத்துவமனைகள், நிவாரண முகாம்கள் மீது சாட்சியங்கள் அற்றவகையில் திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டது.

இவ்வாறான குருரத் தாக்குதல்கள் சில வார இடைவெளியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்த்துடிப்புக்களை குருரமாக அடக்கியிருந்தது. இதனைவிட இதேபடைப்பிரிவுதான் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போகவும் தமிழிச்சிகள் மீதான பாலியல்துன்புறுத்தல்கன் அதற்குப்பின்னான படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது

இதற்கும் அப்பால் 2009மே 18ம் இல் விடுதலைப்புலிகளின் அரசியல் முகங்களின் (வெள்ளைக்கொடி) சரணடைவுநகர்வு இடம்பெற்றபோது அந்தஇடத்தில் சவேந்திரசில்வாவின் பிரசன்னம் இருந்ததது.

அதாவது சவேந்திரசில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாக கையளிக்கபட்டவர்களுக்காகவே இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற அடையாளத்தில் நூற்றுக்கணக்கான துன்பியல் மாந்தர்கள் போராடுகின்றனர்.

2009க்குப்பின்னர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த ஐ.நா விசாரணை குழுகூட தனது அறிக்கையில் 58வது படைப்பிரிவின்கட்டளை தளபதி என்ற அடிப்படையில் சவேந்திரசில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர் எனகூட்டிக்காட்டியிருந்தது.

ஆனால்; இவ்வாறு பலமாக சுட்டுவிரல் நீட்டப்பட்ட சவேந்திர சில்வாதான் இப்போது சிறிலங்காவின் புதிய ராணுவத்தளபதி.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தை அவதானிக்கவேண்டும். சிறிலங்காவின் புதிய இராணுவ தளபதி சவேந்திரசில்வா கோத்தபாயவின் நெருங்கிய சகா.

அப்படியானால் ஒரு சகா சிறிலங்காவின் ஜனாதிபதி மந்தரயவுக்கு குறிவைக்கிறார்.

மற்றைய சகா அதற்கு முன்னரே சிறிலங்காவின் ராணுவத்தலைமையகத்துக்குள் ஜம்மென தளபதியாக அமர்ந்துவிட்டார். ஆகமொத்தம் இவையெல்லாம் ஒன்றுக்கு ஒன்று வெளிப்படையான காரணங்கள் இல்லாத தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவற்றுக்எல்லாம் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன.இப்போதைக்கு இதனை அடித்துச் சொல்லலாம்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்