முரளியின் தடுமாற்றம் - சிக்கலின் பின்னணியில் யார்?

742shares

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் யுத்தம் தொடங்கிய காலம் முதல் இந்திய கிரிக்கெட் அணியை தான் ஆதரித்து வந்தனர். இலங்கை தமிழ் மக்கள் இலங்கை அணியை பார்க்க இந்திய அணி இரசிகர் என்று பெருமிதமடைந்தனர்.

இருப்பினும் இலங்கை அணியில் முரளிதரன் என்ற தமிழன் விளையாட வந்ததன் பின்னர் இலங்கை அணியை விரும்பத் தொடங்கினர். ஒரு தமிழன் விளையாடுகிறான் என்று பெருமிதமடைந்தனர். தமிழக தமிழர்கள் கூட பெருமைப்பட்டனர். அவுஸ்ரேலியா முரளிதரனுக்கு எதிராக செயற்பட்ட போது அர்ஜீன ரணதுங்கவும் தமிழர்களும் முரளிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

மெல்ல மெல்ல இலங்கை அணியின் இரசிகர்களாக தமிழர்கள் மாறினர். ஆனால் முரளிதரனோ உலக கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்த போது தமிழில் பேசவே தயங்கினார். தமிழில் பேசினால் இலங்கை அணியில் இருந்து ஓரம்கட்டப்படுவார் என அஞ்சினார். அவர் தமிழில் பேசுவதை அவமானமாக கருதினார். இதனால் ஊடகங்களுக்கு தமிழில் பேட்டி கூட வழங்க மறுத்து விட்டார்.

இவ்வாறு உலக கிண்ணம் வென்ற பின்னர் வெற்றியில் திளைத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு முரளிதரன் கொடுத்ததோ ஏமாற்றம்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு மாறாக தமிழன் என்று சொல்லி தலை குனிந்து வாழ்வதா என முரளிதரன் எண்ணினார். முரளிதரன் அன்றிலிருந்து தமிழர்களில் இருந்து அந்நியப்பட்டு வாழத் தலைப்பட்டார்.

போரினால் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும் என்று கூறுகின்ற முரளிதரன் இன்று வரை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகவோ தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தம் தொடர்பிலோ எப்படி திறந்தார் வாயை - காணாமல் போனவர்களின் உறவுகள் பிரித்தானிய பிரதமரை தவறாக வழிநடத்துகிறார்கள் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு திருப்ப திருப்ப வலியுறுத்தி கூறுகிறார்கள் என காணாமல் போனவர்களின் உறவுகளை கொச்சைப்படுத்தினார். இன்று தனது படத்திற்கு தடைகள் ஏற்படும் போது தான் யுத்தத்தின் கொடுமைகளும் வலியும் அவருக்கு தெரிகின்றது.

அன்று இலங்கை அணியில் இருந்து தமிழில் பேசி இருந்தாலும் இலங்கை மக்கள் அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் முரளிதரன் தனக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழை தவிர்த்து விட்டார். தமிழில் பேசினால் தரக்குறைவு என்று தான் தமிழை தவிர்த்து வந்தார். இன்று தனது படம் வெளியில் வரவேண்டும் என்பதற்காக வலி தனக்கு தெரியும் என்கிறார்.

முரளிதரன் இலங்கையில் பிறந்து இலங்கையில் வாழ்ந்தாலும் யுத்தத்தின் வடு பற்றி தனது படத்திற்கு சிக்கல் வரும் வரை எதுவும் பேசவில்லை. ஆனால் யுத்தத்தில் தமிழரின் தரப்பு பல தவறுகளை இழைத்ததாக பிரித்தானிய பிரதமர் உட்பட வெளிநாட்டு தலைவர்களுக்கு எடுத்துரைப்பதில் தீவிரமாக செயற்பட்டவர்.

இன்று தனது கருத்துக்கள் திரிவுபடுத்தப்படுவதாக குறிப்பிடும் முரளிதரன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வரும் போது - அப்போது ஏன் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடவில்லை. மௌனம் சம்மதம் என்பதற்காகவா?, மலையக தமிழர்களை விட இலங்கை தமிழர்களுக்கு அதிகளவு செய்வதாக கூறும் முரளிதரன் கிளிநொச்சி மாவட்டத்திலே 50 ஏக்கர் காணியை விளையாட்டு மைதானம் அமைக்க என்று எடுத்தார். ஆனால் அந்தக் காணியை அவர் என்ன செய்தார் என்பதை கூற முடியுமா?

பத்தாயிரம் முன்னாள் போராளிகளுக்கோ அல்லது யுத்தத்தால் அங்கவீனமடைந்தவர்களுக்கோ முரளிதரன் செய்த உதவி என்ன?, தான் பின் தங்கிய குடும்பம் ஒன்றில் இருந்து வந்தவன் என்று குறிப்பிடும் முரளிதரன் வடக்கிலோ, கிழக்கிலோ, மலையகத்திலோ இருக்கின்ற கிரிக்கெட் வீரர்களை தேசிய அணியில் இணைக்க முரளிதரன் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?, வழங்கிய பயிற்சிகள் என்ன? இப்படியான பல கேள்விகள் அவரிடம் இருக்கிறது. இவற்றுக்கு விடைகளை தேடினால் முடிவில்லாத முற்றுப்புள்ளியாகவே இருக்கும்.

போரில் முதலாவது பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழி மலையக மக்கள் தான் என்பது விஜய்சேதுபதி நடிக்கும் தனது சொந்த கதைக்கு எதிர்ப்பு மூலம் முரளிதரனுக்கு தெரியவந்தது வரவேற்க கூடிய விடயம். தனது தந்தை தனது ஏழாவது வயதில் வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருந்தோம். ஆதலால் இங்கு இவர் தந்தை யாரால் வெட்டப்பட்டார் என்பதை கூறுவாரா?, சொந்தங்கள் பலர் பலியானார்கள் விடுதலைப் புலிகளாலா? இல்லை இராணுவத்தாலா? என்பதை முரளிதரன் ஏன் வாய் திறக்கவில்லை.

பள்ளி மாணவர்களான தனது நண்பர்கள் காணாமல் போனார்கள் என்றால் அவர்கள் யாரால் காணாமல் போனார்கள், எப்படி காணாமல் போனார்கள் என்பதை முரளிதரன் வாய் திறக்கவில்லை.

விடுதலைப்புலிகள் காலத்தில் பிள்ளைகள் பாடசாலை சென்றால் திரும்பி வருவது நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த நிலையை நாங்கள் மாற்றி இருக்கிறோம் என்று அரசு சொல்வதைத் தான் முரளிதரன் சொல்ல வருகின்றாரா? என்ற கேள்வி எழுகின்றது.

அவரின் அறிக்கையில் அவர் யாரைக் குறிப்பிடுகின்றார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. முரளிதரன் இதுவரை யாராவது தமிழ் கட்சிகளுடன் பேசி இருக்கின்றாரா? இல்லை - இன்று முரளிதரனுக்கு சிக்கல் எழ வேறு யாரும் காரணமில்லை முரளிதரனே காரணம்.

நன்றி - தமிழ் தந்தி

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

விமான நிலையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தரையிறங்கவுள்ள 15 விமானங்கள்! விபரம் வெளியானது

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்

மரணித்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது - இலங்கை அரசாங்கத்திற்கு வந்த முக்கிய தகவல்