ஜெனிவா அமர்வு வரும் பின்னே! (ஊடக) சந்திப்புகள் வரும் முன்னே!!

  • Prem
  • January 29, 2020
38shares

ஜனநாயகம் குறித்து அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள மக்களுக்கு கடந்த 25 வருடங்களாக திருப்தி இல்லை என்ற ஒரு முடிவை உலகின் தொல்முதுப்பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிறிட்ச் பல்கலைக்கழகம் தான் நடத்திய புதியஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளது.

சுமார் 40 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட 3500 கணிப்பீட்டு செயற்திட்டங்களில் இருந்து இந்தமுடிவுபெறப்பட்டதாக இந்த ஆய்வை நடத்திய கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் எதிர்கால ஜனநாயகத்துக்கான மையம் கூறுகிறது.

அதாவது முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தில் திருப்தியடையாத மக்களின் வகிபாகம் முன்னர் இருந்த 48 வீPதத்தில் இருந்து10 புள்ளிகள் மேலும் எகிறி தற்போது58 வீதத்தில் இருப்பதாக ஐரோப்பாவின் நிதிவசதி கொண்ட கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு கவலையுறுகிறது.

நிச்சயமாகவே 90 நோபல்விருதாளர்கள் கல்விபயின்ற கேம்ரிட்ச் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும் இந்த ஆய்வுமுடிவில் உண்மை இருக்கும் என்பதை இலங்கைத்தீவு வாழ்மக்களின் எண்ணவோட்டம் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதமாக வழங்கக்கூடும். அந்தளவுக்கு மக்கள் வழங்கிய ஜனநாயக முடிவின் பிரதிநிதிகள் என விழிக்கப்படுபவர்கள் நடத்தும் கூத்துக்கள் உள்ளன.

அந்தவகையில் இலங்கைத்தீவில் கொரனா வைரஸ் குறித்த செய்திகள் பீதியேற்படுத்துவதற்கு முன்னரான சிலநாட்களில் பரபரப்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமந-hயக்காவுக்கு இன்று மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்துக்கு சென்றாலும் அவா குறித்த செய்திகளை விட கொரானா செய்திகளுக்கே மவுசுஅதிகம் இருந்தது

இதனால் அடுத்தமாதம் 12 ஆம் திகதி வரையில் ரஞ்சன் ராமநாயக்காவை விளக்கமறியலில் வைக்கும்படிநீதிமன்றம் இன்றுவழங்கிய உத்தரவு ஒரு துண்டு செய்தியாகவே மாறியது.

இலங்கைத்தீவைப்பொறுத்தவரை தேர்தல் என்ற ஜனநாய பொறிமுறை ஊடாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் லட்சணத்தின் சுழிசுத்தம் இனவேறுபாடின்றி எல்லா மக்கள் பிரதிநிதிகளிடமும் உள்ளது.

மக்களுக்குரிய அரசியல் தலைவராக எவரையும் காணோம். எல்லா பிரதிநிதிகளும் வாக்களித்த மக்களுக்கு நாமங்களை போடத்தயங்காத வெறும் அரசியல்வாதிகளாகவும்; எந்த நேரத்தில் எப்படி ஊடக மாநாடுகளை நடத்தவேண்டும் என்ற சூட்சுமம் அறிந்தவராகவும் காட்சியளிக்கின்றனர்.

அந்த வகையில் ஜெனிவா மனிதஉரிமை அமர்வு நெருங்கும்வேளை காலநேரம் பார்த்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் வைத்த ஊடகமாநாடு முதல்... சிறிலங்காவுக்கான அமெரிக்கத்தூதர் அலெய்னா ரெப்லிப்ற்;ஸ், சிறிலங்கா சபாநாயகர் கருஜயசூரியவை சந்தித்த நகர்வுகள் வரைபதிவாகின்றன.

ரேமினேற்றர் கோட்டாபாய மேற்பார்த்த ராஜபக்சஅதிகாரமுகங்களின் ஆட்சியை எப்படி தமக்கு இசைவான வழிக்குகொண்டுவர முடியும் என்ன சூட்சுமத்தை அறியக்கூடிய வோசிங்டன் சபாநாயகர் கருஜயசூரியவிடமிருந்து தனக்குரிய தரவுகளை பெற்று அதனை ஜெனிவா பலெ தெ நசியோன் அரங்குவரை சாதக பாதக நுட்பங்களுடன் நகர்த்தக்கூடும்.

இவ்வாறாக உள்ளுரில் இருக்ககூடிய கவலைகளை எவ்வாறு ஜெனிவாமனித உரிமை அரங்கு போன்ற உலக அரங்கில் ராஜபக்ச சகோதரர்களின் அதிகாரமையப்புள்ளியில் எவ்வாறு ஒரு ஊசியால் குத்தமுடியும என்பதில் சபாநாயகர் கருஜயசூரியவை நேற்று சந்தித்த அமெரிக்கத்தூதர் அலெய்னா ரெப்லிப்ற்;ஸ் ஒரு கணக்குப் போட்டிருக்கக்கூடும்.

ஆனால் இவ்வாறாக ஜெனிவாவில் அனைத்துலக ஊசிகுத்தல்கள் வந்தாலும் ஜெனிவா மனிதஉரிமை அமர்வு நெருங்கும்வேளை சுமந்திரன் தனது ஊடகமாநாட்டில் சில ஜெனிவா செய்திகளை சொன்னாலும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையை மைய்பபடுத்திய தீர்மானம், தமிழ்மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் வகையில் முன்னரை விட, மிகுந்த வீரியமாக நகரும் என்பதில் தமிழர்கள் பெரும் நம்பி- கை வைப்பதற்கு ஆதாரம் இல்லை.

ஏனெனில் இலங்கைத்தீவை மைய்பபடுத்திய பூகோள அரசியல் எப்போதும் தேசநலன்கள் மற்றும் தந்திரோபாய, மூலோபாயத்தேவைகள் என்ற கரட்துண்டுளில் பின்னால் போகும் முல்லாவின் கழுதைபோன்றதே.

இவ்வாறன சூத்திரங்களுக்கு தமிழர்களுக்கு நீதியை வழங்கவேண்டிய வகையில் எந்த ஒரு கொமன் போமிலா அல்லது பொதுச் சூத்திரம் யாதும் இல்லை

ஆகையால் ஜெனிவாவில் வோசிங்டனோ அல்லது லண்டனோ மனித உர-pமைகள் பற்றி எவ்வளவு பேசினாலும் இந்த தூண்டிலின் மிதவை எப்போதும் வோசிங்டன் - கொழும்பு அல்லது லண்டன் -கொழும்பு என இறையாண்மை உள்ள இரண்டு அதிகார மையங்களுக்கு இடையான உறவாகவே மிதக்கும்

வேண்டுமானால் இந்த யதார்த்தத்தை உள்வாங்கியபடியே தமிழ்அரசியல்வாதிகள் கூறும் ஜெனிவா செய்திகளை கொஞ்சம் நீங்கள் ரசித்துக்கொள்ளலாம் அவ்வளவுதான்

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்