தாமரைக்கோபுரம் வெள்ளையானையா? எழுகதமிழில் உணர்ச்சி மட்டுமா?

  • Prem
  • September 17, 2019
133shares

இலங்கைத்தீவும் உலகமும் இரண்டு உயர்வுகள் குறித்து பேசிக்கொண்டன. அந்தவகையில் சவுதி அரேபியாவின் அரோம்கோ எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத்தொடர்ந்து உலகளாவிய ரீதியில் சடுதியாக உயர்ந்த எரிநெய் விலையுயர்வு குறித்து உலக ஊடகங்கள் பேசிக்கொண்டன எழுதிக்கொண்டன.

சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் வயல் துண்டமான ஹிஜ்ரா குரையாஸில் உள்ள அரோம்கோஇரண்டு எண்ணெய் ஆலைகள் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை இந்த உயர்வுக்கான சுழிபோடப்பட்டது

ஈரானின் பின்புலத்தில் இயங்கும் ஏமனின் ஹெத்தி கிளர்ச்சியாளர்கள் தம்மிடம் இருந்த ரோன்கள் எனப்படும் 10 ஆளில்லா வான்கலங்களைக்கொண்டு இந்த நாசகார செய்தியை சொன்னார்கள்

இந்த தாக்குதலால் சவுதியின் எண்ணெய் உற்பத்தியில் 50 சதவீதம் நிறுத்தப்பட்டது. இந்தஉற்பத்தி நிறுத்தம் இன்னும் பலவாரங்களுக்கு தொடரலாம் என தகவல்கள் வந்தால் உலகளாவிய அளவில் மசகு எண்ணெயின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததால் சௌதியின் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பை வெளியே எடுத்துவிடுவதாக வெள்ளை மாளிகையில்; இருந்து டொனால்ட் ரம்ப் சொன்னபின்னர் இந்தஉயர்வு கொஞ்சம் மந்தமாகியது.

உலகம் இந்தஉயர்வு குறித்து இன்று பேச இலங்கையர்கள் இந்த எண்ணெய் விலை உயர்வுப்பேச்சுடன் கூடவே தெற்காசியாவில் மிக உயர்ந்த கோபுரமாகக் கருதப்பட்ட உயர்ந்த தாமரைக்கோபுரத்தின் திறப்பு விழாகுறித்தும் சிலாகித்துக்கொண்டார்கள்.

இலங்கைத்தீவுக்கான சீனாவின் கொடுத்துவாங்கும் உதவியுடன் 104 மில்லியன் அமெரிக்க டொலர் என்ற முதலீட்டு தூண்டில் இரையுடன் வீசப்பட்டுள்ள இந்தக்கோபுரம் மைத்திரி தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

கொழும்பின் பேரவாவிக்கு அருகில் உள்ள தாமரைக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் கட்டுநாயக்க விமான நிலையம், சிவனொளிபாத மலை ஆகிய தெரியும் என ஆச்சரியத்துக்குரிய வகையில் சிலாகிப்புகள் வெளிப்படுகின்றன. ஆனால் இது இலங்கைத்தீவுக்கு பிரயோசனப்படாத வெள்ளையானை என்ற விமர்சனங்கள் உள்ளன.

356 மீற்றர்கள் உள்ள இந்தக் கோபுரத்தில் இருந்து மட்டுமல்ல, ஒருவேளை 3560மீற்றர்கள் உள்ள கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் உச்சியில் இருந்து பார்த்தால் கூட இலங்கைத்தீவுக்குரிய நிரந்தசமாதானம் தெரியுமா என்பது ஐயத்துக்குரியதே.

அவ்வாறு தெரியக்கூடிய சாத்தியங்கள் இருந்தால் யாழில் அல்லது ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை மக்கள் பேரணிகள் இடம்பெற்றிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்திராது

ஆனால் அவ்வாறான சாத்தியங்கள் தான் இறுதியில் எஞ்சின. அதன் அடிப்படையில்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துல சமுகத்துக்கு வெளிப்படுத்திக் கொள்ளல் என்ற அடையாளத்தில் யாழ்ப்பாணம் மற்றும் ஜெனிவாவில் பேரணிகள் பிரகடன வாசிப்புகள் இடம்பெற்றிருந்தன.

தமிழ் மக்களின் சமகாலத்தை பொறுத்தவரை நீதிகோரும் போராட்டங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு பிரிக்கப்படமுடியாதது. கொழும்பு அதிகாரமையத்தின் பாதுகாப்பு வலையமைப்புக்குள் சிக்குண்ட காணிகளை விடுவிப்பதற்கானபோராட்டங்கள், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறுமாறு நடத்தப்படும் போராட்டங்கள், போர்க்குற்றங்களுக்களுக்குரிய நீதியை கோரும் போராட்டம் என இன்றும் பல முனைகளில் போராடங்கள் தொடர்கின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரும்; போராட்டம் தோராயமான ஆயிரம் நாட்;களை எட்டவுள்ள நிலையின் அதன் வடிவத்ததை மாற்றும் முடிவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; எடுத்துள்ளனர்.

ஆகமொத்தம் தமிழர்களின் அன்றாட இயங்கியலில் தனித்த இடத்தை போராட்டக்களங்கள் கொண்டுள்ளன. ஆகையால் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், இன்றுகாலை, ஆரம்பிக்கபட்டு, யாழ். முற்றவெளியில் முடிவடைந்த எழுக தமிழ் ஒரு அசாதாரணமாக போராட்டம்அல்ல. மக்களின் திரள் நிலை ஒன்று கூடல் மதிப்புக்குரியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை.

அத்துடன் மக்கள் வீதியில் இறங்கும் திரள்நிலை அவர்களின் பல்வேறு பிரச்சினைகளை பொதுக்கவனத்துக்கு முன்னகர்த்தும் நகர்வு இலங்கைத்தீவுக்கும் புதியதல்ல தெற்கின் அதிகாரமையநகரமான கொழும்பில் உள்ள லிப்ரன் சுற்றுவட்டம் நாளாந்தம் போராட்டக்களங்களை கண்டுகொள்கிறது.

ஆக மொத்தம் திரள்நிலை போராட்டங்கள் மக்களைச் செயலூக்கப்படுத்தும் பணியை செய்வது யதார்ததம். அது காலத்தின் தேவையும் கூட

ஆனால்யாழில் இடம்பெற்ற எழுக தமிழுக்குள் சில தேர்தல் ஆதாய சூட்சுமங்களும் அவதானிகப்பட்டுள்ளது. இதன்பின்னணியில் யாழ் முற்றவெளியில் வாசிக்கப்பட்ட பிரகடனத்தின் பின்னால் இருக்கக்கூடிய உண்மையான செயற்திட்டம் என்ன? அதன் செயன்முறைப்பொறிமுறையாது? கடந்த முறை இவ்வாறாக வாசிக்கப்பட்ட எழுக தமிழ் பிரகடனத்துக்கும் இன்று வாசிக்கபட்ட பிரகடனத்திலும் இருக்கும் கோரிக்கைகளில் இதுவரை எட்டிய அடைவுகள் யாது போன்ற வினாக்கள் எழுவதும் யதார்த்தமானது.

இதற்கும் அப்பால் இந்த முறை நகர்த்தப்பட்;ட எழுக தமிழ் அடையாறம் இந்தமுறை விமர்சனத்துக்குள் சிக்கியிருப்பதையும் அவதானிக்கவேண்டும். கஜேந்திரகுமார் பொன்னப்பலத்தின் தமிழ்தேசிய முன்னணி இந்த முறை இடம்பெற்ற எழுகதமிழுடன் கோபித்துக்கொண்டது.

இதனால் எழுகதமிழ் வெற்றியடையவேண்டுமென தமிழ்மக்கள் பேரவையும் அதற்கு மாறான முடிவுக்காக இன்னொரு தரப்பு நினைத்திருக்க கூடிய சாத்தியங்களும் மறைபொருளான விடயம் அல்ல.

இதனடிப்படையில் எழுக தமிழின் வெற்றிக்காக முயன்றவர்கள் முன்னர் எப்போதும் செய்யாத ஒரு நகர்வாக மக்களைப்பங்கெடுக்கக் கோரும் பத்திரிகை விளம்பரங்கiயும் வெளியிட்ட நகர்வையும் இங்கு குறிப்பிட்டுச்சொல்லியே ஆகவேண்டும்

ஆகமொத்தம் எழுக தமிழோ அல்லது பொங்கு தமிமோ இல்லையென்றால் ஜெனிவாவில் இடம்பெற்ற நீதிக்கான பேரணியோ தமிழ்மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடிய திரள்நிலை ஒன்று கூடல்கள் என்ற வகையில் அவையாவும் அவசியமானவை. ஆனால் இவ்வாறான திரள்நிலை ஊடாக வெளிப்படுத்தப்படும்போராட்டங்கள் ஊடாக தமிழ் மக்களுக்கு கிட்டிய அடைவுகள் குறித்தும் அதன் வடிவமைப்பாளர்கள் சுய பரிசோதனை செய்வது மிக மிக அவசியமானது.

ஏனெனில் மக்களுக்குரிய அடைவுகள முன்னிலைப்படுத்தும் செயற்திடடங்கள் இல்லாத வெறும் உணர்ச்சிகர கொட்டொலிகள் அல்லது காலச்சுழற்சி அட்டவணையில் மட்டும் வருடாவருடம் பதிவுசெய்யப்படும் பேரணிகள் என்ற அடையாளங்களாக மட்டும் இவை அமைந்தால் சிகிச்சை வெற்றி சீக்காளி செத்தான் என்ற நிலைமையே பிரதியெடுக்கப்படக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!