தேர்தல் வாக்குறுதிகளின் கதையும்!... தேறாத நிலையும்!!

  • Prem
  • November 01, 2019
60shares

சிறிலங்காவின் அடுத்த முதன்மைத்தலையாரியை தெரிவுசெய்வதற்குரிய தேர்தல் திருவிழாவை மையப்படுத்தி பல வகையான வாக்குறுதிகள் வேட்பாளர்களால வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கைத்தீவின் தேர்தல் களத்துக்கு இவ்வாறான வாக்குறுதிகள் புதுமையானவை அல்ல.

பொங்கலுக்குள் தீர்வு தீபாவளிக்குள் தீர்வு என தமிழர்களுக்கு கூறப்பட்ட உறுதிமொழிகள் உட்பட ஏற்கனவே வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னமும் கிடப்பில்தான் உள்ளன.

எனினும் தமிழர்களின் அபிலாஷைகளை மையப்படுத்திய வாக்குறுதிகளை மட்டும் தொட்டுக்கொள்ளாமல் கோட்டாபாய ராஜபக்ச சஜித்பிரேமதாசா ஆகிய இரண்டு முன்னணிவேட்பாளர்களாலும் வழங்கப்பட்டுவருகின்றது.

இரண்டு வேட்பாளர்களுமே தாம் ஏறிக்கொள்ளும் மேடைகளில் எல்லாம் மக்களுக்கு இலவசமாக எல்லாவற்றையுமே தருவதாக வாக்குறுதிகளை அள்ளிவழங்குகின்றனர்.

பொதுவாகவே தேர்தல்காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளில் அநேகமானவை கிணற்றில் போட்ட கல்போல அசைவதில்லை. அவ்வாறாக வழங்கப்படும் வாக்குறுதிகளை கட்டாயமாக நிறைவேற்றித்தான் ஆகவேண்டும் என்ற அவசியமெதுவும் அதனை வழங்கும்முகங்களுக்கும் இல்லை.

அதேபோல செலக்ரிவ்அம்னீஷியா எனப்படும் சிலவற்றை மட்டும் மறந்துவிடக்கூடிய வாக்காளப்பெருமக்களும் இன்னொரு தேர்தல்வரும்வேளையில் அதனை நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை.

அவ்வாறு நினைவிருந்தால் 1988 இல் இவ்வாறாக இடம்பெற்ற முதன்மைத்தலையாரிக்குரிய தேர்தல்களத்தில் ரணசிங்க பிரேமதாஸா வழங்கிய 2000 ஆம் ஆண்டு பிறக்கும்போது, இலங்கைத்தீவில் சகலருக்கும் கல்வீடுகள் இருக்கும் சகல வசதி வாய்ப்புகள் இருக்கும் என வழங்கிய அதே வாக்குறுதியை 3 தாசாப்தங்களுக்குப் பின்னர் அவரது புதல்வனான சஜித் ஏன் இன்று வழங்கவேண்டிய நிலைவந்தது என்ற பிரக்ஞைக்குரிய வினாவைக் கூட நினைத்துப்பார்ப்பததில்லை.

அதேபோல நவம்பர் முதலாம் திகதி கொழும்பு தாஜ்சமுத்ரா 5 நட்சத்திர விடுதியில் ஐக்கியதேசியக்கட்சிக்கும் ஐக்கியதேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்பட்டபோது சிறிலங்கா சுதந்திரகட்சியின் ஒரு முக்கிய மாற்று முகமாக நின்று சஜித் பிரேமசாசாவுக்கு ஆதரவளித்து ஒப்பமிட்ட முன்னாள் தலையாரி சந்திரிகா பண்டாரநாயக்ககுமாரதுங்க, சஜித் பிரேமசாசா இப்போது வழங்கும் தேர்தல்வாக்குறுதிகளை ஆர்கசிக்கக்கூடும்.

ஆனால் அதே சந்திரிகா 1994, மற்றும் 99 ஆம் ஆண்டுகளில் வழங்கிய நிறைவேற்று அதிகார முறை ஒழிப்புக்குறித்த வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றினார் என்ற கதையும் இலங்கையர்கள் அறிந்த கதை.

சந்திரிகா மட்டுமல்ல இலங்கைத்தீவின் அரசியலில் இன்றுவரை விடாதுகறுப்பாக சுற்றித்திரியும் மஹிந்தகூட 2005, 2010 ஆம் ஆண்டுகளில் தான் போட்டியிட்ட அரசதலைவர் தேர்தல்களில் இதே வாக்குறுதியை வழங்கியதும் நினைவூட்டத்தக்கது.

இதன்பின்னர் 2015 இல் வந்த ஜகப்பாலனய எனப்படும் நல்லாட்சி உறுதிமொழியுடன் கொலுவேறிய மைத்திரியும் ரணிலும் வாக்குறுதி அளித்தபடி எவ்வாறு நல்லாட்சியை உருவாக்கினர் என்பதும் தெரிந்தகதை.

2015 இல் மைத்திரி ஆட்சி நிலையான நாடு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட மைத்திரியின் விஞ்ஞாபனத்தில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்;ற உறுதிமொழிமுதலாவது வாக்குறுதியாக இருந்தது.

இப்போது 5 வருடங்கள் கழிந்தும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்பிரேமதாஸ அதே வாக்குறுதியை தனது விஞ்ஞாபனத்திலும் கூறுகிறார்.

முடக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் சாசனத்தை தயாரித்து அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட்டு காலதாமதம் இன்றி அதனை நடைமுறைப்படுத்துவதாக சஜித் கூறுகிறார்.

அத்துடன் அவர் தமிழர்களை நோக்கி ஒற்றையாட்சிக்குள் பிரிக்கப்படாத நாட்டிற்கு அதிகபட்ச அதிகாரப்பரலாக்கலை மேற்கொள்வதாகவும், மாகாணசபைகளுக்கு மேலதிகமாக செனட் சபையொன்று உருவாக்கப்படும் என்றும் கூறுகிறார்.

ஆகமொத்தம் வாக்காளப்பெருமக்களின் புள்ளடிகள் தேவைப்படும் காலத்தில் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருப்பதில்லையென்பதை 2019 தேர்தல்களமும் அச்சொட்டாகநிருபிக்கின்றது.

இதன் அடிப்படையில் தமிழர்களின் அபிலாஷைகளுக்குரிய விடயங்களைத் தவிர்த்து சிங்களத்தின் எல்லா வேட்பாளக்குதிரைகளும் தமது வாக்குறுதிகளை கனைக்கின்றன.

இவ்வாறு வழங்கப்படும் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றுவதற்கு சாத்தியமானவை உள்ளன என்பதில் பெரும்ஓட்டைகள் இருக்கின்றன. ஆயினும் தமக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளை மக்களே சுலபமாக மறந்துவிடும் போது வாக்குறுதிகளை வழங்குவோர் ஏன் அவற்றை நினைவில் வைத்திருக்கவேண்டும்.

அரசியல்வாதிகளைப்பொறுத்தவரை அவர்கள் தாம் வழங்கும் வாக்குறுதிகளை தாமே மறந்து விட்டாலும் மக்களால் இந்தவிடயத்தில் தமக்கு தண்டனைகளை வழங்கமுடியாதென்பதில் அச்சமின்றி உள்ளனர்.

அதாவது வாக்காளப்பெருமக்கள் ஊடாக நாட்டுமக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் அநேகமானவை தேர்தலகால சூழ்நிலையைத் தமக்குச்சாதகமாக வென்றெடுப்பதற்கான ஒரு தந்ரோபயமாகவே துல்லியமாக நிருபிக்கபடுகிறது. இதில் வடக்கு தெற்கு எனப்பேதங்கள் ஏதுமில்லை.

இதனடிப்படையில் பொங்கலுக்குள் தீர்வு தீபாவளிக்குள் தீர்வு என தமிழர்களுக்கு தமிழ்முகங்களால் கூறப்பட்ட உறுதிமொழிகளையும் நோக்க முடியும். முடக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் சாசனத்தை தயாரித்து முடிப்பேன் என சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுப்பட்ட வாக்குறுதிகளையும் நோக்க முடியும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!