வீட்டில் இருப்போம்! உயிர்களை காப்போம்!!

  • Prem
  • March 27, 2020
80shares

கொரோனா வைரஸ் இந்த கண்ணுக்குத்தெரியாத உலகப்பந்தின் வழமையான இயங்கியலை முடக்கிவிட்டது. எல்லா நாடுகளும் மிகப்பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன.

இந்த கொடிய நுண்ணுயிரியை ஒழித்துவிட மருத்துவ உலகம் போராடுகிறது. ஆயினும் சில நாடுகளில் வைரஸ் பரவல்தீவிரம் பெற்றுள்ளது.

அதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட சமூகவிலகல் மற்றும் தனிமனிதர்களுக்கு இடையிலான இடைவெளி விதிகளை மக்கள் முறையாக பேணாத ஒரு நிலைமை என கூறப்படுகிறது.

பொறுப்புடமை சார்ந்து சமூக இடைவெளி மற்றும் தனிமனிதர்களுக்கு இடையிலான இரண்டு மீற்றர் இடைவெளியை இறுக்கமாக பேணவேண்டிய கடப்பாடு மக்கள் எல்லோருக்குமே உரியது.

கொரோனா வைரஸ் போன்ற கொடியகொள்ளை நோய்பரவலில் Mathematical Epidemiology எப்பிடிமிஜோலஜி எனப்படும் ஒரு கணிதமுறையின் படி இந்த கோவிட்- 19 பரவலுக்கும் ஒரு கணித முறை உண்டு.

வைரஸ் தொற்றை காவிச்செல்லக்கூடிய தனிநபர் ஒருவர் அறிந்தோ அறியாமலோ தனக்குரிய சமூக இடைவெளியை பேணத்தவறி இன்னும் ஒரிருவருக்கு கடத்தக்கூடிய வைரஸ் அவர்கள் ஊடாக ஒன்று பத்தாக பத்துநூறாக பல்கிப்பெருகும் அபாயம் உள்ளது.

உதாரணமாக கொரோனா தொற்றுடைய ஒருவர் ஒருவார காலத்துக்கு தனது சமுக இடைவெளியை பேணினால் அவரால் 6 வாரங்களில் இந்த சமுகத்தில் 1093 தொற்றுக்களை குறைக்கமுடியும்.

மறு தலையாக இதனை நோக்கினால் சமுக இடைவெளியை பேணிதா ஒரே ஒரு தொற்றாளர் ஒருவரால் 6 வாரகாலத்தில் 1093 தொற்றுக்களை ஏற்படுத்த முடியும்.

இதேபோல தொற்றாளர் ஒருவர் ஆகக்குறைந்தது 33 வீத சமுக இடைவெளியை மட்டும் பேணினால் கூட அவரால் 6 வாரங்களில் ஆகக் கூடுதலாக 127 தொற்றுக்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் அதாவது 966 தொற்றுக்களை தவிர்த்து பெரு அவல நிலையை தவிர்க்க முடியும்.

ஆகமொத்தம் கொரோனா வைரஸ் பரவலை தாமதப்படுத்தும் பொறிமுறை மனிதர்களின் கைகளில் அதுவும் சராசரியாக ஆறடி தூரத்தில் அல்லது 2 மீற்றர் இடைவெளியில் தான் உள்ளது.

ஆகையால் சொற்ப நாட்களுக்காவது அத்தியாவசியற்ற சந்தடிமிக்க தொடர்பாடலை குறைப்போம் நமக்கு நாமே சமூக விலகல் தார்மீகத்தை கடைப்பிடிப்போம். மனிதகுல நாசகாரியை ஒழிக்க அனைவரும் ஒன்றாக துணைநிற்போம்.

வீட்டில் இருப்போம்! உயிர்களைகாப்போம்!!

Stay home, Save lives

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து