சஜித் பாம்பு கேட்கிறது… ரணில் கருடா சௌக்கியமா?

  • Prem
  • September 27, 2019
119shares

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்! ஐயன் வள்ளுவன் இந்த உலகுக்கு தந்த குறள்களில் ஒன்று இது ஈகை அதிகாரத்தில் வரும்பசி குறித்து பேசும் இந்தக்குறளானது,

தமது பசியைப் பொறுத்துக் கொள்ளும் தவசிகளின் ஆற்றல் குறித்தும் ஏனையோரின் பசியை ஆற்றக்கூடிய மாந்தர்களின் மாண்பு குறித்து பேசுகின்;றது.

உணவு தேவைப்படும் ஒருவருக்கு எழும்உணர்வுநிலைபசி என்ற இந்த உணர்வின் பின்னணியில் தமிழ்மக்களை கடந்த 3 தசாப்தங்கள் கடந்து ஒரு மானிடன் உணர்வுமயமாக நினைவூட்டிக்கொண்டான்

தியாகி திலிபன் என்ற இந்தமானிடன் இருந்த பசி குறித்து கடந்த 32 வருடங்களாக தமிழினம் பேசுகிறது. அதிலும் 2009க்குப்பின்னர் இது ஒரு தசாப்தம் கடந்த பேசுபொருளாக மாறிவிட்டது.

தமிழர்களுக்கு இன்னமும் கிட்டாதஅரசியல் உரிமையை மையப்படுத்தி இப்போதும் உயிர்ப்பாக இருக்கும் அந்தப்பசியின் பின்னணியில் கொழும்பில் புதிய காட்சிகள்தெரிந்தன.

ஏற்கனவே சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல் என்ற பந்தயத்திடலில் கோட்டபாய ராஜபக்ச அனுரகுமார திசாநாயக்கா போன்ற முக்கிய குதிரைகள் அரசியல் புளுதியை கிளப்பிய கனைக்கும் நிலையில் இப்போது அங்கு சஜித் குதிரையும் அதிகாரபூர்வமாகஇணைந்துவிட்டார்.

இதுவரை சுயம்புவாக கனைத்தவர் இனி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக முன்னர் சரத்பொன்சேகா மைத்திரிபால சிறிசேன ஆகியோர் போட்டியிட்ட அதே அன்னச்சின்னத்தில் கனைக்கலாம்.

வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட சஜித் அதன் பின்னர் ஒரு ஊடக சந்திப்பை நடத்தினார். அதில் போகிற போக்கில் தமிழர்களுக்கும் ஒருசெய்தி சொன்னார்.

ஒருமித்தநாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பதே அவரதுசெய்தி.

அத்துடன் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தான் முன்வைக்கும் சகலயோசனைகளும் தன்னுடையவையே என்றும் அவதானமாக குறிப்பிட்டார். அதாவது ஒருமித்தநாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்பது ஐ.தே.கவின் திட்டமல்ல அது தன்னுடைய சொந்த எண்ணங்கள் என்பது அவரது அவதானம்

இதற்கும் அப்பால் நிபந்தனைகளை முன்வைத்த ரணிலுக்காக ஒரு பொடிவைப்பு செய்தியை சொன்ன அவர் தனது அரசியல் வரலாற்றில் ஒருபோதும் நிபந்தனை அரசியலை ஏற்றுக்கொள்வது இல்லை என்றார். தனக்கு இதுவரை குடைச்சல் கொடுத்த ரணிலே வேறுவழியின்றி தன்னைபிரேரிக்க வைத்துவிட்ட வெற்றியுடன் இந்த காட்சிப்படுத்தல் தெரிந்தன்

எது எப்படியோ சிங்களத்தின் இந்தக்குதிரைகளில் ஏதாவது ஒரு குதிரை எதிர்வரும் நவம்பருக்குப்பின்னர் கொழும்புஅதிகார மையத்தில் இருந்து கனைத்தாலும் திலிபனின் பசி தீரப்போவதில்லை.

இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் தற்போது இரண்டாம் மூன்றாம் தர குடிமக்களாக கூட கருதிக்கொள்ள முடியுமா என வகையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது

தனது சொந்த மரபுசார் நிலத்தில் அடாவடியாக பிணங்கள் எரிக்கப்படக்கூடிய நிலையில் தமிழினத்தின் சமகாலம் கடக்கின்றது.

நிரந்தரமான- காத்திரமான அரசியல் தீர்வு ஒன்று வராவிட்டால் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு, அந்நிய பிணங்களின் எரித்தலின் ஊடாக கூட மல்லினப்படுத்தப்பட்டுவிடலாம் என்ற நிலை, தமிழர்களின் முற்றங்களுக்கு அறைந்து சொல்லப்படுகின்றது.

ஆனால் தமிழர்களின் அரசியல் வெளியோ எதைத்தின்றால் பித்தம் தெளியும் என பேசிக்கொள்கிறது. புறநிலையில் எழுக தமிழ்களை மட்டும் நடத்திக்கொண்டு சுருண்டுபடுத்துவிடுகிறது. 32 ஆண்டுகளுக்கு முன்னர் திலிபன் முன்வைத்த எழுச்சிக்கான அறைகூவல் என்பது, வெறும் பகட்டாரவாரப் அறைகூவல் என தமிழர்களின் அரசியல் வெளிநினைக்கின்றதுபோலும்.

ஆனால் திலிப அறைகூவலென்பது அரசியல் பப்ட்டாக்கள் குடுமிப்பிடி சண்டைகள் மற்றும் தேர்தல் ஆதாய போட்டி எல்லைகளைத்தாண்டி தமிழ்த்தேசம் பலம்பெறுவதற்குரிய அர்த்தமுள்ள அறைகூவலாகும்

எனினும் சமகால தமிழ்அரசியல்பரப்பு யதார்த்தப்போலிகளுக்கு சிக்கி வீராப்புத்தனமான உணர்ச்சிவச ஜனரஞ்சக அறிக்கையிடல்களை மட்டும் காட்டிக்கொள்ளத்தான் செய்கிறது.

மறுபுறத்தே அநகாரிக கொள்ளுப்பேரன் வழிவந்த சிங்கள-பௌத்த தேசியமோ கடந்தசிலதினங்களுக்கு முன்னர் அத்தஞானசார தேரர் என்ற சண்டித்தன ஆசான் ஊடாக தமிழர்களுக்கு நீராவியடியில் படிப்பினை காட்டிவிட்டு சென்றிருக்கிறது.

இது பௌத்த பூமி இங்கு பிக்களுக்குத்தான் முதலிடம். இதனை தமிழ் மக்குகளே புரிந்துகொள்ளுங்கள் பிக்களுக்குரிய முதலிடத்தை மறுப்பதில் நீதிமன்றத்துக்கு வேலையில்லை என அவரது குழாம் தமிழ்சட்டவாளர்கைளை சுட்டுவிரல் நீட்டி எச்சரிப்பதையும் காணொளிகளில் கண்ணார காணமுடிந்தது

இதற்கும் அப்பால் இலங்கைத்தீவின் சகலதளங்களிலும் சிங்களப் பௌத்த தேசியத்தைத் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சஜித்தும் கோட்டாவும் போட்டிபோடுவதும் படையத்துறைமுகங்களை காக்கும் தேசியத்தலைகள் யாமேஎன போட்டிபோட்டு அபயமளிப்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆனால் மறுபுறத்தே தத்துவார்த்த தேக்கத்தில் சிக்கியிருக்ககூடிய தமிழ்த் தேசியம் தற்காப்புத் தேசியவாத குறுகிய எல்லைக்குள் தன்னைச்சுருக்கிக்கொள்ளமுனைகிறது.

தியாகிதிலிபன் என்ற மானிடன் இருந்த பசி குறித்தும் அந்த பசி ஏற்படுத்திய மரணம்குறித்து 2019 இலும் பேசிக்கொள்ளும் அஞ்சலித்துக்கொள்ளும் தமிழர்களின் அரசியற்பரப்பு ஏன் வெறும் புறநிலையிலேயே இன்றும்சுற்றிச்சுழக்கிறது? திலிபனுக்கு அஞ்சலிசெய்வோர் தமதுஅகங்களை கேட்கவேண்டிய கேள்வி!

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி

ஸ்ரீலங்கா பொதுத் தேர்தலில் நடைபெற்ற ஐந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் - வெறும் 3000 வாக்குகளால் தெரிவான எம்.பி