கோட்டாவுக்கு பாயும் அரசியல் உந்துகணை! War head வெடித்தால் ஜனாதிபதி கனவு சிதறும்!!

  • Prem
  • October 01, 2019
158shares

சிறிலங்கா அரசதலைவர் தேர்தல் என்ற ஒரு புள்ளியை மையப்படுத்திய இலங்கைத்தீவின் அரசியல் களத்தில் இந்தவாரம் புதிய புதிய பரபரப்புக்களுக்கும் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது என்பதற்குரிய ஆதாரங்கள் வெளிப்பட்டன.

அந்தவகையில் பெரும் தாரை தம்பட்ட முழக்கங்களுடன் களம் இறங்கிய தாமரை மொட்டின் நம்பிக்கை நட்சத்திர வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தக்கூடியவகையில் இன்று ஒரு முக்கிய அரசியல் உந்துகணை சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏவப்பட்டுள்ளது.

அந்த உந்துகணையில்; நுனியில் கோட்டபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை மீளெடுத்ததாக பொய்கூறி சிறிலங்காவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளார் என்ற வெடிமருந்து பொருத்தப்பட்டுள்ளது.

ஒரு வேளை இந்த வெடிபொருள் நமத்துப்போகாமல் வெடித்தால் கோட்டபாய கொண்டுள்ள ஜனாதிபதி மந்தரயக்கனவு நனவாக கூடிய அடுத்தகட்ட சாத்தியப்பாட்டுத்தளத்துக்கு செல்லாமல் கனவாகவே கலைந்து விடலாம்

நாளை மறுதினமான ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கோட்டபாயமீதான இந்த வழக்கு வெற்றிபெற்றதோ இல்லையோ இந்த வழக்கைத்தொடுத்த யானைகள் சார்பான சட்டமுகங்களான பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவரவும் காமினி விஜயங்கொடவும் காலநேரம் பார்த்து தமது War head ஐ அதாவது அரசியல் வெடிமருந்தை பொருத்தியுள்ளனர்

கோட்டபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமை மீளப்பெறப்பட்டமைக்கான முறையான சான்றிதழை சமர்ப்பிக்காமல் சிறிலங்கா கடவுச்சீட்டையும்தேசியஅடையாள அட்டைiயும் சட்டத்திற்கு முரணான விதத்தில் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உண்மையில் பாரதூரமானது.

இதன அடிப்படையில்; குறித்த கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை கோட்டாபாய பயன்படுத்துவதை தடு;க்கும் வகையில் ஒரு இடைக்காலத்தடையுத்தரவையும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் எதிர்பார்த்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் 2 ஆந் திகதிக்குப்பின்னர்மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுக்கக்கூடிய முடிவு மிக முக்கியமானதாக மாறக்கூடும். இந்த நிலையில் கோத்தாவின் எதிரணியான யானைகள் முகாமில் இருந்து உபரியான உளவியல் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

தாமரைமொட்டுக்காரருக்கு B.p யை எகிறவைக்கும் வகையில் வரும் இந்த Fearpsycho பாணித் தாக்குதலை முன்னின்று தொடுக்கும் ராஜிதசேனாரத்தினா போன்ற முகங்கள் சிலவேளை அரச தலைவர் தேர்தலில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பின்வாங்கலாம் அதாவது வாபஸ்பெறலாம் எனக் கெவுளி கூறுகின்றனர்.

இவ்வாறாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளமுகம் தேர்தல் களத்தில் இருந்து யூ வடிவத்திருப்பத்தை எடுக்கலாம் என பேசுபொருள் வந்த நிலையில் கடந்த ஓகஸ்ற18 ஆந்திகதி வரை சிறிலங்காவின் ராணுவத்தளபதியாக இருந்த ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று சடுதியாக வேட்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார்.

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தனது ஓய்வுகாலத்தில் 5 வாரங்களை கூட கழிக்காத நிலையில் நவம்பர் 16 தேர்தல்திருவிழாவுக்காக தேசிய மக்கள் இயக்கம் சார்பாக களமிறங்கியிருக்கிறார்.

இலங்கை தழுவிய ரீதியில் இருக்கும் பல்துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்ட இந்த தேசிய மக்கள் இயக்கத்துக்கும் பொதுவேட்பாளராக ராணுவசீருடையில் இருந்த விறைப்பான முகம் தேவைப்பட்டமை கொஞ்சம் அசாதாரணமானது தான்.

இதற்கிடையே கோட்டபாய மீதான அடுத்தங்களின் பின்னணியில் தாமரைமொட்டுத்தரப்புடனான பேரம்பேசலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிகைதனது கையை ஓங்கவைத்துள்ளது.

முதலில் தாமரைமொட்டு தவிர்ந்த பொதுச்சின்னம் என்ற முக்கியமான துருப்புச்சீட்டை எறிந்த கை> அது சாத்தியப்படாத நிலையில் இனியும் மொட்டுக்கு …கை கை கொடுக்காது என்ற செய்தியை கூறியுள்ளது.

சுpறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரியும் அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்காவும் நேற்று இருவேறு இடங்களில் கூறிய இந்த செய்தியின் அடிப்படையில் பொதுஜன பெரமுனவுடன் இணைவதில்லை என்ற முடிவை தமது கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்கள் எடுத்ததாகவும்

சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆப்பு அடிப்பதே தாமரை மொட்டின் நோக்கம் என்பதால் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக இருவருமே கோரஸ் பாடியுள்ளனர்.

ஆகையால் இன்றிரவு மைத்திரி தலைமையில் இடம்பெற்ற சிறிலங்காசுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு அங்கிகரிக்கப்பட்டால் தாமரைமொட்டுக்கு புதிய சவால்கள் உருவாககூடும்;.

இந்த சவால் சிலவேளைகளில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுக்காக தாமரை மொட்டை படியிறங்கவைக்கக்கூடும். அதாவது தற்போதைய சட்டச்சிக்கல்களில்இருந்து கோட்டபாய தப்பிவந்தாலும் அவர் சிறிலங்காவின் எதிர்கால ஜனாதிபதியாக வர விரும்பினால் அவ்வாறு அவரைல் வர முடியுமாக இல்லையா என்பதைத்தீர்மானிக்கும் சக்தியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளது என தாமரை மொட்டுக்கு வழங்கப்படும் செய்தி உண்மையிலேயே தாமரை மொட்டில்உள்ள ராஜபக்ச சகோதரயோக்களுக்கு சவாலே…சமாளி நிலைதான்

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?