விக்கியின் கூட்டணி- சுமந்திரன் கூட்டமைப்பு! ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத்தாழ்பாள்!!

  • Prem
  • February 13, 2020
112shares

இந்தியப்பெரியண்ணன் வீட்டுக்குச்சென்ற சிறிலங்காவின் பிரதமரும் இலங்கைத்தீவின் அரசியலில் விடாது கறுப்பாகவும் சுற்றித்திரியும் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு தாம் வழங்கவேண்டிய கடனுக்கு தவணை சொல்லி சுளுவாக காரியம் பார்த்த பின்னர் நாடுதிரும்பிய சமகாலத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா ஒரு கதை சொன்னார்

சிறிலங்காவில் விரைவில் இடம்பெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை இனப்பிரச்சினை குறித்து பெரியண்ணன் வீட்டின் பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்தப்படும். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிரதமர் மோடி சுமூகதீர்வு காண்பார் எனபதே மாவையார் வழங்கிய செய்தி.

மாவை சேனாதிராஜா கூட இந்த செய்தியை இந்தியாவின் புதுச்சேரியில் வைத்துத்தான் சொல்லியிருந்தார்.

அதாவது எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர்தாயகத்தின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு மாறிய பின்னர் அந்த ஏகத்தின் அடிப்படையில் பெரியண்ணன் வீட்டுடன் பேச்சுக்களை நடத்தகூட்டமைப்பு பிரியப்படக்கூடும்.

ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்குரிய எதிர்க்கீரைகடையாக கடந்த 9 ஆந்திகதி முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கில் உருவாகிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் (தமிழ் மக்கள் கூட்டணி , ஈ.பீ.ஆர்.எல்.எப், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றின் கலவை ) இப்போது ஏறக்குறைய இதே எண்ணத்தைத்தான் கொண்டிருப்பது போலத்தெரிகிறது.

அதுவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர்தாயகத்தின் ஏக பிரதிநிதிகளாக தாமும் மாறிய பின்னர் அந்த ஏகத்தின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான பேச்சுக்களை நடத்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் அவாக்கொள்கிறது.

ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என களம் இறங்கினால் தமிழர்தாயகத்துக்கு எதிர்வரும் தேர்தலில் அறுவடை கிட்டுமா என்ற ஐயம் குறித்து இந்தத்தரப்புகள் சிந்திக்காத நிலையில் தமிழர்களின் குடுமிப்பிடி சந்தியில் நிற்கிறது

விக்னேஸ்வரன், தலைமைத்துவப் பதவிக்கு ஆசைப்பட்டு, ஒரு தனிக்கட்சியை உருவாக்கி, தெற்கிலுள்ள பேரினவாதிகள் விரும்புவது போல தமிழர்களின் வாக்குகளைச் சிதறக்க முயல்வதாக கூட்டமைப்பு குற்றஞ்சாட்ட

தமதுதரப்பு ஒரு மாற்றுத்தலைமையை உருவாக்கியுள்ளதால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கஜேந்திரகுமாரின் தமிழ்தேசியமக்கள் முன்னணியும் கடும்சவாலை சந்தி;ப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரனின் பதில் கருத்து வர ஆகமொத்தம் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்பாழ் போல தமிழர்களின் அரசியல் பரப்பிலும் புதியவெடிப்புக்களின் ஊடாக பல கதைகள் கூறப்படுகின்றன.

தெற்கே எதிர்வரும் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக ரேமினெற்றர் கோட்டாபாய ராஜபக்ச மேற்பார்த்த ராஜபக்ச சகோதரயோ அரசாங்கம் நுட்பமாக தில்லாலங்களை செய்து அதனூக விஸ்வருப இலக்கை எட்டிப்பிடிக்க முயல்கிறது.

ஆனால் மறுபுறத்தே தமிழர் கட்சிகள் உட்பட்ட எதிர்கட்சிகள் தங்கினத்தோம் போடுகின்றன. குறிப்பாக சிங்கள மக்களின் முக்கிய எதிரணியாக இருக்ககூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையின் கதையோ பெரும் பாடாவதி கதையாக இழுக்கின்றது.

எதிர்க்கட்சிகளின் இவ்வாறான நகர்வுகள்யாவும் ரேமினெற்றர் மேற்பார்த்த ராஜபக்ச சகோதரயோக்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவிவாயில் விழுந்த வாய்ப்பாகவும் தமிழர்களின் குழுமிப்பிடிகள் குறித்த புதிய செய்திகள்; அவர்களுக்கு குஷியாக இருக்கக்கூடும்.

தமிழர்களின் அரசியல் பரப்பைப்பொறுத்தவரை இன்று சகல தமிழ் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தாங்களும் தங்கள் கட்சிகளும் மட்டமே தமிழர்களுக்காக இயங்குபவை என கூறிக்கொண்டு மறுதரப்பை தூஷிக்க பின்நிற்கவில்லை.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இயங்கக்கூடிய வாய்புகள் தமிழர்பரப்பில் மறுபக்கப்படுவது தொடர்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை

அதன் பங்காளிக் கட்சிகளாக, ரெலோ மற்றும்; புளொட் ஆகியன அடையாளப்படுத்தப்படாலும் அவற்றின் உண்மையான நிலை என்பது உள்ளே ஐயா பாணியில் மட்டுமே உள்ளது.

மாறான இன்றுவரை ஆதிகத்தை கொண்டுள்ள தமிழரசுக் கட்சிக்கே வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இயங்க வேண்டிய அதிக பொறுப்பு இருந்தாலும் அதனை அது முறையாக உணர்ந்தாகத் தெரியவில்லை.

ஆகையால் விக்னேஸ்வரன், தெற்கிலுள்ள பேரினவாதிகள் விரும்புவது போல தமிழர்களின் வாக்குகளைச்சிதறடிக்க முயல்வதான கூட்டமைப்பின் குற்றஞ்சாட்;டுக்கும்

அதேபோல தமதுதரப்பு ஒரு மாற்றுத்தலைமைக்குரிய புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதால் கூட்டமைப்பும் முன்னணியும் திணறுவதான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் எள்ளலுக்கும் இடையில் தமிழர்களின் அபிலாஷைகளின் முக்கியத்துவதே ஒரு பாலத்தை அமைக்கவேண்டும்

ஆகையால் தமிழர்களின் ஒற்றுமைகுறித்தும் அவர்களுக்கான தளங்களின் இணைப்பது தொடர்பாகவும் வாய்கிழிய பேசும் தரப்புகள் குறிப்பாக தமிழ் குடிசார் சமுகமாவது இந்தப் பூனைக்கு மணி கட்டும் செயல் வடிவத்தை கொடுக்குமா? இதுவே காலம் எழுப்பும் வினா.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்