சீனஅமைச்சர் சென்றார்!... இந்திய தோவல் வந்தார்! சிறிலங்கா வெட்டியோட முடியாத ஏட்டிக்குப்போட்டி !!

  • Prem
  • January 20, 2020
57shares

இலங்கையின் உள்ளுர் அரசியலில் எந்த விடயம் முன்னரங்குக்கு வந்தாலும் அல்லது பின்னரங்குக்கு சென்றாலும் பூகோள அரசியலில் சிக்கியுள்ள இலங்கை அதிலிருந்து விடுபடுவதென்பது இயலாத காரியம் என்பது கடந்த சில நாட்களில் நிருபிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள் அந்த இறையாண்மையை உங்களின் நலன்களுக்காக தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்! என தற்போதைய முதன்மைத்தலையாரியான ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபக்ச என்ன தான் வினயமான கோரிக்கைகளை அமெரிக்கா முதல் இந்தியாவரை முன்வைத்தாலும் இந்த ஏட்டிக்குப்போட்டி ஆட்டத்தில் இருந்து வெட்டியோட அந்தத்தீவினால் முடியாது.

இதனால் தான் கடந்தவாரம் இலங்கைத்தீவில் ஒரே நேர்கோட்டில் அமெரிக்கா ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் முக்கியமுகங்கள் தென்பட்ட பின்னர் இந்தியப்பெரியண்ணன் வீட்டில் இருந்து அதன் பாதுகாப்பு ஆலோசகரான அஜித்டோவல் கடந்த 18 அந்திகதி அங்கு உடனடியாகவே ஓடிச்சென்று ரேமினேற்றர் கோட்டாபாய ராஜபச்சவை சந்தித்திருக்கிறார்.

டோவல் வெறுங்கையுடன் கோட்டாவை சந்திக்கவில்லை. மாறாக கையிலே காசு வாயிலே தோசை என்பதாக 50 மில்லியன் அமெரிக்க டொலரை கொழும்புக்கு வழங்கியுள்ளார். சின்னத்தம்பி வீட்டுப் பாதுகாப்பு படையினருக்கு தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதியை வழங்குவதாகவும்; அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பெரியண்ணனுக்கும் சின்னத்தம்பிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பலவிடயங்களும் பேசப்பட்டுள்ளன.

சிறிலங்கா ராணுவத்துக்கு பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா 50 மில்லியன் டொலர் நிதியை வழங்குவது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயலென பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்களின் கண்டனம் அக்கரையில் உள்ள தமிழகத்தில் இருந்து வெளிப்பட்டாலும்

உள்ளுரில் ஈழத்தமிழர்களின்; 13 க்கு இந்தியாவே பொறுப்பு என தமிழ்தேசியக் கூட்டமைப்பு கைகாட்டினாலும் அதே பெரியண்ணன் வீட்டில் இருந்து தமிழர்களுக்கு 13 அல்ல மாறாக 50 மில்லியன் டொலர் நிதி கொழும்புக்கு புதிதாக வந்துள்ளது.

ஆகமொத்தம், இலங்கைத்தீவின் இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள் அந்த இறையாண்மையை உங்களின் நலன்களுக்காக தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளாதீர்கள்! என ரேமினேற்றர் பல்லவிபாடினாலும் வந்தவரை லாபம் என எல்லாத்தரப்பிடமிருந்தும் கொழும்பு கறந்து கொள்கிறது.

அதாவது தமிழர்அரசியல் தளம் தமக்குரிய 13 க்கு இந்தியாவே பொறுப்பு என பேச்சுப்பல்லக்கை காவியபடி தமக்குள் முரண்பட்டுக்கொள்ள யாருடனும் முரண்படாமல் கொழும்புக்காரியம் நடக்கிறது.

தமிழ் பிரதிநிதிகளை பொறுத்தவரை தமிழ்த் தேசியம் என்ற வலு வெறுமனவே நாடாளுமன்ற ஆசனங்களை பிடிக்கவும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறவைக்கும் தில்லாலங்கடி சூத்திரமாக மாற்றப்படுகிறது.

அதாவது தமிழமக்களின் உணர்ச்சியை உசுப்பேற்றி கொழும்பு அதிகாரமையம் குறித்து எதிர்மறையாக ஒலிவாங்கிகளுக்கு முன்னால் திட்டித்தீர்த்து அதே கொழும்பு அதிகார முகங்களுடன் நாடாளுமன்ற தேனீர் விடுதியில் புன்முறுவல் செய்து தமது தமது அரசியல் இருப்பை அங்கும் இங்கும்; தக்கவைக்கவே தமிழ் அரசியல் வாதிகள் முயல்கின்றனர்.

இந்த உசுப்பேற்றல் நிலை தொடரும்வரைஎதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு 20 க்கு மேற்பட்ட ஆசனங்கள் வடக்குகிழக்கில் கிட்டினால் கூட அதன் ஊடாக தமிழர்களுக்குரிய அரசியல் அடைவுகள் வருவதற்கு சாத்தியமுண்டா என்றால் அது வினாதான்.

அவ்வாறு வந்திருந்தால் தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக்கூட்டணியும் தமிழதேசியக்கூட்டமைப்பு என மொத்தமாக சற்றேறக்குறைய கடந்த 70 வருடங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்ற ஆசனங்கள் தமிழ்பிரதிறிதிகளால் சூடேற்றப்பட்ட போது எப்போதே ஒரு தீர்வு கிட்டியிருக்கவேண்டும்

ஆகையால் எதிர்வரும் பொதுத்தேர்தலில்; தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு 20 அல்ல அதற்கு மேலும் கிட்டினாலும் சிங்களப் பெருந்தேசியவாத அந்த காரத்தில் இருந்து தமிழர்களை அரசியல் ரீதியில் அவர்களால் காத்துக்கொள்ளவே இயலாது.

ஆனால் மறுபுறத்தே தெற்கின் சமகாலமோ வேறுகதைகளை சொல்கின்றது. பூளோள அரசியல் சூட்சுமங்களை ரேமினேற்றர் கோத்தபாயவும் மகிந்தவும் தமது அரசாங்கத்தின் ஊடாக தந்திரோபாயமாக கையாள முனைவதை அவதானிக்கவேண்டும்

அதாவது சீனா மீண்டும் ஒரு முறை கடன் உதவி என்ற கரட் துண்டை இலங்கைக்கு நீட்டி சென்ற மறுநாளே அதே கடனுதவியை காவியபடி இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் கொழும்புக்கு சென்று திரும்பியிருக்கிறார்.

ஆகையால் இவ்வாறான யதார்த்த்தை புரிந்து தமிழர்தரப்பும் தமது அரசியல் போக்கை மாற்றாவிட்டால் வெறும் உணர்ச்சிகர தூண்டிலில் சிக்கி தமிழர் அரசியலும் இழுபட்டு செல்லும் அவலமே தொடரக்கூடும்

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்