இலங்கைத்தீவுவாழ் தமிழினத்தின் மீது 2009மே மாதம் 18 வரை நகர்த்தப்பட்ட உதிரப்பழிக்குரியநீதியை அமெரிக்காவின் துணையுடன் சிறிலங்காவை ஐ.சி.சி எனப்படும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி பெற்றுக்கொள்ளலாம் நினைக்கக்கூடிய தமிழர்களின் ஒரு வகிபாகம் உள்ளது.
அவ்வாறான வகிபாகத்துக்கு இன்று அதே ஐசிசி எனப்படும் International criminal court இல் இருந்து வந்த செய்தி முக்கிய விசயதானத்தை வழங்கிக்கொள்கிறது.
அதாவது 2003 முதல் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்களத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை தலிபான்கள் அமெரிக்கா மீதும் நடத்தலாம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நிச்சயமாகவே ஐ.சி.சியின் இந்தத்தீர்ப்பு அதன்மீது ஏற்கனவே சீற்றம் கொண்ட அமெரிக்காவுக்கு மேலும் சீற்றத்தை வரவழைத்தால் இதற்குரிய எதிர்வினைகளின் புகுந்து சிறிலங்கா போன்ற போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் நாடுகளும் குளிர்காயவே தலைப்படும்.
போர்க்குற்றங்களைத் தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா மீதும் நடத்தலாம் என அனைத்துலக நீதிமன்றம் ஏற்கனவே கூறியநிலையில் அவ்வாறான நகர்வை தடுக்கும் வகையில் மேன்முறையீடு செய்யப்பட்டபோது அதனை இன்று நிராகரித்த ஐ.சி.சி இவ்வாறான விசாரணைகள தலிபான்கள் ஆப்கான் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் மீது நடத்தலாம் என தீர்ப்புவந்துள்ளது
அமெரிக்கா ஐ.சி.சி.யின் உறுப்புரிமைக்காக ஒப்பமிட்ட ஒரு நாடு அல்ல, அத்துடன் அமெரிக்க குடிமக்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும் அதிகாரத்தையும் மறுத்துரைக்கும் ஒரு நாடு
ஆனால் அதே அமெரிக்கா இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களு;ககாக சிறிலங்காவின் அப்போதை போர்க்ளத்தளபதியாகவுமு; இப்போதைய இராணுவத் தளபதியாவும் இருந்த சவேந்திர சில்வா, மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதித்துள்ளது
ஆகையால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மீது அமெரிக்க எதிர்வினைகள் உருவானால் அதில்குளிர்காய சிறிலங்காபோன்ற நாடுகள் முயலக்கூடும் என்பதையும் மறுப்பதற்குஇல்லை. ஏற்கனவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றஅதிகாரிகளுக்கு விசா எனப்படும் நுழைவிசை அனுமதிகளை வழங்கமுடியாதென அமெரிக்கா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஏப்ரல் 25 இல் சிறிலங்காவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான விடயங்களையும் சிங்கள மஹாஜனதா மத்தியில் கன்னாபின்னா என கூறிகுட்டையைக்குழப்பி மீன்பிடிக்கராஜபக்சக்கள் முயலக்கூடும்.
நொண்டிக்குதிரைக்கு சறுக்கிய சாட்டாக சவேந்திர சில்வா தொடர்பான வோசிங்டனின் அறிவிப்பை அடுத்தே ஜெனிவாத்தீர்மானத்தில் இருந்து தாம் விலகியதாக கொழும்பு கூறியிருப்பதை அவதானிக்க வேண்டும்
எது எப்படியோ இலங்கை வரலாற்றிலேயே மிகக்கூடுதலாக 143 கட்சிகள் போட்டியிடத்தயாராக உள்ள தேர்தலில் இந்தவிடயமும் சும்மா கிடைந்த அம்மையாருக்கு கிடைக்கும் அவலாக மாறக்கூடும்.
சிறிலங்கா தேர்தல்களத்தைப்பொறுத்தவரை அந்தக்களத்தை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில் தற்போது அரசியல்கட்சிகள் தீவிரப்படுகின்றன.
இதனை மையப்படுத்தி கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுவருகின்றன. தொகுதிப்;பங்கீடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது.
இதற்கிடையே எதிர்வரும் தேர்தல்களததில்; பெரும் இழுபறிகளை எதிர்நோக்கும் ஐக்கிய தேசியக்கட்சியில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நேற்றிரவு டுபாயக்கு பயணமாகியுள்ளார்.
யானைமுகாமின் தேர்தல் செலவுகளுக்காக டுபாயில் உள்ள ஐ.தே.கவின் ஆதரவாயர்களிடம் கையேந்துவதற்காக மனிதர் கொரோ அச்சத்தையும் துச்சமாக்கி டுபாய் சென்றிருக்கிறார்.
நேற்று காலைதான் அவர் டுபாய் செல்ல இருந்தாலும் இறுதி நேரத்தில் அவரது பயணம் மீளெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது எனினும் மீண்டும் அவர் நேற்று இரவுபயணமாகியுள்ளார்.
ஐ.தே. கவை பொறுத்தவரை எட்டு தசாப்த வரலாற்றைக் கொண்ட அதன் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. கட்சியும் ஏறக்குறைய இரண்டாகப் பிளவுபட்ட தோற்றப்பாடு உரவாகிள நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐ.தே.க யானை சின்னத்தில் போட்டியிடும் என ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எதிர்க் கட்சி தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய அணியொன்றை உருவாக்கி ஐ.தே.க வில் ஏற்கனவே அங்கம் வகித்த சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தானே யானைகளின் பொறுப்பாளர் என்ற வகையில் ரணில் டுபாய்க்கு பறந்தாலும் அங்குள்ள ஆதரவாளர்கள் சஜித்துக்கு பச்சைக்கொடிகாட்டினால் ரணில் வெறும் கையுடன் திரும்பக்கூடும்.
ஆனால் சஜித் எனவும் ரணில் எனவும் இருக்ககூடிய இந்த இரண்டு அணிகளிலும் யானைகளின் பிரியமான வேட்பாளர்கள் நம்பிக்கையீனம் கொண்டால் மறுபுறத்தேஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிகளின் கூட்டணி குறிப்பிடத்தக்க அறுவடையை பெறக்கூடும்.
இந்தஅறுவடை மூன்றிலிரண்டு பெரும்பான்மையாக இருக்குமா? இல்லையா என்பதையும் தமிழர்களின் கட்சி உட்பட்ட எதிரணி முகாம் தான் தீர்மானித்துக்கொள்ளக்கூடும். அதிலும் ஐ.தே.க வின் பொறுப்பு மிக அதிகமானதாகும்.
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 05 Mar 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.