பெர்ப்பமின்ற் கபேயும்…தமிழும்

  • Prem
  • October 30, 2019
80shares

இலங்கைத்தீவுக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பிரித்தானியாவுக்கும் அடுத்துவரும் வாரகாலங்கள் பரப்புரைக்களத்தில் முக்கியமானவை.

இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கைத்தீவில் தேர்தலொன்று நடைபெறுகிறதா என மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு ஆரவாரங்கள் இல்லாமல் அமைதியாக …ஜனநாயகமாக…அதிகாரமுறைகேடுகள் அற்று இந்தத் தேர்தல்களம் நகர்த்தப்படுவதாக சிறிலங்காவின் பிரதமரான ரணில்விக்கிரமசிங்க> குஷிப்படுகிறார்.

புதிய இலங்கைக்கான இடதுசாரிகளின் மாநாட்டு அரங்கில் வைத்து அவர் சும்மா தேமேயென இந்த புளுகத்தை வெளியிடவில்லை. மாறாக தேர்தல் பணிகளுக்காக அரசசொத்துக்களில் கைவைப்பதில்லை நீதிபதிகள்> அரச ஊழியர்கள், காவற்துறையினர் என யாருக்கும் எந்தவித அழுத்தங்களும் கொடுக்கப்படுவதில்லை பாருங்களேன் என பட்டியலிட்டார்.

ஆனால் பிரதமர் ரணிலின்; போதாககாலம் அவர் இவ்வாறு கூறினாலும் இதுவரை தேர்தலுடன் தொடர்புடைய 2014முறைப்பாடுகள் தம்மிடம் பதிவாகியுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருப்பது வேறுகதை.

ஆகமொத்தம் அமைதிமிகுந்த ஒரு தேர்தல்களம் குறித்த சேர்ட்டிபிக்கற்றை வழங்கிய கையோடு புதிய அரசியலமைப்பும்(?) குறித்தும் ரணில் பேசியிருக்கிறார்.சஜித்பிரேமதாச அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பு ஒன்று முன்வைக்கப்படுமென்ற கதையை அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் ரணில் கூறுவது போல 2020பொங்கலுக்குள் அல்லது வெசாக்குக்குள் தமிழர்களும் மெச்சிக்கொள்ளும்படி இலங்கையில் புதியஅரசியலமைப்பு ஒன்று வருகிறதோ இல்லையோ அதற்கு முதல் சஜித்பிரேமதாச அரசதலைவராக வெற்றிப்பெற்றால்ரணிலுக்கு பிரதமர் பதவி கிட்டிக்கொள்ளவேண்டுமே என்ற ஒரு நிலையும் கதையும் உள்ளது.

ஏனெனில் சஜித்வெற்றிபெற்றால் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் வாய்ப்புக்கள் இல்லை. மாறாக இளைய முகம் ஒன்றுக்குத்தான் அந்தப்பதவி வழங்கப்படுமென அரசல்புரசலான கதைகள் தற்போது பேசப்படுகின்றன.

இந்த நிலையில் அவசரமான இந்தவிடயத்தில் இன்று ஊடகங்களுக்கு தீனியிட்ட ரணில், சஜித்பிரேமதாசா வெற்றிபெற்றால் யானே பிரதமர் என அலரி மாளிகையில் வைத்து சொல்லியிருக்கிறார்.

ஆகையால் கைக்குவர முன்னரே நெற்குவியலுக்கு விலைபேசிய கதையாக யானைகள் முகாமில் எதிர்வரும் பிரதமர் பதவிகதைகள் சூடுபிடித்துள்ளன.இந்த சூடுபிடிப்புகளுக்கு அப்பால் ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்காவை மையப்படுத்தி உதிரியான சிக்கல் இப்போது யானைமுகாமில் வெடித்திருக்கிறது

இதன்விளைவாக உடனடியாக நடைக்கு வரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கா, நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளரான அகில விராஜ் காரியவசம் நேற்றிரவு அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

இதன்பின்னர் முடிந்தால் தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இன்று சவால் விடுத்துள்ளமை வேறுகதை

வசந்த சேனநாயக்காவை அமைச்சு பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்த நிலையில் வசந்தவின் பதிலடி வந்திருக்கிறது

யானைகளின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த சேனாநாயக்காவுக்கு ஒரு குழப்பகரமான பதிவு உண்டு.கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மகிந்த மார்க்ஆட்சிக்கவிழ்ப்பின்போது, இங்கும் இங்கும் கட்சித்தாவலில் ஈடுபட்;டபெருமைக்கு உரியவர்.

இந்த நிலையில் கடந்த வாரம் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர் சஜித் பிரேமதாச தமது புதிய அரசாங்கத்தில் பிரதமராக யார் நியமிக்கப்படுவார் என்பதை கூறுமாறு கோரிக்கை விடுத்த பின்னர் இந்த நகர்வுகள் வெளிப்பட்டிருப்பதையும் இங்கு அவதானிக்க வேண்டும்.

ஆகமொத்தம் இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு வந்ததோ அல்லது ரணிலுக்கு பிரதமர் பதவி கிட்டியதோ இல்லையோ தமிழர்களுக்கும் அவர்களின் மொழிக்கும் தினுசுதினுசான சவால்களும் சிக்கல்களும் வருவது மட்டும் யதார்த்தமாக தொடர்கின்றது.

அந்தவகையில் சிறிலங்காதலைநகர் கொழும்பில் ஹோர்ட்டன் பிளேஸில் உள்ள பெப்பர்மின்ற் கபே (Peppermint Café) என்ற உணவகத்தில் தமிழ் மொழியில் உரையாடிக்கொள்வதற்கு அதன் ஊழியர்களுக்கு பகிரங்கமாக அறிவித்தல் வைக்கப்பட்டு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

இதனை மறுவழமாக கூறினால் புதிய அரசியலமைப்பு குறித்த பேச்சு பல்லக்காக இருந்தாலும் தம்பி என்னவோ கால்நடை என்பதாகவும் கொள்ளலாம்.

இந்தப்பிரச்சனையை, ஒருதனியார் உணவகத்தில் இடம்பெற்ற பிரச்சனையாக தர்க்கரீதியாக நோக்கிக்கொள்பவர்களுக்குக் கூட அதிலும் முரண்பாடுகள் உள்ளன.

ஏனெனில் தமிழ்மொழியில் உரையாட தடைகூறிய இந்த அறிவித்தல் மறுபுறத்தே கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் மாத்திரமே பேசவேண்டுமென ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனைவிட இந்தப்பிரச்சனையில் சப்பைக்கட்டுக்காரணங்களைக்கூறிய குறித்த நிறுவனம்ஊழியர்கள் தமிழ்மொழியில் பேசுவது வாடிக்கையாளர்களான தம்மைகேலி செய்வது போலஉள்ளதாக> வாடிக்கையாளர்கள் வழங்கிய முறையீட்டின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வைக்கப்பட்டதாக பெரும் அபத்தமாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருவேளை குறித்த ஊழியர்கள் சிங்களமொழியில் பேசுவது தம்மை கேலிசெய்வதை போல உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டிருந்தால் சிங்கள மொழியில்பேசுவது தடைசெய்யப்படுவதான ஒரு அறிவித்தலை வைக்க குறித்த உணவகத்துக்கு தில் இருக்குமா?

நிச்சயமாவே இருக்க முடியாது. அவ்வாறு ஒருவேளை இடம்பெற்றால் பொதுபல சேனாக்களும் ராவண பலயக்களும் அந்தஉணவகத்தை பஸ்பமாக்கி விடுவார்கள் என்பது இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டுசிக்கலின் யதார்த்தம்.

இப்போது இந்தவிடயத்தில் சிறிலங்காவின் அரசகருமமொழிகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் சுதாகரித்துள்ள மனோகணேசன், சிறிலங்காவின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழிச்சமத்துவத்திற்கான சரத்துக்களின் அடிப்படையில் அரசகரும மொழிகள் ஆணையாளருக்கு சில உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அதுபோல குறித்த அறிவிப்பு அகற்றப்பட்டதாகவும் கேள்வி. ஆக மொத்தம் இலங்கையில் புதிய அரச தலைவர் அவதாரங்கள் வந்தாலும் தமிழ;மக்களின் பிரச்சனைகள் பேச்சுப்பல்லக்கு தம்பி கால் நடை என்பதாகவே பெப்பர்மின்ற் கபேயிலும் தெரீகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!