ருவன்வெலிசாய உச்சி சூடாமாணிக்கமும்! தமிழர்களின் 65 ஆண்டுகால சூடா மாணிக்கமும்!!

  • Prem
  • November 26, 2019
87shares

இந்த உலகப்பந்தில் தினசரி இடம்பெறும் நிகழ்வுகளில் சில வரலாறாகிவிடுகின்றன. அதற்காக எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானித்துவிடுவதாக கொள்ளமுடியாது.

ஆனால் வரலாற்றைத்தீர்மானிக்கும் நிகழ்வுகளுக்குரிய தினங்கள் எப்போதுமே முக்கியமானவை அந்தவகையில் நாட்காட்டிகளில்கடந்து செல்லும் சில தினங்கள்; ஏனைய தினங்களை விட சிறப்பானவையாக அமைந்துவிடுகின்றன.

அவ்வாறானதினங்கள் வரலாற்றின் திசைவழியை அரசியல்சித்தாந்த படிநிலையை ஒரு சமூகத்தின் அசைவியக்க களத்தை என சில விடயங்களை பலமாக அசைக்கும் தன்மையுடையவை.

அந்தவகையில் இலங்கைத்தீவில் இன்று அநுராதபுரத்தின்; ருவன்வெலிசாய விகாரையின் உச்சியில்; இன்றுமுதல் முதன்முதலாக ஒளிரும் சூடா மாணிக்கம் குறித்தும் பேசிக்கொள்ளலாம் அதேபோல இலங்கையில் வட முனையில் இற்றைக்கு 65 வருடங்களுக்கு முன்னர் முதலாவது நாளை கண்ட தமிழர்களின் சூடாமாணிக்கம் குறித்தும் வரலாறுகளை பேசிக்கொள்ளலாம்.

சூடா மாணிக்கங்கள் அற்புதமான பிரகாசங்களை கொண்டன. அதில் ஐயம் இல்லை. தொலைவில் இருந்து நோக்கினால் கூட சூரியஒளியில் அவை தகதகத்துக்கொள்ளும். சிங்கள பௌத்தமக்கள் ருவன்வெலிசாய சூடா மாணிக்கக்கலசத்தை இன்றுதான் கண்டிருக்ககூடும்.

ஆனால் தமிழர்களோ தமது முற்ற சூமாமணியின் தரிசனத்தை 2009 வரை நேரடியாக கண்டிருந்தனர். ஆம்; உச்சியில் இருந்து இந்ம சூடாமணியின் அற்புதமாக பிரகாசித்தது.

மெடிவெல் எனப்படும் மத்திய காலத்தில் புழங்கிய லத்தீன் மொழியில் Super nātūrālis என ஒரு சொல் உண்டு ஆங்கிலத்தில் Super natural என விளிக்கபடும் இந்த சொல்லின் அர்த்தம் இயற்கைக்கு அப்பாலும் அதனை கடந்த நிலையிலும் இருக்கும் ஒரு விடமாகும். சிலநேரங்களில் இது இயல்பு கடந்து மறைபொருள் நிலையில் கூட இருக்கும்

தமிழர்கள் இன்று தமது சூடாமாணிக்கத்தை நினைவு கொள்வது போலவே ரோமானியர்களிடம் வினவினால் அவர்களும் தமது சொல்-இன்வக்ருஸ் (sol Invictus )எனப்படும் வெற்றிகொள்ளமுடியாத சூரியன் குறித்து (Unconquered Sun) பல புராதனங்களை கூறுவார்கள் ரோமானியர்களின் இந்த வெற்றிகொள்ளமுடியாத சூரியன்தான் அவர்களின் படையினருக்கும் தலைவன். வீரர்களின் புரவலர்

இதேபோல புராதன எகிப்தியர்களிடம் யாராவது கேட்டால் அவர்களும் தமது ஒரு சூரிய தேவனான இரா (Ra) குறித்து கதை கதையாக சொல்வார்கள்.

இவற்றைப்போலவே சமகாலத்தமிழர்களுக்கு தமது சூடாமணி ஒளிமிகுந்தது என்பது தெரியும். ஆனால் அது தமது கைகளில் இன்னமும் புறநிலையில் இருப்பதாக ஒருசராரும், இல்லையில்லை என இன்னொரு சாராரும் இன்று பத்தாவது வருடமாக குழம்பிக்கொள்கின்றார்கள்.

எனினும் சூடாமணியின் ஒளித்தடத்தை பின்பற்றி சமயோசிதமாக பயணிப்பதில் ஆர்வம்மிக்க மக்கள் மிகக்குறைவானவர்களாகவே உள்ளனர்.

ருவான்வலிசாயவின் சூடாமணியின் அதன் தகதகப்பை தரிசிக்க சிங்கள மல்வத்து பீட மகாநாயக்கர் தலைமையில் இன்று எல்லோரும் கூடி கயிறு இழுத்தனர். ஆனால் தமிழ்சூடாமணியின் தடத்தை பின்பற்றமுடியாத தமிழ்அரசியல்வாதிகளோ மூட்டையில் சிதறியோடிய நெல்லிக்காய்களைபோல 2009க்குப்பின்னரான பத்து வருடத்திலும் காட்சிதருகின்றனர்.

இலங்கைத்தீவில் கடந்த 16 ஆம் திகதிக்குப் பின்னர் இப்போது கொழும்பு அதிகாரமைத்தில் ஒரு சிங்கள பௌத்த காவல் சுயம்புவின் உருவத்தின் பிரகடனங்கள் ஒலிக்கின்றன.

இவ்வாறான குரல்கள் ஒலித்ததும் தமிழ்அரசியல்வாதிகளே! ஒன்றாக இணைந்துகொள்ளுங்கள் என தமிழர் அரசியல் முகமான சுமந்திரனின் குரல் இன்று ஊடகமாநாடு ஒன்றில் ஒலித்தது

சூடாமணியின் ஒளிபட்டு தெறிக்ககூட இலாயக்கற்ற குரல்கள் அடுத்த தேர்தலில் அடிவாங்கிவிடுவோமோ அச்சத்தில் இவ்வாறு ஒற்றுமை குறித்த அழைப்புக்களில் குதித்துவிடுகின்றன.

இதற்கிடையே பிரித்தானிய கென்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் இலங்கையில்தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு Two-statesolution அதாவது இரண்டு அரசுகள் கூறப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு சந்தோஷம்! ஆனால் ஏற்கனவே இவ்வாறு பல சில தசாப்பதங்களுக்கு Two-statesolution கூறப்பட்ட யூத பலஸ்தீன முறுகல் இன்னமும் தீர்வின்றி படாவதியாக கிடக்கிறதே.

மேற்குலகு சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக இருக்கும் என்ற படிமம், ஈழத்தமிழ் அரசியலில் இன்னமும் உள்ளது. இப்போது இதனைத்தான் தோதல் காலத்தில் பிரித்தானியாவின் ஒருகட்சியும் கூறுகிறது.

தேசியஇனப்பிரச்சினைகளில் ஏகாதிபத்தியங்களுக்கென சில அக்மார்க் கொள்கைகள் இருக்கின்றன தனது வசதிக்கேற்ப சிலவிடுதலைப் போராட்டங்களை அது ஆதரிக்கும்; அதேபோல சில இனவிடுதலைப் போராட்டங்களை அது எதிர்க்கும். இன்று ஆதரிப்பதை அது நாளை எதிர்க்கவும் கூடும். இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை, தனது நலனுக்கேற்றவாறு அது பந்தாடுவதும் வழமை. சரி அதைவிடுங்கள்

ஒரு அரசியல்வாதி அடுத்ததேர்தல் குறித்து சிந்திக்கின்றான் ஒரு அரசியல் தலைவனோ அடுத்த தலைமுறைகுறித்து சிந்திக்கின்றான் என கூறப்படுவதுண்டு

தமிழர்களின் தேசிய சூடாமணி இவ்வாறான அரசியல்வாதியாக இருந்ததில்லை என்பது ஒரு குறையா? ஆகமொத்தம் ரோமானியர்கள் தமது வெற்றிகொள்ளமுடியாத சூரியனின் பிறந்தநாளை இன்று மறந்திருக்ககூடும். இல்லையென்றால் கொன்ரஸ்ரன் மன்னனின் அசையவியகத்தில் அதனை டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாளுக்கு நகர்த்தியிருக்கலாம்.

ஆனால் தமிழர்களின் சூடாமணியின் பிரகாசிப்பு இன்னமும் இருக்கிறது அதன் 65 ஆவது அகவைநாளும் இதனைத்தான் இன்று பிரதிபலித்துள்ளது

இதில் உங்களுக்கு ஐயம் இருந்தால் தமிழினத்தின் தேசியத்தலைவர் என்ற விளிப்புக்குரிய வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயருடன் இதனை சற்று ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?