தமிழ்கட்சிகள் பஞ்ச ஒப்பம்! அதீத பிம்பம் தேவைதானா?

  • Prem
  • October 15, 2019
145shares

நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களை சமகாலத்தில் உள்ளுரிலும் காணமுடிகிறது உலக அரங்கிலும் காணமுடிகிறது.

வடகிழக்கு சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்துகளின் முதுகில் அமெரிக்கா குத்தியவுடன் தமது இருப்புக்கு ஆபத்தாக எல்லைதாண்டி வரும் துருக்கியின் வியூகத்தை முறியடிக்க தமக்கு ஒவ்வாமை கொண்ட அசாத்தின் இராணுவத்தோடு குர்துகள் சமரசத்தை எட்டினர்.

இவ்வாறாக குர்துகள் எடுத்த திடீர் சமரச நிலையை எதிர்பார்க்காத டொனால்ட் ரம்போ தன்னால் முதுகில் குத்தப்பட்ட குர்துகளின் ஆற்றாமையையும் குர்துகளை கைவிட்டமை ஒரு துரோகம் அமெரிக்க ராணுவ உயர்மட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பையும் சமாளிக்க துருக்கி மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடி என்ற கோதாவில் சில நகர்வுகளில் இறங்கியுள்ளார்.

அதன் முதற்கட்டமாக துருக்கியின் இரண்டு அமைச்சகங்களுக்கும், துருக்கி அரச இயந்திரத்தின் மூத்த அதிகாரிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வோசிங்டன் கூறுகிறது. அத்துடன் இந்த நிலவரங்களை கையாளவென அமெரிக்க துணை அரசதலைவர் மைக் பென்சும் விரைவில் ஓடோடிச்செல்லவுள்ளார்.

இது உலக அரங்கில் நண்பர்களும் எதிரிகளும் இடம்மாறிக்கொள்ளும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்களுக்கு ஒரு உதாரணம். உலக அரங்கில் இவ்வாறு இடம்பெற இலங்கைத்தீவின் அரசியல் அரங்கிலும் இவ்வாறான நகர்வுகளும் பீறிட்டுச்செல்லும் சில காட்சிகளும்; தெரியத்தான் செய்தன.

இன்னும் சரியாக ஒரு மாதத்தில் நவம்பர் 16 இல் சிறிலங்காவி முதன்மைத்தலையாரியை தெரிவுசெய்யும் தேர்தல் இடம்பெறவுள்ளது.

ஆயினும் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறான நகர்வை எடுப்பது? எந்தப்பிசாசுக்கு வாக்களிப்பது? என இருக்கக்கூடிய முக்கிய பேசுபொருளுக்கு தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளால் இன்னமும் முறையான விடைவழங்கப்படவில்லை. இதற்குமாறாக தேர்தல் புறக்கணிப்பு என்ற குரல்கள் தேய்மானமாகவும் சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வரட்டும் அதன் பின்னர் பார்க்கலாம் என்ற குரல்கள் தான் தமிழர் பிரதிநிதிகளிடம் இருந்து ஒலிக்கச் செய்கின்றன.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் ஒரு பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவதற்காகவும் தமிழ்த்தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்த முயற்சியின் ஒரு அத்தியாயம் நேற்று முடிந்தவேளை தமிழ் கட்சிகளின் ஆலோசனைக்கு அமைவாக தயாரிக்கப்பட்;ட பொது உடன்பாடு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் ஒப்பமிட்டிருந்தன

ஆயினும் பலமான வாதப்பிரதி வாதஙகளுடன் நகர்ந்த இந்த அத்தியாயத்தின் ஒரு ஒரு முக்கிய மையப்புள்ளியாக சிறிலங்காவின் இடைக்கால அரசியலமைப்பை எதிர்ப்பதா? இல்லையா என்ற விடயம் மாறியிருந்தது.

குறிப்பாக சிறிலங்காவின் இடைக்காலஅரசியலமைப்பை எதிர்க்கும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாசகங்கள் இந்தஉடன்படிக்கை ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என்பதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக இருந்தது ஆனால் ஏனைய கட்சிகளோ இதற்குத்தயாராக இல்லை.

இதனால் தங்களது நிலைப்பாட்டில் சமரசம் செய்த் தயாராக இல்லாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலிருந்து துருத்தியபடி வெளியேறியது. இறுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டனர்.

தற்போது இந்தக் கூட்டத்தில் நடந்தது என்ன? என்ற பாணியிலான தன்னிலை விளக்கம் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணித்தர்ப்பில் இருந்தும் அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் ஒற்றுமையை குழப்புவதாக விமர்சனம் சுரேஷ்பிரேமச்சந்திரன் தரப்பில் இருந்தும் வருகின்றன.

ஆனால் நேற்று இந்த 5 கட்சிகளுக்கும் இடையில் ஒப்பமிடப்பட்ட இந்த ஆவணம் இந்தத்தேர்தலில் தமிழ்மக்கள் எந்த நகர்வை எடுப்பது? அல்லது யாருக்கு வாக்களிப்பது என்ற வினாக்களுக்கு நேரடியாக விடைவழங்கும் ஒரு ஆவணமாகத்தெரியவில்லை

மாறாக சிறிலங்காவின் முதன்மைத் தலையாரிக்குரிய தேர்தல் களத்தில் நிற்கும் சிங்களத்தின் முன்னணி வேட்பாளக்குதிரைகளிடம் தமிழர்களின் சார்பாக தமிழ்கட்சிகள் முன்வைக்கபடவேண்டிய 12 அம்சங்களை கோரும் ஒரு ஆவணமாகவே காட்சியளிக்கின்றது.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!