சுதந்திரக்கட்சியின் ஆதரவால் கோட்டபாயா வெற்றிக்கு அருகிலா?

  • Prem
  • October 09, 2019
109shares

கல்யாணராமன் படத்தில் கமலஹாசன் பாடிக்கொள்ளும் ஆஹா வந்திருச்சு காதல் வந்திரிச்சு பாடலைப்போல, ஆஹா வந்திரிச்சு கோட்டாபயவுக்கு கையின் ஆதரவு வந்திரிச்சு என்பதாக ஒரு ஜவ்வு ஆட்டம் முடிவடைந்துவிட்டது.

அங்கு சுத்தி இங்கு சுத்தி இப்படித்தான் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு வரும் என பரவலாகவே ஊகிக்கப்பட்டதால் இவ்வாறான ஒரு முடிவுக்காக மைத்திரி தரப்பு இந்தளவுக்கு இழுப்பு இழுத்து இவ்வளவு டம்மி ஆட்டங்களையும் நடத்தியிருக்கத்தேவையில்லை.

எது எப்படியோ எங்கள் ஆதரவு தாமரை மொட்டுக்கோத்தாவுக்கே எனச்சொல்லிய கை ஒருவாறு கை உயர்த்தி இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ராஜ பக்ச குமாரர்களே இதோ ஆதரவைப்பெற்றுக்கொள்ளுங்கள் என செய்தி சொல்லியிருக்கிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய முகமான நிமல் சிறிபால டி சில்வா இன்று பகல் கட்சித்தலைமையகத்தில் வைத்து இந்த செய்தியை கூறியதன் மூலம் இந்த தேர்தல் களத்தின் இறுதி ஆட்டத்தில் ஏனைய வேட்பாளர்களை விட வெற்றிக்கோட்டுக்கு அருகே கோட்டபாய ராஜபச்ச முன்னகர்த்தப்பட்டிருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது.

அதேபோல மறுபுறத்தே தற்போதுள்ள நிலையில், கோட்hவுக்கு கை உயர்த்திப் பயணித்தாலேயே தமது சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் அழிவடையாமல் காப்பாற்றப்படும் என்பதையும் மைத்திரி தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

எது எப்படியோ இறுதிவரை இந்தஆட்டத்தில் ஒரு கேம் சேஞசராக இருக்க முன்ற மைத்திரி இப்போது இந்த நிலைக்கு வந்துவிட்டார்.

2015 சிறிலங்காவின் முதன்மைத்தலையாரியாக வந்த மைத்திரி முதலில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென ஒரு முறைதான் அந்தபதவியை வகிப்பேன் என்றார். ஆயினும் பின்னர் ஒருகட்டத்தில் இரண்டாவது முறையும் முதன்மைத்தலையாரியாக இருந்தால் என்ன என்ற ஒரு ஆசை, அவருக்கும் எட்டிப்பார்த்தது. எனினும் மைத்திரியின் தொடர் சொதப்பல் ஆட்டங்களால் அவரது சொந்தக்கட்சித்தரப்பில் இருந்து கூட இதற்கு முழுஆதரவு வரவில்லை.

இதற்கிடையே கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் புதிதாக பிறந்த பொதுஜன பெரமுனவாகிய தாமரை மொட்டு நாடாளாவிய ரீதியில் சராசரியாக 50 இலட்சம் வாக்குகளைபெற சிறிலங்காவின்அரசியலில் பலவருடவரலாற்றைக் கொண்ட சிறிலங்காசுதந்திரக் கட்சியோ சாராசரியாக 14 இலட்சத்தை பெற்று ஹி ஹி என பல்லிளித்திருந்தது. இதே தேர்தலில் ரணிலின் யானை முகாம் 36 இலட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தமையும் அவதானிக்கவேண்டும்

இவ்வாறான ஒரு நிலையில் கடந்தவருட ஒக்டோபரில் மைத்திரி செய்த சொதப்பல் ஆட்டமும் இந்தவருடத்தின் ஏப்ரலில் இடம்பெற்ற ஐ. எஸ்ஸின் நாசகாரத்தாக்குதல்களும் இலங்கைத்தீவின் அரசியலில் சில ரசாயன் மாற்றங்களை உருவாக்கிய பின்னர் நாட்டின் முதன்மைத்தலையாரியை தெரிவுசெய்யும் தேர்தல் களம் குறித்த பேசுபொருள் உருவானது.

இந்தநிலையில் இந்தக்களத்தில் தாமரை மொட்டில் கோத்தா குதித்த பின்னர் தாமும் குதிக்கப்போவதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி வித்தைகாட்டியது. கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவோ இன்றும் ஒரு படிமேலேபோய் மைத்திரியும் களம் இறங்குவதாக அதிகமாக சவுண்டு விட்டார். ஆயினும் இறுதியில் அதுவும் சரிவரவில்லை.

இதன்பின்னர் மொட்டுச்சின்னத்தையாவது மாற்றி பொதுச்சின்னத்தில் கோத்தாசை நிற்கச்சொல்லுங்கள் அதற்கு ஆதரவு வழங்குகின்றோம் என சுதந்திரக்கட்சி லாவணியை பாடியது ஆனால் அதற்கும் மொட்டு இடமளிக்கவில்லை.

இந்தநகர்வுகள் மறுபுறத்தே மைத்திரியின் கையில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி மிகப்பலவீனமான உள்ளதென்பதை மக்களுக்கு பகிரங்க்படுத்தியது இதனால் இந்தவியத்தில் கோத்தாவுக்கு எதிராக கெத்தாகவும் கொத்தாகவும் அவர்களால் நிற்கவேமுடியவில்லை.

இதற்கிடையே ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து சில விடயங்களை சுதந்திரக்கட்சித்தரப்பு கறக்க முயன்றபோதிலும் அந்த விடயத்திலும் மொட்டு அணி விடாக்கண்டன் கொடாக்கண்டனாக நடந்து கொண்டதால் அதற்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தி காரியத்தை சாதிக்கும் வகையில் மைத்திரி சஜித்துடன் சில சந்திப்புக்களை நடத்தினார்.

இந்தசந்திப்பு சிறிலங்காசுதந்திரக்கட்சியின் ஆதரவை எதிர்பார்த்துள்ள தாமரைமொட்டுக்கு திக்திக் நிலையை உருவாக்கியதென்னவோ உண்மைதான்.

ஒருவேளை கோட்டபாயவை புறந்தள்ளி சஜித்பக்கம் மைத்திரி தனது ஆதரவுக்கரத்தை நீட்டிவிட்டால் என்ன செய்வது? இவ்வாறு ஒருவேளை ஆதரவு வழங்கப்பட்;டால் எதிர்வரும் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை கோட்டபாயவினால் பெறமுடியாதே என்ற கலக்கம் மொட்டு அணிக்கு இருந்ததது.

இதன் அடிப்படையில் தான் எப்பவோ முறிவடைய வேண்டிய மொட்டு- கை பேச்சுக்கள் இழுபட்டுச்சென்றன. இறுதியில் எங்கள் ஆதரவு கோத்தாவுக்கே என அது இன்று கூறியிருக்கின்றது.

அத்துடன் இந்த அறிவிப்பு வெளிப்பட்ட சமகாலத்தில் சிறிலங்கா சுதந்திக்கட்சியின் செயற்பாடுகளை சுயாதீனமாக நடாத்திச் செல்ல கட்சியின் தலைவர் லக்ஷமன் பியதாச பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் தேர்தல் நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என மைத்திரி தரப்பு அடிக்குறிப்பிட்டிருக்கிறது.

கட்சியின்தலைவராக இருக்கும் மைத்ரி நாட்டின் முதன்மைத்தலையாரியயாகவும் செயற்படுவதால் அரசியல்ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்துக்கு இவ்வாறான நியமனம் அவசியம் எனவும் வியாக்கியானங்கள் வந்துள்ளன.

ஆனால் இந்த நியமத்தின் மறுபக்கம் வேறொரு கதையுடன் தொடர்பு பட்டிருக்ககூடும். அதாவது கோட்டாபாயவுக்கு ஆதரவு வழங்கிய முடிவை எதிர்க்கும் சந்திரிகா போன்ற முகங்கள் கட்சிக்குள் கிளர்ச்சி செய்யக்கூடும் என மைத்திரிதரப்பு அஞ்சுகிறது.

இந்த அச்சநிலைக்குத்தோதாக கோட்டாவுக்கு ஆதரவை வழங்கப்போவதில்லை என்ற சந்திரிகாவின் மறுப்புநிலையும் பகிரங்கமாகியுள்ளது. அத்துடன் கட்சியின் இந்தமுடிவு சந்திரிகா குமாரவெல்கம் போன்ற முகங்களால் மேலும் உருக்கூட்டப்படடால் அது ஒரு உள்ளக குழப்பமாக மாறக்கூடும் என்பதால் இந்தநிலையை எல்லாம் சமாளிக்க கூடியவராக லக்ஷமன் பியதாச முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சரி இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி கோத்தாவுக்கு வழங்கிய ஆதரவின் மூலம் அவர் வெற்றிக்கோட்டுக்கு அருகே நகர்த்தப்பட்டிருப்பதாக வைத்துக்கொண்டால் இந்தநிலைமையை சமாளித்து தாமும் வெற்றிபெறவேண்டுமானால் சஜித்அணிக்கு உள்ளதெரிவு என்ன? தமிழ்பேசும் மக்களின் வாக்குகளை 2015இல் கணிசமாக அமுக்கியது போல அப்படியே அமுக்குவது மட்டும்தான். ஆனால் 2015இல் இருந்தது போன்ற ராஜபக்ச குடும்ப வெறுப்புநிலை உண்மையில் தமிழ்பேசும் வாக்குவங்கியில் இன்று அச்சொட்டாக அப்படியோ இருக்கிறதா? தமிழ்பேசும் மக்களிடமிருந்து 2015இல் மகிந்த பெற்றதைவிட இந்தமுறை கோத்தா குறைவான வாக்குகளை பெறுவாரா?

இந்தஇரண்டு வினாக்களுக்கு இல்லை என பதில் வந்தால் கோத்தா வெற்றிக்கோட்டுக்கு அருகே நகர்த்தப்பட்டுள்ளதான கருத்தியல் உறுதிப்படுத்தப்படக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!