War head நமத்தது! கோட்டா கனவு மறுபிறப்பு!!

  • Prem
  • October 04, 2019
85shares

கடந்த முறை இதே இடத்தில் பதியமிட்ட பத்தி, கோட்டாவுக்கு பாயும் அரசியல் உந்துகணை! War head வெடித்தால் ஜனாதிபதி கனவு சிதறும் என்ற தலைப்பில் இருந்தது.

எனினும் கடந்த முறை எழுதப்பட்ட பத்தியில் சிறிலங்காவின் எதிர்கால அரசதலைவர் என்ற ஆசையில் மிதக்கும் கோட்டபாய ராஜபக்ச தில்லாலங்கடியாக சிறிலங்கா கடவுச்சீட்டு மற்றும் தேசியஅடையாள அட்டையைப் பெற்றார் என்ற அடிப்படையில் மடக்கப்படும் காட்சிகளை இலங்கையர்கள் காணநேரிடலாமா? என ஒரு வினா எழுப்பட்டு அதற்கு ஆம் எனச்சொல்வது மிகமிக கடினமானது எனவும் பதிவிடப்பட்டிருசந்தது.

இவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவிட்டதை போலவே இன்று சிறிலங்கா ஜனநாயக சோசலிசக்குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது.

அதனடிப்படையில் கோட்டாவுக்கு பாயும் அரசியல் உந்துகணை! War head வெடித்தால் ஜனாதிபதி கனவு சிதறும் என்ற தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு மாற்றியுள்ளது

அந்தவகையில் இனி கோட்டாவுக்கு பாய்ந்த அரசியல் உந்துகணையின் War head நமத்துப்போனது! ஜனாதிபதி கனவு மறுபிறப்பு!! என புதிய தலைப்பைபார்க்கலாம்

ஆனால் இன்றுமாலை 6 மணிவரை இது ஒரு உற்றுநோக்கலுக்குரிய பரபரப்பான நாடகமாகவே இருந்தது.

இந்தபரபரப்பில் மகிந்தவுக்கும் பதற்றம் இருந்ததால் தான் மஹிந்த தனது மூத்த சகோதரயோவான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவை திடிரென கட்டுப்பணத்துடன் களமிறக்கினார்.

கோட்டாபயவின் வழக்கு குறித்த தீர்ப்பு இன்று வெளிவருவதற்கு சற்று முன்னர் இந்த பிளான் B நகர்ந்தது. சமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவராக இருந்தாலும் அதிலில்லாமல் சுயேட்சைச்சின்னம் ஒன்றில்களமிறங்கும்வகையில் இந்த நகர்வு இருந்தது.

சிறிலங்கா சுதந்திரபொதுஜனகூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் அதன்செயலாளர் சுமித்விஜேசிங்க> சமல் ராஜபக்சவிற்குரிய கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தார்.

ஆயினும் எதிர்வரும் நாட்களில் சமல் ராஜபக்சவுக்குபரபரப்பான நிகழ்சிநிரல் தேவைப்படாதவகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போதைக்கு மகிந்த தரப்புக்கு சந்தோஷய செய்துள்ளது.

அதிலும் தனது சிறிலங்கா பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்தமனுவை விசாரித்த மூன்று நீதியரசர்களும் ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியமை கோட்டாபயவுக்கும் ஒரு ஆசுவாசத்தை வழங்ககூடும்

ஆனால் இந்தவழக்கில் ஒருவேளை தனக்கு பாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் தன்னால் எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடமுடியாமல்போயிருக்கும் என்ற விடயத்துக்கு அப்பால் தனது நிலை நாடற்ற ஒரு நிலையாக மாறியிருக்கும் என்பதையும் அவர் அறியாதவர் அல்ல.

எது எப்படியோ கடந்த 3 நாட்களாக சிறிலங்காவின் அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த விடயம் இப்போதைக்கு ஒய்ந்துவிட்டது.

இந்தஒய்வின் பின்னால் கோட்டாபய ராஜபக்ச இலங்கை குடியுரிமை உள்ளவர்தான் என்பதை மேன்முறையீட்டு தொழினுட்ப ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது.ஏனெனில் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டதன் முகாந்திரமே கோட்டாபய ராஜபக்ச ஒரு இலங்கை குடிமகன் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவித உரிய ஆவணங்களும் கிடையாது என்பதே.

இதன்அடிப்படையில் கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை கைவிடப்பட்டுள்ளதாகமுன்வைக்கப்பட்ட விடயங்களை மட்டும் கருத்திற் கொண்டு, அவருக்கு சிறிலங்காவின் ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆகியன அவருக்கான கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியவற்றை விநியோகித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.

அத்துடன் கோட்டாபய தனது அமெரிக்ககுடியுரிமையை துறந்தமைக்கான உரிய ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லைஎன்பதால் கடவூச்சீட்டு மற்றும் தேசிய அடையாளஅட்டை ஆகியன விநியோகிக்கப்பட்டது. சட்டவிரோதம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இன்று வழங்கபட்ட சாதகமான தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த கோட்டா ஆதரவாளர்கள் அந்த வளாகத்தை அதகளப்படுத்தினர்.பட்டாசு கொழுத்தி கோட்டாவுக்கு ஜெயவேவா என கொட்டொலிகளை எழுப்பினர். ஆகமொத்தம் சிறிலங்காவின் அரசியல் களத்தின் ஒரு அங்கம் தனது பரபரப்பைக்குறைத்தாலும் இன்னும் சில அத்தியாயங்கள் பரபரப்பாக காத்துள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?