இலங்கையில் ஏககாலத்தில் அமெரிக்க- ரஷ்ய- சீன முகங்கள்! கிரகணமாக? பிரகாசமா?

  • Prem
  • January 14, 2020
45shares

அறிவியல் ரீதியில் சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஏதோ ஒரு வகையில் நேர்கோட்டில் வருவதால் கிரகணங்கள் வருகின்றனஃ

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வந்தால் அது சூரிய கிரகணம் இதுபோல சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவே பூமி வந்தால் அது சந்திர கிரகணம்.

ஆகையால் இடங்கள் மாறினாலும் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியன ஒரு நேர்கோட்டில் வரும் அறிவியல்படி கிரகணங்கள் வருவது உண்மையானால் இலங்கைத்தீவில் இன்று ஒரே நேர்கோட்டில் அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் ராஜதந்திர முகங்கள் ஏக காலத்தில் தென்பட்டமை அந்தத்தீவுக்கு அரசியல் கிரகணமாகமாறக்கூடுமா? இல்லை அதீதபிரகாச நிலையாக உருவாகக்கூடுமா என்ற வினாக்களை எழுப்ப வைக்கிறது.

அந்த வகையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குரிய உதவிச்செயலாளர் அலிஸ் வெல்ஸ் மூவர் அடங்கிய தனது தூதுகுழுவுடன் இன்று அதிகாலை கொழும்பில் கால்பதித்தார்.

ஆனால் அவர் அவ்வாறு கால்பதிக்க முன்னரே 16 பேர் அடங்கிய தூதுகுழுவுடன் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கையில் முகாமிட்டுவிட்டார்.

அவ்வாறாயின் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் என்ன சளைத்தவரா? அவரும் 42 பேர் அடங்கிய ஜம்போ குழுவுடன் இன்று காலை இலங்கையில் ஜம்மெனக் குதித்தார்.

அடேங்கப்பா இன்னும் சற்றேறக்குறைய 20 நாட்களில் இன்னொரு சுதந்திர தினத்தை காணவுள்ள இலங்கைத்தீவுக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் இது. உலகின் மூன்று முன்னணி வல்லரசுகளின் முக்கிய தலைகள் ஒரேநேரத்தில் அந்தத்தீவில்.

இதற்கும் அப்பால் இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தது என்ற தூண்டிலுடன் ஜப்பானிய அமைச்சர் ரேமினேற்றர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று சந்தித்துப்பேசியமை வேறுவிடயம்.

ஆகையால் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சில் இருக்ககூடிய ராஜதந்திர பரிசாரகர்களுக்கு இன்றும் நாளையும் வியர்த்து விறுவிறுவிறுக்கும் வகையில் வேலை இருப்பது நிச்சயம்.

ஏனெனில் எதிலும் பெர்பெக்ற் பார்க்கக்கூடிய ஒரு ரேமினேற்றர் ஆட்சித்தலைவராக இருப்பதால் ஒரே நேரத்தில் நாட்டுக்குள் இறங்கிய அமெரிக்க ரஷ்ய சீன முகங்களை பக்குவமாக வரவேற்று பக்குவமாக வழியனுப்பிவைக்கவேண்டிய கவலை அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

இல்லையென்றால் அவர்தான் திட்டித்தீர்பாரே?

எது எப்படியோ கடந்த நம்பரில் இடம்பெற்ற தேர்தலில் ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச பெருவெற்றி பெற்று ஆட்சிக்கொலு ஏறியபின்னர் முதற்தடவையாக வெளிநாட்டுத்தலைகள் உள்ளுரில் முகாமிட்டிருப்பதால் இலங்கைக்கு இது ஒரு முக்கியமான வேளை.

ஆனால் வரும் முகங்கள் ஒன்றும் தேமேயென சும்மாவரவில்லை இலங்கையை மையப்படுத்திய தமக்குரிய லாப நட்டக் கணக்குகளுடன் தான் ராஜதந்திர கணக்குகளையும் பார்க்க நினைக்கின்றன. இதில் தமிழ் அரசியல் தளத்தைப்பொறுத்தவரை அமெரிக்க ராஜாங்க முகமான அலிஸ் வெல்ஸ் தான் கொஞ்சம் ஈர்ப்புக்குரியவராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இரா. சம்பந்தன் மேற்பார்த்த முகங்களை ஏறெடுத்து பார்த்து இன்று பேசியிருக்கிறார்.

மற்றப்படி சீன ரஷ்ய முகங்கள் கொழும்பு அதிகாரமைத்தை மட்டுமே கணக்கில் எடுக்கும்முகங்கள் என்பது வெளிப்படை. இதில் ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யாவைவிட சீனாதான் மீண்டும் ஒரு முறை கடன் உதவி என்ற கரட் துண்டை இலங்கைக்கு நீட்டியபடி செல்லதாக தெரிகின்றது அந்த வகையில் சீன வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கைப்பயணத்தின் சிறப்புப்ரிசாக வட்டி குறைக்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையை அறிவிக்கக்கூடும்.

இலங்கைத்தீவை பொறுத்தவரை தற்போது அதற்கு மொத்தமாக 52 பில்லியன் டொலர் வெளிநாட்டுன்கடன் உள்ளது. இதில் 6 பில்லியன் கடன்தொகை சீனாவழங்கிய கடன் அதாவது இலங்கைத்தீவின் மொத்த வெளிநாட்டுக்கடனில் இது 11.5வீதமானது.

ஆகமொத்தம் உலகம் முழுவதுமுள்ள கடற்பிராந்தியங்களில் தனது இருப்பை மேம்படுத்த திட்டமிடும் சீனா அதற்குரிய வகையில் தனது பட்டுப் பாதை கொள்கையை மையக் கொள்கையாகவும், முன்னணிக் கொள்கையாகவும் மாற்றியமைக்கும் வகையில் நைச்சியமாக நகரும் நிலையில் இலங்கையும் அதில் ஒரு விட்டில் பூச்சி

அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் தனது பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக அடையாளப்படுத்தும் சீனா அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, வழங்கும் பணத்தை வட்டியும் முதலுமாக எடுக்க முயலும் என்பதும் வெளிப்படையானது.

இதனால் இலங்கைததீவுபோன்ற நாடுகள் சீனமுதலீட்டால் பிற உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை ஆப்பை செருக்கக்கூடியன

குறிப்பாக கொழும்பில் சீன முதலீட்டில் உருவாக்கப்படும் துறைமுக நகரம சீனாவின் கடல் வழி பட்டுப்பாதையின் ஒரு அம்சமே.இதனால்தான் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கு எறியப்படும் சீன முதலீடுகளை இந்தியப்பெரியண்ணன் தன்னையும் சுற்றிவளைக்க்கக்கூடிய ஒரு முத்துமாலையாக எச்சரிக்கையுடன் நோக்கிக்கொள்கின்றது.

இந்தியப்பெரியண்ணன் என்னதான் தனது சாகர் மாலா திட்டத்தின் ஊடாக 7>000கிலோமீற்றர் கடல் எல்லையிலுள்ள 200 துறைமுகங்களை மேம்படுத்த முனைந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் சீன அரச தலைவர் ஜீ ஜின்பிங்கின் தனிப்பட்ட அரசியல் ஆர்வம் காரணமாக பட்டுப்பாதை திட்டம் சீன வெளியுறவுகொள்கைகளை வரையறுக்கும் அம்சமாக மாறிவிட்டதால் இலங்கை போன்ற நாடுகளும் சிக்கிவிட்டன.

இப்போது நீங்கள் உங்கள் மனங்களில் இந்த வினாவை எழுப்பிப்பாருங்கள் இலங்கைத்தீவில் இன்று ஒரேநேர்கோட்டில் அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் முக்கிய முகங்கள் தென்பட்டமை அந்தத்தீவுக்கு கிரகணமா? பிரகாசமா? அநேகமாக விடையையும் உங்களால் ஓரளவு ஊகிக்கமுடியும்

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்