கோட்டாபாயவிடம் பந்தாக்கள் இல்லாவிட்டாலும்...

  • Prem
  • January 07, 2020
123shares

உலகஅரங்கை தொடர்ந்து பரபரப்புக்கும் எதிர்வினைகளுக்கும் உள்ளாக்கி வரும் அமெரிக்க- ஈரானிய நிலவரங்களில் இப்போது ஒட்டுமொத்த அமெரிக்கப் படையினரையும் பயங்கரவாதிகள் என ஈரானிய நாடாளுமன்றம் இன்று ஏகமனதாக பிரகடனம் செய்திருக்கிறது.

கடந்த 3 ஆந்திகதி அதிகாலை பக்தாத்தில் வைத்து அமெரிக்க உந்து கணைகளால் கொல்லபட்ட தமது கதாநாயக ராணுவஜெனரல் காசிம் சூலேமானியின் இழப்பின் பின்ன்ணியில் இந்த பயங்கரவாதப்பிரகடனத்தை தெஹ்ரான் செய்துள்ளது.

பயங்கரவாதம் பயங்கரவாதிகள் என்ற பதங்கள் இலங்கைத்தீவுக்கும் புதியதல்ல அவ்வாறான பதங்கள் எப்போதும் அறத்தின் வழியும் அழிவின் வழியும் மாறிமாறி பிரயோகிக்கப்பட்டே வருகின்றன. அறத்தின் வழி நின்ற ஈழத்தமிழர்களுக்கு தம்மீதான அடக்குமுறைகள் அரசபயங்கரவாத அடையாளத்குரியதாக மாறின. இதற்கு மாறாக கொழும்பு அதிகாரமையமும் தமது தரப்பில் தமிழர்களின் விடுதலை வேட்கையை பயங்கரவாதம் என அடையாளப்படுத்தியது.

ஏன் சிறிலங்காவின் பிரதமரான மகிந்த ராஜபச்ச கூட தனது புத்தாண்டு வாழத்துச் செய்தியில் முன்னர் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு சிங்கள இளைஞர்கள் மத்தியில் புரண்டோடிய உற்சாகத்தைப்போலவே இப்போது அவர்கள்

நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள சுவர்களைச் சுத்தம் செய்து, அவற்றில் ஓவியங்களை வரைகின்றார்கள் என செய்தி சொன்னார். அதாவது அன்று விடுதலைப்புலிகளை தோற்கடிக்கும் வரை சிங்கள இளையோரிடம் இருந்த உற்சாகத்தைப்போலவே இப்போதும் உற்சாகம் இருக்கிறதென அவர் கதை சொன்னார்

இலங்கைத்தீவின் நிரந்தரமான அமைதிக்கு எப்படி இவ்வாறான பயங்கரவாத அடையாளப்படுத்தல் உதவப்போவதில்லையோ அவ்வாறுதான் உலகின் அமைதிக்கும் அமெரிக்காவும் ஈரானும் மாறிமாறி கூறும் பயங்கரவாத குற்றச்சாட்டுகளும் உதவப்போவதில்லை

இதேபோலவே கடந்த 3 ஆந்திகதி அதிகாலை ஈரானிய ஜெனரல் காசிம் சூலேமானியை காவுவாங்கியதன் ஊடாக அமெரிக்கா தனது மத்திய கிழக்கின் மூலோபாயத்துக்கு தனக்குத்தானே ஆப்பு வைத்து விட்டதோ என்ற ஒரு ஐயமும் உள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை துருக்கி சிரியா ஈராக் ஜோர்தான் குவைற் பாஹ்ரெயின் ஐக்கிய அமிரகம் சவுதி கட்டார் ஆப்கானிஸ்தான் என பல நாடுகளிலும் அதன் துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

இதில் குவைற் பாஹ்ரெயின் கட்டார் ஆகிய நாடுகளில் தலா பத்தாயிரத்துக்கு மற்றபட்ட துருப்புகள் உள்ளன. குவைற்றில் மட்டும் பதின்மூவாயிரம் அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டுள்ளதால் எதிர்வரும் நாட்களில் இந்த நாடுகளில் இருந்து வெளிப்படக்கூடிய அமெரிக்க சார்பு நிலைமீதான எதிர்வினைகள் முன்கியமானவை ஈராக்கில் ஏற்கனவே அமெரிக்க சார்பு நிலை வீழ்ச்சிகண்டு அங்கிருந்து உடனடியாகவே அமெரிக்கத்துருப்புகள் வெளியேற வேண்டுமென்ற நாடாளுமன்றத்தீர்மானமும் வெளிப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறு ஈராக் கோரினால் ஈராக்மீது கடுமையான பொருளாதாரத்தடைகள் எடுக்கப்படுமென அமெரிக்கா எச்சரித்திருந்தாலும் ஈராக்கின் சதாம்உசேனின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்த பின்னது 17 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு குறித்த வினா முக்கியமான யூவடிவத்திருப்பத்தை எடுத்திருப்பதை அவதானிக்கவேண்டும். அதாவது சதாம் உசேனின் ஆட்சியை வீழ்த்திய அமெரிக்க கதாநாயகர் இப்பொது ஈராக்குக்கும் வில்லனாக மாறிவிட்டது.

உலக அரங்கின் பின்னணியில் இலங்கையின் உள்ளுர்களத்தில் ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச கொண்டுள்ள இராணுவ மோகமும் சரி அனைத்துலக அரங்கில் வெளிப்படக்கூடிய இராணுவ மோகமும் சரி அவை எங்கெல்லாம் ரசிக்கப்படுகின்றதோ எங்கெல்லாம் அதற்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்ளப்படுகின்றதோ அங்கெல்லாம் அமைதி அடிவாங்கவே செய்யும்.

சுpறிலங்காவின் அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்ச தன்னை ஒரு வித்தியாசமாக காட்;டிக்கொள்வதை மறுக்கமுடியாது. கடந்தவெள்ளிக்கிழமை கூட அவர் தனது அக்கிராசன உரைக்காக நாடாளுமன்றத்துக்கு சென்றபோது கூடவழமையாக அவ்வாறான உரைக்காக செல்லும் அரசதலைவர்களை பின்தொடரக்கூடிய சம்பிரதாயபூர்வ குதிரைப்படை, வாகனத்தொடரணி, உந்துருளி தொடரணி போன்ற பந்தாக்கள் எதுவுமே இல்லை.

இவ்வாறான பந்தாஅற்றநிலையொன்று அவர் அரசதலைவராக உருமாறிய நாளில் இருந்தேகாட்டப்படுகிறது. ஆனால் மறுபுறத்தே அவரது நிர்வாகமட்டத்தில் படைய முகங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுவருகின்றன.

சிங்களத்தேசியத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை என்ற பழைய உச்சாடனங்களின் ஊடாக இந்த நிலைமை நீட்சிக்கு உள்ளாக்கப்படுகிறது. இதன் பக்கவிளைவாகத் தான் பேரினவாத சிந்தனை ஆதிக்க தேசியவாதமாகத் தலைதூக்க முனைகிறது இதற்கு ஒரு உதாரணமாக சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தீவிரமான பேசுபொருளை எடுக்கலாம்.

தனககுத்தெரியாத சிங்களம் தன்பிடரிக்கு சேதம் உருவாக்கியதைபோல தமிழர்கள் தமக்கு புரியாத சிங்களத்தில் தான் இலங்கையை போற்றவேண்டும் என சிங்களத் தேசியவாதிகள் அடம்பிடிக்கின்றார்கள்

உலகில் உள்ள பலநாடுகளில் உதாரணமாக பெல்ஜியம்> புருண்டி> கனடா கொமரோஸ்> பிஜி> பின்லாந்து> கென்யா> மலாவி> மார்சல் தீவுகள்> நவ்ரு நியுசிலாந்து> தென்னாபிரிக்கா> சூரினாம் >சுவிற்லாந்து> சாம்பியா >சிம்பாவே போன்ற பல நாடுகளிலும் பலமொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்னுதாரணங்களை உள்ளன

அவ்வாறாயின் இலங்கையில் மட்டும் ஏன் இரண்டுமொழிகளில் பாடமுடியாது அதுவும் 1949இல் முதன்முதலில் தமிழில் பாடப்பட்டு அதன் பின்னர் 2015இல் இருந்து 2019வரை பாடப்பட்டநிலையில் ஏன் இந்தாண்டு அதனைப்பாடுவதா இல்லையா என்பதில் பட்டிமன்றம் நடத்த வேண்டும்? பௌத்த துறவிகளிலும் கடும்போக்காளர்களும் இதில் கடும்போக்கு காட்டவேண்டும்?

சரி இப்போது தமிழர்கள் தமக்கு வாக்களிக்காமல் விட்டாலும் யானே அவர்களுக்கும் அரச தலைவர் என பிரகடனப்படுத்திய கோட்டாபாய அல்லது அவ்வப்போது தமிழில் அதில் தப்புத்தண்டா இருந்தாலும் அந்த மொழியில் உரையாற்ற பினனிற்காக பிரதமது மகிந்த ராஜபக்ச ஆகிய முகங்கள் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு என்ன செய்தியை வழங்கப்போகின்றார்கள். சுதந்திரதினம் வரும் பெப்ரவரி 4 இற்கு இன்னமும் 4 வாரங்கள் கூட இல்லையென்பதும் இங்கு முக்கியமானது.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!