ரேமினேற்றர் ஆட்சியில் 13 சக புலி அதிர்வேட்டுகள்! இரா.சம்பந்தன் நோக்கம் யாது?

  • Prem
  • December 19, 2019
95shares

அதிகாரத்தின் மீது வினா எழுப்பினால் இல்லையென்றால் அதனை விமர்சித்தால் என்ன நடக்கும்? உலகில் உள்ள வேறு இடங்களில் என்ன நடக்கக்கூடிய விடயங்கள் என்பது வேறுவிடயம்.

ஆனால் இதுவே சமகால இலங்கைத்தீவாக இருந்தால்? தற்போதைய நிலையில் இதில் இரண்டு விடயங்களுக்கு உத்தரவாதங்கள் இருக்கக்கூடும்.

அதிகாரத்தின் மீது வினா எழுப்பக்கூடியவர்கள் ஒன்றில் அங்கொடைக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால் தடுப்புக்காவலில் இருக்கவேண்டும்.

இவ்வாறாகத்தான்; புதிய ஆதாரங்கள் இருக்கக்கூடும். அந்தவகையில் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் கடமையாற்றும் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று மீண்டும் சிறிலங்காவின் தேசிய மனநல வைத்தியசாலையான அங்கொடைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

சுpறிலங்காவில் ரேமினேற்றர் கோட்டாபாயவின் ஆட்சி உருவாகி ஒருவாரகாலத்தில் இனந்தெரியாதவர்களால் கடத்தி அச்சுறுத்தப்பட்டேன் எனக்கூறிய குற்றத்துக்காக தற்போது அவர் அங்கொடையும் விளக்கமறியலாகவும் அலையவேண்டிய நிலை.

அதேபோல கடந்ததேர்தல் காலத்தில் ராஜபக்சமுகங்களை அரசியல் ரீதியில் கடுமையாக வறுத்தெடுத்தவரும் அந்நாள் அமைச்சராக இருந்து இப்போது முன்னாள் அமைச்சராகிவிட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இப்போது விளக்கமறியலில் இருக்கவேண்டிய நிலைவந்துள்ளது. ஆகக்குறைந்தது அவர் கிறிஸ்மஸ் தினத்துக்கு முதல்நாள்வரை காவலில் இருக்கத்தான்வேண்டும்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் நேரடியாக தொடர்புபட்டசம்பிக்கரணவக்க அதற்காக வேறு ஒருவரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நகர்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஆகமொத்தம் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியின் விடயமாகட்டும் அல்லது சம்பிக்க ரணவக்கவின் விடயமாகட்டும், சட்டம் தன்கடமையை செய்வதான தோற்றப்பாட்டை வக்கணையாக உருவாக்குவதில் ரேமினேற்றரின் புதிய ஆட்சி அதிகாரமையத்தின் புத்திசாலித்தனம் சற்றுமேலோங்கியிருப்பதும் தெரிகிறது.

சிங்கள மஹா ஜனதாமத்தியில் கொழும்புஆட்சிஅதிகாரமையத்தின் புத்திசாலித்தனம் இவ்வாறு நகர்த்தப்படும் நிலையில் மறுபுறத்தே நாமும் விட்டோமா பார் என்ற கோதாவில் எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்திய தமது தரப்பின் புத்திசாலித்தனத்தை அது அரதப்பழசாக இருந்தாலும் அதனை மீண்டும் ஒரு முறை பிறெஷ்சாக காட்டுவதில் இரா.சம்பந்தன் மேற்பார்த்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புதளம் முயற்சிசெய்துள்ளது

அந்தவகையில் எதிர்வரும் சிறிலங்காவின் பொதுத்;தேர்தலில், ஆசனங்களை வெல்வதற்கான(20?) தந்ரோபாயமாக இலங்கையில் தமிழ்மக்களுக்கான உள்ளக சுயநிர்ணயஉரிமைமறுக்கப்பட்டால், அவர்கள் வெளியக சுயநிர்ணய உரிமையைக்கோருவார்கள் என்ற இரா.சம்பந்தனின் யாழ்ப்பாண எச்சரிக்கை வெளிப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

அதுவும் சும்மா வெளிப்படவில்லை. ஈழத்தமிழர்களின் அரசியல்பரப்பை எரிச்சலூட்டும் வகையில் தமிழீழவிடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமை ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் என சர்ச்சைக்குரிய வார்த்தைகளை இழுத்தபடிதான் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத்தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவுவிழாவில் இரா.சம்பந்தன் சிலவிடயங்களை சொல்லியுள்ளார்.

இந்தியாவை திருப்திப்படுத்தவோ அல்லது கொழும்பை திருப்திப்படுத்தவோ தெரியவில்லை புலிகள் தோற்கடிக்கப்பட்டமை ஒரு நல்ல விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் அத்துடன் முடிவடையவில்லை. தமிழ்மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்றார்கள். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சமத்துவ அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியம் என இரா.சம்பந்தன் கூறிய கருத்து மறுநாளே தமிழ் அரசியல் வாதிகளின் கடுமையான விமர்சனங்களைப்பெற்றிருந்தது.

இதற்கிடையே உள்ளக சுயநிர்ணயம் வெளியக சுயநிர்ணயம் குறித்து இரா.சம்பந்தன் கூறிய விடயங்களும் புதியன அல்ல. இலங்கைத்தீவின்; இனமுரண்பாட்டுகாலஅட்டவணையில் கடந்த 3 தசாப்தகாலத்தை அறிந்தவர்களுக்கு இவை அத்துப்படியானவை

13 ஐ தற்போது கொஞ்சம் வாஞ்சித்தபடி இரா.சம்பந்தன் கூறும் விடயங்கள்; யதாhர்த்தமானவையாக இருக்கக்கூடும்.

ஏனெனில் 198 இல் உருவாக்கப்பட்ட இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தத்த்தின்பின்னர் 88ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம்தான் இலங்கையில் அரசியல் சாசன ரீதியாக விட்டகுறை தொட்டகுறையாக இதுவரை உறுதியளிப்பட்ட ஆட்சி அதிகாரம்; தொடர்பான ஒரு திருத்தம்.

ஆனால் தமிழருக்கு அரசியல் அதிகாரப்பகிர்வு இல்லை என ரேமினேற்றர் கூறியபின்னர் உடனடியாகவே 13 முழுமையாக வேண்டும் எனக்கூறி அந்தத்திருத்தத்தை கட்டிப்பிடித்து குய்யோ முறையோ போடுவதுதான் இங்கு சற்று அசாதாரணமாகின்றது.

இரா. சம்பந்தன் கூறியது போல மகிந்த ராஜபக்ச அரசதலைவராக இருந்தபோது 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவோமென அவரும் அவருடைய வெளி விவகாரச் செயலாளர் பேராசிரியர் ஜி.எல்.பிரீசும் இந்தியாவுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் அது அது நடைபெறவில்லை உண்மைதான்.

ஆனால் கடந்த 2015 ஜனவரியில் மைத்திரி-ரணிலின் ஜகப்பாலனய அல்லது நல்லாட்சி உருவாகியவுடனேயே இந்தவிடயத்தில் ஒரு திடத்தைக்காட்டி வீணாககழிந்த மூன்றரை ஆண்டுகளில் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இன்று குற்றப்பட்டியலை வாசிக்கும் அதே கூட்டமைப்பு மைத்திரி-ரணிலின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பு என்;ற மாயமானின் பின்னால்தான் ஓடியது வேறுவிடயம்

13ஆம் திருத்தச்சட்டம் சிறிலங்காவின் பழைய அரசியலமைப்பில் இருக்கும் விடயமென்பதால் தமிழ்மக்களின் பேரம் பேசும்நிலையை அதற்கு அப்பால் செல்லவைக்கமுடியாத வகையில் கோட்டாபாய 13 உம் கஷ்டம் என வேண்டுமென மூக்கால் அழக்கூடும்.

எனினும் இப்போது தென்னிலங்கை தமக்குரியஅதிகாரம் மிக்க ஒரு முதன்மைத்தலையாரியை தெரிவுசெய்த பின்னர் அவர் தமிழர்களுக்குவழங்கமுடியாத, கொடுக்கக் கூடாத உரிமைகள் குறித்து பேசி அபிவிருத்தியுடன் இரண்டாந்தரப்பிரஜையாக வாழுங்கள் என ஒரு வளையத்தை எறிந்துள்ளமை தமிழருக்கு மிகசவாலானது

ஆகையால் அவ்வாறான சவாலை எதிர்கொள்வதற்குஎடுக்கவேண்டிய முறையான செயற்திட்டத்துக்குப் பதிலாக நாடாளுமன்ற ஆசனங்களுக்குரிய கருத்துக்களை எடுத்துவிடுவதில் எந்தளவுக்கு பலன்இருக்ககூடும்.

வேண்டுமானால் இவ்வாறான உள்ளக -வெளியக சுயநிர்ணய உரிமைக் கருத்துக்களின் ஊடாக தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை உணர்ச்சி அரசியலுக்குள் மூழ்கவைத்து வாக்களித்தால் தமது நாடாளுமன்றச்சலுகைகளையும் பதவிகளையும் இன்னும் ஒருமுறை அவர்களால் நீட்சிப்படுத்துவதற்கு உத்தரவாதம்

ஆனால் அதேகாலத்தில் தேர்தல்முடிந்தவுடன தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை துன்பியல் வாழ்வே கிட்டும். அதன்பின்னர் அரசியல்உரிமையும் இல்லை, சலுகையும் இல்லை என்ற நிலையில் அவர்கள் அல்லாடக்கூடும்.

ஏனெனில் கடந்த 70 ஆண்டுகளாகத் தனிநாடு, சமஷ்டி, வடக்கு - கிழக்கு இணைப்பு, என்ற பேசுபொருள்களும் உரிமையா, சலுகையா என்ற அரங்க முழக்கங்களையும் கண்டுகொண்டது தமிழினம். அந்தவகையில் தமிழருக்குக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு. அது மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ய உரிமையுண்டு என்ற இரா.சம்பந்தனின் நேற்றைய நல்லூர் முழக்கங்களையும் நோக்கிக்கொள்ள முடியுமோ என்னவோ!

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?