கூட்டமைப்புக்கு எலக்சன்மற்ஸ் ரியூஷன் தேவை! தமிழ்வாக்குவங்கியின் உண்மையான பலம் என்ன?

  • Prem
  • November 19, 2019
77shares

சிறிலங்காவில் அரசதலைவர் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்புக்கட்டுரைத்தளத்தில் ஒரு பத்தி இருந்தது. அதன் தலைப்பு தமிழர்களின் 2015போர்மிலாவுக்கு வீழ்ச்சியா? நீட்சியா? உறைநிலைக்கு போவது சஜித்தா? கோட்டாவா? என்ற வினாக்களுடன் இருந்தது.

அவ்வாறு எழுப்பட்ட வினாக்களுக்கு கடந்த 17 ஆந்திகதி அதிகாலை விடைகிட்டியது. இந்த விடையை கடந்துமுதறை பத்தி எழுப்பிய வினாக்களை மாற்றினால். தமிழர்களின் 2015போர்மிலா இந்த முறை வீழ்ச்சியடைந்தது. உறைநிலைக்கு கோட்டாபாய ராஜபக்ச அரசதலைவராக சிலிர்க்க அவரது போட்டியாளர் சஜித் உறைநிலைக்குப் போகத்தலைப்பட்டுள்ளார்

சிறிலங்காவின் புதிய அரசதலைவராக வந்த கோட்டாபய ராஜபக்ஷ கிட்டிய சிலிர்ப்பு சாதாரண சிலிர்ப்பு அல்ல சிறிலங்காவின் பெரும்பான்மை, பௌத்தமக்களின் வாக்குகளால் மட்டும் உருவாக்கப்பட்ட பெரும் சிலிப்பு அது.

இந்த வீச்சின் காரணமாகவோ என்னவோ புதியஅரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பதவியேற்றகையுடன் இந்திய பெரியண்ணன் வீட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை காவியபடி கொழும்பில் குதித்துவிட்டார்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை கோட்டாபாய இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருப்பது புதிய கதை

இலங்கைத்தீவில் சிங்கள மன்னர்களின் அநுராதபுர யுககாலத்தில் தனக்கு என ஒரு தனியிடத்தை கொண்ட பௌத்த வளாகம் ருவன்வலிசாய நிழலில் பதவிப்பிரமாணம் செய்ததன் ஊடாக முன்னொரு காலத்தில் சிங்கள மன்னர்களின் அநுராதபுர யுகத்த வெற்றிக்கு ஆசிவழங்கிய ருவன்வலிசாய ஆசியுடன் வெற்றிகரமான கோட்டாபாயவின் ஆட்சி என்ற அடையாள பொறிமுறைக்கு அவர் தயாராகிவிட்டார்.

தனது ஆட்சிக்குரிய வகையில் அவர் சில காய்களை மாற்ற ஆரம்பித்துவிட்டார் அதன் அப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல்குணரத்னா கூட நியமனம் பெற்றுவிட்டார்.

அதேபோல தனது தெரிவு சிறிலங்காவின் பெரும்பான்மை, பௌத்தமக்களின் வாக்குகளால் மட்டு;ம் உருவாக்கப்பட்டது என்ற யதார்த்தத்தையும் ஒரு முக்கிய செய்தியாக அவர் கூறியுள்ளார்.

எனினும் தமிழர்களும் முஸ்லிம்களும் தனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை இனிவரும்காலத்தில் உண்மையான இலங்கையர்களாக தமிழர்களும் முஸ்லிம்களும் தன்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இதேபோல, அனைத்து நாடுகளுடனும் நாம் நட்புறவாட எதிர்பார்ப்பதால் ஏனைய நாடுகள் எமது நாட்டு, இறையபான்மைக்கு மதிப்பளித்து செயலாற்ற பணிவுடன் வேண்டுகிறேன் என மேற்குலகநாடுகளின் பெயரைக்குறிப்பிடாமல் விடுத்த செய்தியும் முக்கியமானது.

தமிழ்பேசும்மக்களின் வாக்குகளால் தான் தெரிவுசெய்யப்படவில்லை என அவர் கூறுவது நூற்றுக்கு நூறுவீதம் உண்மையானது. கோட்டாபாய என்ற மனிதர் மீது தமிழ்பேசும் மக்கள் கொண்டுள்ள கடந்தகால கசப்புகள் மற்றும் தற்போது சமுகவலைத்தளங்களில் உலாவரும் வெள்ளை வாகன மீம்சுகளுக்கு அப்பால் இதுதான் யதார்த்தம்

தமிழ்பேசும் மக்களை பொறுத்த வரை 2015போல 201916 நவம்பரிலும் ஒரு வோட்டிங் போர்மிலாவை வெற்றிகரமாக நகர்த்திவிடலாம் என சிங்களமக்களின் எண்ணவோட்டத்தை அறியாமலேயே வாக்களிப்புக்கு முன்னர் தனது வலுவை தானே சுயமாக உயர்த்தி கணக்கிட்டிருந்தது.

அதாவது எலெக்சன் மற்ஸ் அல்லது தேர்தல் கணித யதார்தங்களை புறந்தள்ளி தமிழ்பேசும்வாக்குவங்கியின் உண்மையாக பலத்தை விட ஒப்பீட்டு ரீதியில் அதனை உயர்வாக எண்ணி இறுதிநேர கருத்துக்களை வெளியிட்டது.

இதன் அடிப்படையில் கடந்தமுறை மைத்திரியை வெற்றிபெறவைத்து மகிந்தவை வீழ்த்தியதைபோல இந்தமுறை சஜித்தை வெற்றிபெறவைத்து கோட்டாபாயவை வீழ்த்துவதே தமிழர்களுக்குரிய சிறந்தஉபாயம் என சுமந்திரன் செய்தி சொன்னார்.

ஆனால் இலங்கைத்தீவின் வாக்குவங்கியில் ஏறத்தாழ 75சதவீதமாக உள்ள சிங்கள வாக்குவங்கியில் கணிசமாக வகிபாகம் இந்த முறை சுதாகரித்துவிட்டது. சஜித்தின் அன்னத்தை வெற்றிபெறவைத்து கோட்டாபாயவை வீழ்த்துவதே தமிழர்களுக்குரிய சிறந்தஉபாயம் என சுமந்திரன் போன்றவர்கள் கூறிய செய்தியும் ஒருவேளை இதனை சுதாகரிக்கவைத்திருக்கலாம் மசகிட்டிருக்கலாம்

இதனடிப்படையில்தான் தமிழ்பேசும் வாக்குகள் ஒன்றிணைந்து நின்றாலும் அவர்களால் இந்தகேமை ஆடமுடியாது என்பதை நிருபித்த சிங்கள-பௌத்த வாக்குவங்கி கோட்டாபயவுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளது

ஆகமொத்தம் இந்த தேர்தலின் எலெக்சன் மற்ஸ் தமிழ்த் தலைமைகளுக்கு, ஒரு முக்கிய படிப்பினையை வழங்கியுள்ளது. ஆனால் ஏனைய சமூகங்கள் தனக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபாய புரிந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தமிழ்தேசியக்கூட்டமைப்பு இப்போது வலியுறுத்துகிறது.

இது யதார்த்தம் தான் ஆனால் வலியுறுத்தல்களை மட்டும் விடுப்பது கூட்டமைப்பின் வேலையாகஇருக்கமுடியாது நடைமுறைச்சாத்தியங்களை தேடிக்கொள்ளவேண்டும்.

நிச்சயமாகவே இதனை எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நகர்வுகளில் காணக்கூடியதாக இருக்ககூடும் அப்படியானால் தமிழர்களின் பிரதிநிதிகளிடம் இதனைகாண்பது எப்போது ?

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?