சஜித்திற்கு இப்போதைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமா! தலைமைத்துவ பதவிக்கு தகுதி என்ன தகுதி?

  • Prem
  • December 05, 2019
37shares

ராஜதந்திர வழிகளில் என்வழி தனிவழி என்பதாக நகரமுனையும் சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடிகளையும் அழைப்புக்களை விடுத்து வருகின்றார்.

மறுபுறத்தே அவரது சகோதரயோவான மகிந்தவின் அரசாங்கத்துக்கு எதிரான நிழல்அரசாங்கத்துக்குரிய பிறான்ட் நியூ எதிர்க்கட்சித் தலைவராக குதித்து விட்டேன் என சஜித்பிரேமதாசவும் இன்று குதித்திருக்கிறார்.

சிறிலங்காவுக்கு இன்று பகல்கிட்டிய இந்த புதிய எதிர்க்கட்சித்தலைவரும் இனிமேல் தனது வழி பழைய எதிர்க்கட்சித்தலை ரணில் சென்ற வழியை விட வேறுவழி என நிருபிக்க முயலக்கூடும்.

சஜித்துக்குரிய எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே இங்கு பரிந்துரைத்து வழங்கியிருப்பதையும் இங்கு அவதானிக்க வேண்டும்.

அவ்வாறாயின் சஜித்பிரேமதாசா இப்போதைக்கு எதிர்க்கட்சித்தலைவர் மட்டுமா? அவ்வாறாயின் எதிர்கட்சித்தலைவர் பதவியை வகிப்பவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பதவியை கொண்டிருக்கும் தகுதிக்கு என்னாச்சு என்ற புதிய வினாக்கள் எழுந்துள்ளன.

ஆகையால் சஜித்பிரேமதாசவை இப்போதைக்கு எதிர்க்கட்சித்தலைவர் என்ற பதவியில் அமர்த்திய பின்னர் கட்சியின்புதியதலைவர் தொடர்பாக பின்னர் தீர்மானிக்கலாம் என்ற இழுத்தடிப்பு முடிவை ரணில் எடுத்திருப்பதன் ஊடாக ஏதோ கமுக்கமான பொறி சஜித்துக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

மறுபுறத்தே தான் இல்லாவிட்டால் கரு ஜயசூரியவை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்க ரணில் எடுத்த தில்லாலங்கடி வியூகம் இன்று பிற்பகலில் உடைக்கப்பட்ட நகர்வையும் ரணில் கண்ணாரக்க கண்டிருந்தார்.

எது எப்படியோ யானைகள் முகாமில் இருந்து ரணில் ஓய்வு பெறும்வரை சிறிலங்காவின் கௌரவ எதிர்க்கட்சித்தலைவர் சஜித்துக்கு உரியரணில் மார்க் குயுத்திகள் தொடவே செய்யும்.

எது எப்படியோ, யானைகள் முகாமில் உள்ளக ரீதியில் கடந்த சிலநாட்களாகவே பெரும்குடைச்சல் கொடுத்த எதிர்க்கட்சித்தலைவர் பதவிதொடர்பான இழுபறிக்கு இன்று நடத்தபட்ட அதன் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் ஒருவாறு முடிவுகிட்டி விட்டது.

இன்று இந்த முடிவு கிட்டியிராவிட்டதால் இனிமேல் தமக்கு அரசியல் சங்காத்தமே வேண்டாம் எனக்கூறி ஐக்கிய தேசியக் கட்சின்; மூத்த அரசியல் முகங்கள் சிலர், அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றிருக்ககூடும்.

ஆகையால் இன்று சஜித்துக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்ட இந்த முடிவின் அடிப்படையில் யானைகள் சந்தோஷயவில் பிளிறக்கூடும்.

ஆனால் சிங்கள மஹாஜனதாவின் மனங்களை வெல்லும் வகையில் அசாதாரணமான நகர்வுகளை செய்யமுனையும் ஒரு ரேமினேற்றரை எவ்வாறு புதிய எதிர்கட்சித்தலைவர் பாட்மான் சமாளிக்கக்கூடும்?

அதேபோல அடுத்தஆண்டின் முற்பகுதியில் இடம்பெறக்கூடிய பொதுத்தேர்தல் ஊடாக தமது தரப்பை ஆட்சித்தரப்பாக மாற்ற சஜித்பிரேமதாசாவிடம் இருக்ககூடிய தந்ரோபாயங்கள் என்ன? என்பதும் ஒரு வினா.

இவ்வாறாக ராஜபக்ச அணிக்கு எதிர் முனையில் இருக்கக்கூடிய ஒரு எதிர்கட்சித்தலைவர் தோன்றிவிட்டாலும் கோட்டபாயவின் சேணம் தரித்த ஓட்டம் தொடரவே செய்யும்.

அந்தவகையில் இலங்கைத்தீவு மீது நம்பி- கை- வைத்து, அதன் இறைமை அடையாளத்துக்கு மதிப்பளித்து முதலீடு செய்யவாருங்கள் என்ற அழைப்பு அவரால் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனா மற்றும் இந்தியா உட்பட்ட நாடுகளுக்கு தான் இந்த அழைப்பை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதலீடுகளை வருந்தி அழைக்கும் அவரது அரசாங்கத்தால் சுவிஸ்போன்ற நாடுகளுடனான உறவை சீர்செய்ய முடியவில்லை என்பதை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களின் ஊடக கருத்துகள் நிருபிக்கின்றன.

அதேபோல, குடிபோதையில் உளறிக்கொட்டிய ஒரு இளைய குடிமகனார் கோட்டாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்பத்தினரை கொலை செய்வதற்கு, சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகத்தில் உள்ளே தள்ளப்படும் நகர்வுகளும் இடம்பெறுகின்றன.

சீதுவ, பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த குறித்த தமிழ்பேசும் இளைஞர்கள் மதுபானத்தை அருந்திவிட்டு உளறியபோது அதில் ஒருவராக இருந்த 26 வயதான ஹக்கீம்மொஹமட் ரிப்கான் என்பர் கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்பத்தினரை கொலைசெய்யவேண்டும் என்பது தொடர்பான உளறலையும் வெளியிட்டிருந்ததால் அவருக்கு வந்துள்ளது வினை.

அவருடன் கூடத்தண்ணியடித்த வாழைச்சேனை, கிளிநொச்சி அக்கராயன்குளம், விசுவமடு, மஸ்கெலியா ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களையெல்லாம் கட்டுநாயக்க காவற்துறை அள்ளிச்சென்று விசாரணைகளை செய்தது.

விசாரணைகளின் முடிவில் நால்வர் விடுவிப்பட்;டனர் கிக்கில் பேசியதாக கருதப்படும் மொஹமட் ரிப்கான் மேலதிக விசாரணைகளுக்காகவென குற்ற புலனாய்வுத் திணைக்களத்தால் வளையம் கட்டப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இவரது அடையாளம் முஸ்லிமாக இருப்பதால் இவர்மீதான விசாரணைகள் உயிர்த்ஞாயிறு தாக்குதல் மேற்பார்த்த கவனிப்பாக இருக்கக்கூடுமென்பதும் எதிர்பார்க்கத்தக்கதே.

ஆகமொத்தம் சிறிலங்காவின் அரசதலைவராக கோட்டாபாய ராஜபக்கச வந்தபின்னர் அவரது நிர்வாக அடையாளங்கள் சாமானியரை ஈர்ப்பதாக இருந்தாலும் அவரை மையப்படுத்தி உருவாக்கபட்ட அரசாங்கத்தின் இன்னொரு பக்கம் வேறுவிதமாகவே உள்ளது

இதனால்தான் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றி உள்ளுர் பெண் அதிகாரி கடந்த 25ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் தொடர்ந்து மறுப்பதுடன் இது அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சேறுபூசும் முயற்சி என்ற அடையாளத்தையும் வழங்குகின்றது.

குறித்த பெண் கடத்தப்பட்டதாக சுவிஸ்தூதரகத்தால் வழங்கப்பட்ட சில தரவுகளில் உண்மை இல்லை என மறுக்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறித்தபெண்ணும் அவரது குடும்பத்தினரும் தம்மிடம் வாக்குமூலங்களை வழங்க மறுத்து சுவிஸ் தூதரகத்தில் தங்கிருப்பதாகவும் கூறினார். அத்துடன் குறித்த பெண்அதிகாரியை தமது நாட்டுக்கு கொண்டுசெல்ல அனுமதிக்கவேண்டுமென சுவிஸ் அரசாங்கம் கோரியதாகவும் குறிப்பிட்டார்

ஆகமொத்தம் சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது தலையாரியான பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசநிதியையும்; பொதுச்சொத்துக்களையும் வீண்விரயம் செய்வதை தவிர்ப்பதற்குரிய சில முன்னுதாரணங்கள் உட்பட்ட அசாதாரணங்களைக் காட்டிவருகிறார். ஆனால் இந்த நகாவுகளில்

தேர்தலை நோக்கிய அவரது குறுகிய பார்வை இல்லவே இல்லை என அடித்துச்சொல்லமுடியாது. ஆகையால் சிங்கள தேசத்தில் ஆழஊன்றியுள்ள இனமேலாண்மை உணர்வைப்பற்றிய மேன்மை கருத்துவாக்கத்தை தளர்த்துவதில் இலங்கைத்தீவில் வாழும் இன்னொரு தேசியஇனமான தமிழினத்தில் இருப்பையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையூட்டிக்கொள்வதில் தான் அவரது உண்மையான முன்னுதாரண வெற்றி இருக்கக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?